குறும்பட போட்டியில் மதுரை மாநகர போலீசுக்கு முதல் பரிசு

குறும்பட போட்டியில் மதுரை மாநகர போலீசுக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.
குறும்பட போட்டியில் மதுரை மாநகர போலீசுக்கு முதல் பரிசு
Published on

மதுரை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கூடுதல் இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 45 குறும்பட வீடியோக்கள் பங்கேற்றன.

அவற்றை காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்தது. இதில் முதல் பரிசாக ரூ. 35 ஆயிரத்தை மதுரை மாநகர காவல் துறையினர் பெற்றனர். 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்தை கோவை போத்தனுர் ெரயில்வே காவல்துறையினரும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் மாவட்ட காவல் துறையினரும் பெற்றனர்.

பரிசு தொகையையும், சான்றிதழையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் வழங்கினார். முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com