search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron Nutrient"

    • நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் உள்ளிட்ட பலவகையான பொருட்களை கொண்டு இனிப்பு பலகாரங்கள் தயார் செய்தனர்.
    • நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக்கொள்ள முடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் பயின்று வரும் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பு பயின்று வரும் அனைத்து துறை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு வகை வகையான இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் உள்ளிட்ட அனைத்து அறு சுவைகள் கொண்ட தின்பண்டங்களை அடுப்பு இல்லாமல் தயார் செய்து அசத்தி காட்டினர்.

    இந்த உணவுப்பொ ருட்களை மாணவிகள் தயாரிப்பதற்கு அடுப்பின் உதவி இல்லாமலும், எண்ணெய்யை பயன்ப டுத்தாமலும் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு முறையில் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை, உளுந்து, பயறு உள்ளிட்ட மாவு பொருட்கள், காய்கறிகள், கீரைகள், இரும்பு சத்து மற்றும் அனைத்து வைட்டமின் அடங்கிய காய்கறிகள், தேங்காய், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பல வகை, வகையான இனிப்பு பலகாரங்களை தயார் செய்து கல்லூரியில் காட்சிக்கு வைத்தனர்.

    இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டு ருசித்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், பாரம்பரிய உணவு தானிய முறையில் பலவ கையான தின்பண்டங்களை தயார் செய்துள்ளோம் இவைகளை உண்பதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்திமற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக் கொள்ள முடியும்.

    இந்த உணவுப் பொருட்களை தயாரிக்க நாங்கள் அடுப்புகளை பயன்படுத்தவில்லை.

    இந்த சத்தான உணவுகளை தயார் செய்ய சூடு தேவையில்லை. எனவே இங்கு அடுப்பும் தேவையில்லை.

    மிகக் குறைந்த செலவிலேயே தயாரிக்க கூடிய இந்த உணவு மிகவும் சிறந்த உணவு.ஊட்டச்சத்தும் அதிகம் நிறைந்தது என்றனர்.

    ×