கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: படகுகள் மூலம் கிராம மக்கள் வெளியேற்றம்

கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர்.கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டும்.
கரையோர பகுதிகளில் உடைப்பை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் கிராம மக்கள்.
கரையோர பகுதிகளில் உடைப்பை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் கிராம மக்கள்.
Published on

சீர்காழி:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வரும் உபரி நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்தஉபரி நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நீரின் அளவும் வேகமும் குறையவில்லை. கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

திட்டு கிராமங்களில் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை படகின் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர். மேலும் படகுகள் செல்ல முடியாத இடத்தில் உள்ள மக்கள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தங்கள் உடமைகள் மற்றும் குழந்தைகள் சுமந்து கொண்டு கிராமத்தை விட்டு கரையேறி வருகின்றனர்

பாதிக்கப்பட்ட மக்களு க்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை விட்டு நிவாரண முகங்களுக்குச் செல்ல மறுத்து மக்கள் கரையிலேயே பந்தலமைத்து காத்துள்ளனர் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உணவு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படும் பொழுது தங்கள் கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com