லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மர்மநபர்கள் வழிப்பறி செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது மர்ம நபர்கள் மறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை மறித்தனர். 2 சம்பவங்கள் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com