என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில், மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்படியும், மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் குமரகுருபரன் பரிந்துரையின் பேரிலும் வட்டார சுகாதார துறை சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் மக்களைத் தேடி மருத்துவ கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காச நோய், தோல்நோய், கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மக்களை தேடி மருத்துவ நோயாளிகளுக்கு அடையாள அட்டை, மருந்து பெட்டகம் கடைசியாக வழங்கிய தேதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முட நீக்கியல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இம் முகாமில் ஒவ்வொரு பணியாளருக்கும் 40 வீடு வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து மணியிருப்பு கிராமத்தில் 252 வீடுகள், சேத்திருப்பு 136 வீடு, நாணல் படுகை188 வீடு, வெள்ளை மணல் 98 வீடு, காடுவெட்டி 186 வீடு ஆக மொத்தம் 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஒவ்வொரு நபரையும் விசாரணை செய்து பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இந்த முகாமில் மருத்துவர் மோகனா, நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சிவனேசன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ், சேத்திருப்பு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியன், மருத்துவ சாரா மேற்பார்வையாளர் தவபாலன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரம், இள ஞ்செழியன், வேங்கட பிரசாத், வசந்த், செவிலியர்கள் அனுராதா, இந்திரா, தொழில்நுட்ப வல்லுனர் உஷா, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கொடிமரம் அருகே எழுந்தருளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.
    • பசு மாடு மற்றும் கன்று சிறப்பு பூஜைகள் செய்து கோபூஜை வழிபாடு நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகும்.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது, முன்னதாக கொடிமரம் அருகே எழுந்தருளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

    பின்னர் கொடிமர நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்று சிறப்பு பூஜைகள் செய்து கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் பிரம்ம தீர்த்த குளக்கரை அருகே உள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெ ற்றது.

    • தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
    • தீ விபத்தில் வீட்டை இழந்த ரவிச்சந்திரன் மனைவி முத்துலட்சுமியிடம் நிவாரண உதவி வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே தற்காஸ் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவரின் குடிசை வீடு, வீட்டிற்குள் உள்ள மின் வயரிலிருந்து கசிந்த மின்சாரத்தால் தீப்பொறி வெளியேறி கூரையில் பட்டு தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது.

    குடிசை வீடு எரிந்து சேதமடைந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி- எம்.எல்.ஏ வழங்கினார்தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தற்காஸ் கிராமத்துக்கு நேரில் வந்து தீ விபத்தில் வீட்டை இழந்த ரவிச்சந்திரன் மனைவி முத்துலட்சுமியிடம் நிவாரண உதவி வழங்கினார்.

    சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், வி.ஏ.ஓ. பவளச்சந்திரன்,வருவாய் ஆய்வாளர் மருதுபாண்டி யன், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள் பாலு, பாலாஜி, சொக்கலிங்கம், செந்தில் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி:

    ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தும் வகையில்சீர்காழி பழைய பேருந்து நிலையம் - ஸ்டேட் பேங்க் முன்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் வீர.பாலு, பாலாஜி, சொக்கலிங்கம், செந்தில் முன்னிலை வகித்தனர்.

    நகர பொறுப்பாளர் ராஜ்மோகன் வரவேற்றார்.

    மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன் கோரிக்கை களை விளக்கி பேசினார்.

    மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன், நாகை மாவட்ட பொதுச்செயலாளர் ஆறு. பார்த்திபன், திருவாரூர் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழக விவசாயிகள் நல விழிப்புணர்வு சங்க தலைவர் ரவிச்சந்திரன், அகில பாரத மக்கள் அமைப்பு மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன், இந்து புரட்சி முன்னணி மாவட்டத் தலைவர் ஜோதி குமரன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சபரி லிங்கம், நகர செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான்.

    குத்தாலம்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் சில மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா பழக்கத்துக்கு மாணவர்கள் சிலரும் அடிமையாகும் அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி வருவது வேதனையளிக்கிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே கஞ்சா அடிக்கும் சம்பவம்சமூக ஆர்வலர்களை பெரும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாக சமீப காலமாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ தற்போது வெளியாகி சக பெற்றோரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் என் மகனை, சக மாணவர்கள் கஞ்சா சாப்பிட்டு விட்டு தாக்கியுள்ளனர். இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான். 3 ஆண்டுகளாக இது நடக்கிறது. பள்ளிக்கு வெளியே ஒதுக்கபுறமான ஒரு இடத்தில் இந்த செயல்கள் அரங்கேறி வருகிறது என்று மாணவனின் தந்தை பேசுவது போலவும், அதற்கு தலைமை ஆசிரியர், போலீசில் பல தடவை புகார் கூறினோம். அவர்கள் 3 முறை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் சென்று கஞ்சா குடிப்பவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று பதில் அளிப்பதாக அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

    இந்த வீடியோ மூலம் அந்த பள்ளியில் மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதாகவே அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து கஞ்சாவை பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர். இருந்தாலும் வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தடுக்க அதிரடி சோதனை பணியில் ஈடுபட வேண்டும். அப்படி வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருபவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை கடந்த பிரச்சனை என்பதால் இவ்விவகாரத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.
    • நிறுவனம் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் வராண்டா எக்ஸெல் என்ற நிறுவனம் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை எடுத்தனர். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் சசிகுமார், வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, கணிதத்துறை தலைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா, ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்வரி, உடற்கல்வித்துறை இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மூன்று கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • எம்.எல்.ஏ. தலைமை வகித்து புதிய மின்மாற்றிகளை இயக்கிவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களான தாழந்தொண்டி, தொடுவாய், தாண்டவன்குளம் ஆகிய மூன்று கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மின் சாதன பொருட்களும் பழுதடைந்து வந்ததால் தங்கள் பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடலோர கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தொடுவாய் உட்பட 3 கிராமங்களிலும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இதனை எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்து புதிய மின்மாற்றிகளை இயக்கிவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    விழாவில் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, சீர்காழி உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, விஸ்வநாதன், உதவி மின்பொறியாளர் சுபத்ரா, உதவி மின்பொறியாளர் முத்துக்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
    • கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் புதிதாக ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா வேளாண்மைஇணை இயக்குனர் சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணை தலைவர் அன்புசெழியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நெல்ஜெயராமன் மரபுசார் பாரம்பரிய விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகள் மானிய விலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    இதில் வேளாண் அலுவலர் சுப்பராயன், உதவிஅலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் தி.மு.க. இளைஞரணி ஒன்றியஅமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    • செப்டம்பர் முதல் வாரத்திலேயே மருதங்குடியில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம்.
    • அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் காத்துள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த மருதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் வாரத்திலேயே மருதங்குடியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் காத்துள்ளனர்.

    அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருதங்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அந்தியோதியா ரெயிலை சீர்காழியில் நின்று செல்ல ேகாரிக்கை விடுக்கப்பட்டது.
    • சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி ரெயில் நிலையத்திற்கு பயணிகள் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சீர்காழி ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

    ஆய்வு குழுவிடம் சீர்காழியில் ஒரு வழியில் தற்போது நின்று செல்லும் அனைத்து ரெயில்களும் இரண்டு வழித்தடத்திலும் நின்று செல்லவும், அந்தியோதையா ரயிலை சீர்காழியில் நின்று செல்லவும், பெட்டிகள் அடையாளம் காண வழிவகை செய்யவும், நிரந்தரமாக இரண்டாம் நடைமேடையில் மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கவும், சுகாதாரமான குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டது.

    முதல் நடைமேடையில் புதிய நிழல் குடை அமைக்கவும் பயணிகள் நல குழு உறுப்பினர்களிடம் விழுதுகள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஷரவணன் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

    இதேபோல் ரயில்வே துறை சேர்மேனிடம், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் சீர்காழியில் நின்று செல்லாத ரயில்கள் குறித்து சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் ஞானமணி, செயலாளர் வெங்கட்ராஜ், பொருளாளர் சத்யநாராயணன், எக்ஸ்ரே ராஜா, சேதுராமன் ஆகியோர் கோரிக்கை மனு அரித்தனர். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம.சிவ சங்கர், நகரத் தலைவர் சங்கர், பொறுப்பாளர் வெற்றிலை முருகன், சீர்காழி நகர வர்த்தக சங்கத்தை சேர்ந்த தில்லை நடராஜன் உள்ளிட்ட பலர்உடன் இருந்தனர்.

    • முன்னதாக காலை சிற்றுண்டி மைய சமையல் கூட புதிய கட்டிடத்தை ஆர்டி எம் ஏ.ஜானகி திறந்து வைத்தார்.
    • எம்.எல்.ஏ பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பராயன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி.கலைவாணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால், மேலாளர் காதர் கான், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுத்தர் ராஜ கணேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில் வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை பன்னீர்செல்வம் எம்எல்ஏ தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கினார்.

    முன்னதாக காலை சிற்றுண்டி மைய சமையல் கூட புதிய கட்டிடத்தை ஆர்டி எம் ஏ. ஜானகி திறந்து வைத்தார். விழாவில் கல்வித்துறை அதிகாரி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முழுமதி, ஜெயந்தி, முபாரக், ராஜேஷ், ராமு, பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் செந்தில் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.
    • விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் போலீசாரு க்கான மளிகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் வகையில் புதிய பல்பொருள் கேண்டீன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி, புதிய போலீஸ் கேண்டீனை ரிப்பன் வெட்டி காவலர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்த அவர், முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் போக்கு வரத்து போலீசாருக் புதிய கட்டிடத்தை டி.ஜி.பி. திறந்து வைத்தார்.

    இதைய டுத்து மயிலாடுது றையில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்கு றிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மயிலாடுதுறையில் விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை நகரில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் திறக்க பரிசீலிக்கப்படும் என்றார்.

    விழாவில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×