அரசு மருத்துவமனையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம்

அரசு மருத்துவமனையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோசனைகளை வழங்கினார்.
அரசு மருத்துவமனையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம்
Published on

மேலூர்

மேலூர் அரசு மருத்துவ மனையில் கண் நீர் அழுத்த நோய் சிறப்பு கண் மருத்துவ முகாம் மேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த முகாமை மேலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண் மருத்துவர் தீபா வரவேற்றார். மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோ சனைகளை வழங்கினார்.

இந்த முகாமில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கண் பற்றி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து கண்ணில் உள்ள புறை உள்ளவர் களுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆபரே ஷன் செய்வதற்கு பரிந்துரை செய்தனர். நிகழ்ச்சியில் மருத்து வர்களும், முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவிகளும், செவிலியர் கண்காணிப்பா ளர், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் கலாமணி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com