கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மேலூர் தாலுகா அலுவலக முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

 மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைபடுத்தவும், கருணைப் பணி நியமனங்களை கருணையோடு காலதாமதமின்றி வரன்முறை செய்யவும், தகுதிகாண் பருவத்திற்கான விதிமுறைகளை தளர்வு செய்யவும், கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளை 3 ஆண்டுகளாக குறைத்திடவும், மக்கள் தொகை பரப்பளவு அடிப்படையில் கிராமங்களை பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்கிடவும், பயணப் படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரியும், நகர நிலவரி திட்ட கணக்குகளை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அளித்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com