என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்.
கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் அவலம்
- செப்டம்பர் முதல் வாரத்திலேயே மருதங்குடியில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம்.
- அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் காத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த மருதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் வாரத்திலேயே மருதங்குடியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் காத்துள்ளனர்.
அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருதங்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






