என் மலர்
மதுரை
- பால் விலையை உயர்த்தக்கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் வெள்ள லூர், கோட்ட நத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி ஊராட்சி ஆகிய கிளை சங்கங்களின் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் வெள்ளலூர் விலக்கில் பால் விலையை உயர்்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சர்ச்சில், துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.
கோட்ட நத்தம்பட்டி பால் உற்பத்தி யாளர் சங்க தலைவர் கந்தப்பன் மற்றும் பல்வேறு கிளைகளின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துப்பா ண்டி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் அடக்கி வீரணன் ஆகியோர் பேசினர். பால் உற்பத்தியா ளர்களுக்கு தொடர்ந்து கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. மாட்டு தீவன விலை உயர்ந்து, பராமரிப்பு செலவு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
எனவே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பால் லிட்டருக்கு ரூ.40 விலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தீவன மூடை ஒன்றுக்கு ரூ.200 மானியத்தொகையை திரும்ப வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்ட்டது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் அவர்கள் தங்களது கோரிக்கையை குலவை யிட்டு வலியுறுத்தியது நூதனமாக இருந்தது.
- எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 3-ந் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி (5-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன்.
- மன உளைச்சலுக்கு ஆளான நான் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்தேன்.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவி ஒருவர் கடந்த மார்ச் 23-ந் தேதி மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பல்கலைக்கழக வராண்டாவில் நின்று கொண்டிருந்தபோது என்னை பார்த்து வரலாற்று துறை பேராசிரியர் சண்முக ராஜா, என்னை சாதியை சொல்லி திட்டியும், என் உருவத்தை கேலி செய்தும் பேசினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்தேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் சண்முகராஜா மாணவியை சாதியை சொல்லி திட்டியது உறுதியானதால் அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் சண்முகராஜா மீது மாணவிகள் தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- விருதுநகரில் இன்று மாலை பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை நடக்கிறது.
- ராம.சீனிவாசன் தலைமையில் 2000 பேர் பங்கேற்கின்றனர்.
மதுரை
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். இதன் அடிப் படையில் தேசிய அளவில் முதலாவதாக 'பி.எம்.மித்ரா' மெகா ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைய உள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. விருதுநகரில் சுமார் 1052 ஏக்கர் பரப்ப ளவில், ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பொதுமக்களிடம் வர வேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில், விருதுநகரில் பாத யாத்திரை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவி லில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரை ஆன்மீக பாதயாத்திரை நடைபெறு கிறது.
ராம.சீனிவாசன் தலை மையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் மெகா ஜவுளி பூங்கா தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்து வார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்த யாத்திரையில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் 200 கார்களில் விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலை மையில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபுராஜா, உசிலம்பட்டி மண்டல தலைவர் கீரிப்பட்டி வி. போஸ் மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் நாகராஜ், காளிதாஸ், ஓ.பி.சி. அணி வேல்முருகன், வெற்றி வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் செய்துள் ளனர்.
ராம சீனிவாசன் தலை மையில் நடைபெற உள்ள இந்த ஆன்மீக பாதயாத்திரை தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தும் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நாகமலை புதுக்கோட்டை முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
- போலீஸ் அதிகாரி வசந்தியை தனிப்படை போலீசார் தரதரவென இழுத்து சென்றனர்.
மதுரை
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வசந்தி வேலை பார்த்தார். அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டெய்லரிடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வசந்தி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரை போலீசார் கைது செய்வதில் மும்முரம் காட்டினர்.
இதனை தொடர்ந்து வசந்தி தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கோத்தகிரி ஓட்டலில் வசந்தி பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த நிலையில் வசந்தி சாட்சிகளை மிரட்டிய தாக குற்றச்சாட்டு வெளி யானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் வசந்தி இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து வசந்தி தப்பிக்க முயன்றார். போலீசார் குண்டு கட்டாக வசந்தியை தூக்கி தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, வசந்தி சாட்சி களை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தியை தனிப்படை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குறும்பட போட்டியில் மதுரை மாநகர போலீசுக்கு முதல் பரிசு கிடைத்தது.
- முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கூடுதல் இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 45 குறும்பட வீடியோக்கள் பங்கேற்றன.
அவற்றை காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்தது. இதில் முதல் பரிசாக ரூ. 35 ஆயிரத்தை மதுரை மாநகர காவல் துறையினர் பெற்றனர். 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்தை கோவை போத்தனுர் ெரயில்வே காவல்துறையினரும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் மாவட்ட காவல் துறையினரும் பெற்றனர்.
பரிசு தொகையையும், சான்றிதழையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் வழங்கினார். முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.
- மதுரையில் அரசு ஊழியர் திடீரென இறந்தார்.
- தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). இவர் மதுரை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தார்.
அவர் நேற்று இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்து பணிகளை தொடங்கிய போது சண்முகவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''கருவூலத்துறை சர்வரில் கோளாறு இருப்பதால் பில் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து கருவூலத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஆனாலும் சர்வர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக சண்முகவேல் இரவு முழுவதும் வேலை செய்ய நேரிட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரண மாக அவர் மாரடைப்பால் உயிர் இழக்க நேரிட்டது என்றனர்.
- வாலிபரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஆத்திகுளம், அங்கையற்கண்ணி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம் (வயது 24). இவரது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அதற்கான இறுதிசடங்குகளை கே.புதூர், பாண்டியன் நகரை சேர்ந்த அந்தோணி (52) என்பவர் செய்தார்.
பின்னர் அவர் பேசியதற்கு மேல் கூடுதலாக பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கும், ஸ்ரீ விஷ்ணு ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி தனது மகன்களுடன் சேர்ந்து விஷ்ணுராமை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் ஸ்ரீவிஷ்ணுராம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அந்தோணி மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.
- அரசு மருத்துவமனையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலூர்
மேலூர் அரசு மருத்துவ மனையில் கண் நீர் அழுத்த நோய் சிறப்பு கண் மருத்துவ முகாம் மேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த முகாமை மேலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண் மருத்துவர் தீபா வரவேற்றார். மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோ சனைகளை வழங்கினார்.
இந்த முகாமில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கண் பற்றி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து கண்ணில் உள்ள புறை உள்ளவர் களுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆபரே ஷன் செய்வதற்கு பரிந்துரை செய்தனர். நிகழ்ச்சியில் மருத்து வர்களும், முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவிகளும், செவிலியர் கண்காணிப்பா ளர், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் கலாமணி நன்றி கூறினார்.
- மேலூர் தொகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- நகர செயலாளராக சரவணன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.
மேலூர்
மேலூர் தொகுதி தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் பரிந்துரையின் பேரில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலூர் நகர செயலாளராக எஸ். சரவணன் 2-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவராக ஜெயம் மனோகர், பொருளாளராக அபுதாகிர், துணைச் செயலாளராக பாண்டி முருகன், லட்சுமி காந்தன், பத்ரி நாராயணன், கற்பகம் மாவட்ட பிரதிநிதிகளாக ரவி, சதீஷ்குமார், முரளி கிருஷ்ணன், திவாகர்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக விட்டி கண்ணன், அவை தலைவராக சிவானந்தம், பொருளாராக வெள்ளையன், துணைச் செயலாளர்களாக புகழேந்தி, சிவக்குமார், ராஜன், முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகளாக பாஸ்கரன், கோவிந்தராஜன், கலையரசன், ஜானகிராமன் ஆகியோரும், மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளராக காளீஸ்வரன், அவைத்தலைவராக பாலசுப்பிரமணியம், ஒன்றிய பொருளாளராக முருகேசன், துணைச்செயலாளர்களாக தியாகராஜன், கண்ணப்பன், ஆண்டிச்சாமி, சின்னம்மாள், மாவட்ட பிரதிநிதிகளாக முனிச்சாமி, பாண்டிபிரபு, முத்துச்சாமி, கருப்பையா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.வல்லாளப்பட்டி பேரூர் செயலாளராக ஆறுமுகம், அவை தலைவராக மணிகண்டன், பொருளாளராக விஜயகுமார், துணைச்செயலாளர்களாக பாண்டித்துரை, பிரபு, முத்துமணி, கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகளாக கார்த்திக், பாண்டிசாமி, பழனிச்சாமி, பாண்டி ஆகியோரும், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளராக பரசுராமன், அவைத் தலைவராக சின்னையா, பொருளாளராக அருணகிரி, துணைச் செயலாளராக கண்ணன், சசிகுமார், முருகன், புவனேசுவரி, மாவட்ட பிரதிநிதிகளாக ராஜமாணிக்கம், ஜபுர் அலி, சங்கர், கனகராஜ் ஆகியோரும் கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக பட்டூர் சந்தன பீர் ஒலியுல்லா, அவைத்தலைவராக ரவி, பொருளாளராக சின்னையா, துணைச் செயலாளராக நிறை செல்வம், முருகேசன், அய்யனார், முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதியாக சேமராஜ், குமார், செல்லையா, ஆண்டி எட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மர்மநபர்கள் வழிப்பறி செய்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது மர்ம நபர்கள் மறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை மறித்தனர். 2 சம்பவங்கள் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மேலூர் தாலுகா அலுவலக முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைபடுத்தவும், கருணைப் பணி நியமனங்களை கருணையோடு காலதாமதமின்றி வரன்முறை செய்யவும், தகுதிகாண் பருவத்திற்கான விதிமுறைகளை தளர்வு செய்யவும், கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளை 3 ஆண்டுகளாக குறைத்திடவும், மக்கள் தொகை பரப்பளவு அடிப்படையில் கிராமங்களை பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்கிடவும், பயணப் படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரியும், நகர நிலவரி திட்ட கணக்குகளை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அளித்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.






