என் மலர்
மயிலாடுதுறை
- அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடு துறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
- இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் விரைவு மிதிவண்டி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விரைவாக மிதிவண்டி இயக்குதல் போட்டி நடைபெற்றது.
இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியை சேர்ந்த 80மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 15வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ரோஸ்லின்மேரி முதலிடம் பெற்று ரூ.5ஆயிரமும், 17வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 11-ம் வகுப்பு மாணவி ஷமினாராகவி 2-ம் இடம் பெற்று ரூ.3ஆயிரமும், 12-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ் மூன்றாம் இடம் பெற்ற ரூ.2ஆயிரமும் பரிசுதொகையை பெற்றனர்.
மேலும் 15பேர் தலா ரூ.250பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடை நம்பி தலைமையில் நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வ ரிராஜசேகரன் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுதொகையையும் வழங்கினார்.
இதில் நகர்மன்ற துணை தலைவர் ம.சுப்பராயன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவில் உதவி தலைமைஆசிரியரும், உடற்கல்வி இயக்குனருமான எஸ்.முரளிதரன் நன்றிக்கூறினார்.
- சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
- குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதி மாதம் நான்காவது வெள்ளிக் கிழமைகள் தோறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 23-ந் தேதி (வெள்ளிகிழமை) மாற்றுத்தி றனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி அளவில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதால் சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போட்டோ 1, கைப்பேசிஎண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவரின் தந்தை ஒருவர் தலைமையாசிரியரிடம் கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
- குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.
அதன்படி சீர்காழி காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், டி. எஸ். பி. பழனிசாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொண்ட குழுவினர்.
இவ்வாறு 50 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கண்டனர். அப்போது சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு, புத்தூர் செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த நான்கு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.
- பழையார் கடற்கரையில் மீன் வாங்கி அதனை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
- பால் ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அடுத்த அரசூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சங்கர் (வயது42).
மீன் வியாபாரி. இவர் இன்று காலை பழையார் கடற்கரையில் மீன் வாங்கி அதனை தனது விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் .
அப்போது தாண்டவன் குளம் அருகே சென்றபோது பால் ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எந்த ஒரு தவறும் செய்ய மாட்டோம் என ஒப்புதல் கொடுத்து திருந்தி வாழ்வதாக கூறி வெளியே வந்தனர்.
- ஒரு வருட காலம் முடிவதற்குள் இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அந்தஉச்சிமேடு பகுதியை சேர்ந்த முக்கூட்டு முருகன் மற்றும் தென்னங்குடி பகுதியை சேர்ந்த சூர்யா.
இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
நன்னடத்தை பத்திரத்தின் கீழ் எந்த ஒரு தவறும் செய்ய மாட்டோம் என ஒப்புதல் கொடுத்து திருந்தி வாழ்வதாக கூறி வெளியே வந்தனர்.
இந்த நன்னடத்தை பத்திரத்தின் படி ஒரு வருட காலம் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
ஆனால் ஒரு வருட காலம் முடிவதற்குள் இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.
சீர்காழி போலீசார் அறிவுறுத்தலின்படி சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா உத்தரவின்படி இருவரையும் குற்றவியல் நடைமுறை சட்டம் 110 விதியின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், முக்கூ ட்டு முருகன், சூர்யா இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
- சாலை மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மணல்மேடு, கடலங்குடி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி அமைந்துள்ள மணல்மேடு கிராமத்துக்கு மயிலாடுதுறை, கடலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி நேரங்களில் காலை மற்றும் மாலை வேளையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் இன்று காலை வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் சாலை மறியல் செய்ய முடிவு செய்து 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பேரணியாக புறப்பட்டனர். தகவல் அறிந்து போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனால் தடுப்பையும் மீறி மாணவர்கள் முன்னோக்கி சென்று கல்லூரி அருகே வைத்தீஸ்வரன்கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து மாணவர்களுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்கள், அடிப்படை வசதிகோரி 5 மனுக்கள் என மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
- மாணவனுக்கு ரூ.23,000-க்கான காசோலையை தாய் சித்ராவிடம் கலெக்டர் வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 30 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 25 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 5 மனுக்களும், மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வாரக் காலத்திற்குள் அம்மாணவனுக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.23,000-க்கான காசோலையினை அவரின் தாயார்சித்ரா விடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் கலால் அர.நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
- நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் உள்ளிட்ட பலவகையான பொருட்களை கொண்டு இனிப்பு பலகாரங்கள் தயார் செய்தனர்.
- நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக்கொள்ள முடியும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் பயின்று வரும் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பு பயின்று வரும் அனைத்து துறை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு வகை வகையான இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் உள்ளிட்ட அனைத்து அறு சுவைகள் கொண்ட தின்பண்டங்களை அடுப்பு இல்லாமல் தயார் செய்து அசத்தி காட்டினர்.
இந்த உணவுப்பொ ருட்களை மாணவிகள் தயாரிப்பதற்கு அடுப்பின் உதவி இல்லாமலும், எண்ணெய்யை பயன்ப டுத்தாமலும் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு முறையில் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை, உளுந்து, பயறு உள்ளிட்ட மாவு பொருட்கள், காய்கறிகள், கீரைகள், இரும்பு சத்து மற்றும் அனைத்து வைட்டமின் அடங்கிய காய்கறிகள், தேங்காய், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பல வகை, வகையான இனிப்பு பலகாரங்களை தயார் செய்து கல்லூரியில் காட்சிக்கு வைத்தனர்.
இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டு ருசித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், பாரம்பரிய உணவு தானிய முறையில் பலவ கையான தின்பண்டங்களை தயார் செய்துள்ளோம் இவைகளை உண்பதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்திமற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக் கொள்ள முடியும்.
இந்த உணவுப் பொருட்களை தயாரிக்க நாங்கள் அடுப்புகளை பயன்படுத்தவில்லை.
இந்த சத்தான உணவுகளை தயார் செய்ய சூடு தேவையில்லை. எனவே இங்கு அடுப்பும் தேவையில்லை.
மிகக் குறைந்த செலவிலேயே தயாரிக்க கூடிய இந்த உணவு மிகவும் சிறந்த உணவு.ஊட்டச்சத்தும் அதிகம் நிறைந்தது என்றனர்.
- பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
- பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் குறுவட்ட அளவில் நடைப்பெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 307 மாணவ-மாணவிகள் கலந்துக் கொண்டு 217 மாணவ-மாணவிகள் அதிகப் போட்டிகளில் வெற்றிப்பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.
வெற்றிப்பெற்ற மாணவர்களையும் சாரண-சாரணியர் அமைப்பின் நீண்டக் கால சேவைக்கான மாநில விருதினை பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து பெற்று வந்துள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும் சாரண-சாரணிய ஆசிரியர் சுந்தர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், நிர்வாகக் குழுத் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் மற்றும் பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோரை பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.
- போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
- துண்டு பிரசுரங்களை வழங்கி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி காவல்துறை மற்றும் எல். எம். சி.மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சீர்காழி எம்எம்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரூபிசாந்தக்குமாரி தலைமை வகித்தார்.
பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் கிருபாகரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜய்அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டு போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விளக்கி கூறினார்.
பின்னர் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாணவ- மாணவிகள் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் சீர்காழி முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் தேசிய மாணவர் படை, சாரண-சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம், இளஞ்செஞ்சிலுவை அமைப்பு மற்றும் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் இளம்செஞ்சிலுவை அலுவலர் ஜோகன்னா நன்றிக கூறினார்.
- மாணவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
- ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சீர்காழி,:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் சேத்திருப்பு எஸ்.எம்.எஸ். நடுநிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் தொடக்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலு முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலு கூறுகையில், ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை மாணவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் ராசாத்தி தீபா, விஜயா, விஜயலட்சுமி, பிரேமா மற்றும் அங்கன்வாடி உதவியாளர் அஞ்சம்மாள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் விழாவினை ஆசிரியர் சந்திரன் கணேசன் ராஜேஷ்குமார் ஏற்பாடு செய்தனர்.
- தனக்கு சொந்தமான நிலங்களை கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டார்.
- தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீட்டில் இருந்து விரட்டியுள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 86). இவரது மனைவி சாரதாம்பாள் (76).
இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர்.
இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களை கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்து விட்டார்.
தனக்கென சிறிது நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையும் வைத்துக்கொண்ட தங்கசாமி, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் தங்கசாமியின் மகன்களில் ஒருவர் தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரை வீட்டில் இருந்து விரட்டியுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பூர் போலீஸ் நிலையம் மற்றும் அதிகாரிகளிடம் தங்கசாமி புகார் அளித்தார்.
4 மகன்கள் இருந்தும் யாரும் அவர்களை பராமரிக்க முன்வராத நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்து மனு கொடுக்க கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த வயதான தம்பதியினர், தங்களது வாழ்வாதாரத்திற்காக மகனிடம் இருந்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இல்லாவிட்டால் தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
இதையடுத்து, அந்த மனுவை உதவி கலெக்டருக்கு பரிந்துரைத்த கலெக்டர் லலிதா, அந்த மனுவின் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






