என் மலர்
மதுரை
- மானாமதுரையில் மட்டும் குலாலர் தெருவில் 4 தலைமுறையாக 350-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது.
- டிரம்ஸ் சிவமணி போன்ற பக்க வாத்திய கலைஞர்களும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக்கலைஞர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் உலக புகழ் பெற்றதாகும். இந்தியாவில் கடம் இசைக்கருவி மானாமதுரை மண்ணில் இருந்து மட்டுமே இன்றைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இசை வித்வான்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தற்போது மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு கிடைக்கும் உறுதி மிக்க மண்ணால் எளிதில் உடையாத வகையில் மண்பாண்ட பொருட்கள் ஆண்டு முழுவதும் தயார் செய்யப்பட்டு வருகிறது .
மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. மானாமதுரையில் குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியிலும் திருப்புவனம், வயல்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்டம் தயார் செய்யும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
மானாமதுரையில் மட்டும் குலாலர் தெருவில் 4 தலைமுறையாக 350-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது. ஆண்டு முழுவதும் விதவிதமான மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர்.
இதில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது கிளியான் சட்டி எனப்படும் தீபவிளக்குகள் ஆகும். அடுத்து மண்பானை மற்றும் கூஜா கோடைகாலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பூஞ்ஜாடிகள், தொட்டிகள் அதிகம் செய்யப்படுகிறது
மண்பானைகள் மட்டுமின்றி களிமண் பொம்மைகள், சரவிளக்குகள், துளசி மாடங்கள், விநாயகர் சிலை, தீப விளக்குகள், கொலு பொம்மைகள், அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், ஊறுகாய் ஜாடி என விதவிதமாக தயாரிக்கின்றனர்.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மண் பானை, குடிநீர் ஜாடிகளை அதிகளவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கர்நாடக இசைக்கலைஞர்கள் அதிகமாக பயன்படும் இசைக்கருவியான கடம் மானாமதுரையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிரபல கர்நாடக கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயக்ராம் மானாமதுரை மண்கடத்தை ஐ.நா. சபைபில் வாசித்து மானாமதுரைக்கும் ஆதி இசைகருவியான கடத்திற்க்கு புகழ் சேர்த்தார்.
டிரம்ஸ் சிவமணி போன்ற பக்க வாத்திய கலைஞர்களும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக்கலைஞர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர்.
தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமாகவும் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலமும் மண்பானைகளை சந்தைப்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெருமை வாய்ந்த மானாமதுரை மண்பாண்டத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது மண்பாண்ட தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்களை தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்த்து வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிலாளர் சங்க தலைவர் லட்சுமணன் கூறுகையில், களிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சேர்த்து தரமான மண்பாண்ட பொருட்களை எங்கள் பகுதியில் செய்து வருகிறோம். தனித்துவம் வாய்ந்த மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அரசு சார்பில் உள்ள வனத்துறை, தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும், வளர்க்கப்படும் மரகன்றுகளை மண்வளத்தை அழிக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் சிறிய பூ தொட்டிகளில் வளர்க்க வேண்டும். இதற்கு அரசு உத்தரவிடவேண்டும்.
முன்பு மானாமதுரை கடத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது புவிசார் குறியீடு கிடைத்தது மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
- மதுரையில் நாளை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர்ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர்ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி வாழ்த்து தெரிவிப்பது தொடர்பாகவும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து நாளை (2-ந்தேதி) மாலை 6 மணிக்கு பனகல் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அவைத்தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்குகிறார்.
நான் (செல்லூர் ராஜூ) கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறேன். எனவே கூட்டத்தில் மாவட்ட, தொகுதி, பகுதி, வட்ட நிர்வாகிகள், பேரவை, இளைஞரணி, மகளிரணி, பாசறை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 6-ந் தேதி வரை நடக்கிறது.
- 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.
மதுரை
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுத பாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலை யில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூக்கூடாரம் நிகழ்ச்சியும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.
விழாவில் நாளை (2-ந் தேதி) மூலவருக்கு நேர்த்திக்கடன் பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர். வருகிற 5-ந் தேதி உத்திர தினத்தன்று காலை 4 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், ருத்ர ஜெப விசேஷ அபி ஷேக ஆராதனை, தங்க கவச சாத்துப்படி நடக்கிறது. அன்று இரவு பூ பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 6-ந் தேதி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.
விழா நடக்கும் 7 நாட்களி லும் தினசரி காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- மதுரையில் திருடு போன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.
- போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.
மதுரை
மதுரையில் செல்போன் திருட்டு தொடர்கதையாக நடந்து வருகிறது. இதன் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), அரவிந்த் (வடக்கு), கவுதம் கோயல் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக திருடுபோன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.
தல்லாகுளம் சரகத்தில் மட்டும் 106 செல்போன்களும், அண்ணாநகரில் 64 செல்போன்களும், திடீர் நகரில் 42 செல்போன்களும் மீட்கப்பட்டது. இதே போன்று செல்லூர்-17, மீனாட்சி அம்மன் கோவில் சரகம்-13, அவனியாபுரம்-9, திருப்பரங்குன்றம்-4, தெற்கு வாசல்-6 செல்போன்களும் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
- இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தனியார் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கப்பலூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி கப்பலூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100ரூபாயும், 24மணி நேர பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.3280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.160-ம் 24மணி நேர பயன்பாட்டிற்கு ரூ.240-ம், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.5 ஆயிரத்து 295 ஆகவும், 2 அச்சு கனரக வாகனம், பஸ்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.335, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.500, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.11095 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
3 அச்சு கனரக வாகனங்க ளுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.365-ம், 24 மணி நேர பயன்பாட்டு கட்டணம் ரூ.545-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.12,105 ஆகவும், 4 முதல் 6 அச்சு வரையிலான கனரக வாகனங்கள் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.520-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.785-ம், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.17 ஆயிரத்து 400 ஆகவும் உயர்த்த ப்பட்டுள்ளது.
7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.635-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.955-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.21 ஆயிரத்து 180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்களும், வாடகை வாகன ஓட்டிகளும், கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பெட்ேரால், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் ேபாக்குவரத்து செலவு கடுமையாக அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- அரவை கொப்பரை அரசு கொள்முதல் மையங்கள் இன்று திறக்கப்பட்டது.
- கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.
மேலூர்
மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி வட்டார ங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. சமீப காலமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவு காரணமாக தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு கொள்முதல் கொப்பரை மையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை அரவை கொப்பரை ஒரு குவிண்டனுக்கு ரூ. 10 ஆயிரத்து 890 என்று குறைந்தபட்ச ஆதார விலையை அடிப்படையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அரவை கொப்பரைக்கான கொள்முதல் இலக்கு தலா 100 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது.கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்குரிய தொகையானது எவ்வித இடைத்தரகும் இன்றி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொப்பரையை விற்பனை செய்ய உள்ள விவசாயிகள் தங்களின் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களுடன் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சென்று இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்துள்ள இத்தருணத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- தென் மாவட்டங்களுக்கு பண்டிகை சீசன் சிறப்பு ெரயில்கள் விடப்படுகிறது.
- தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகை கள் வருகின்றன. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்களை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்து உள்ளது.
அதன்படி தாம்பரம்- நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படுகின்றன. 4-ந் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்படு கிறது. அது மதுரைக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும். மதுரை யில் இருந்து புறப்படும் ெரயில் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் 5-ந் தேதி நெல்லையில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் செல்லும். இது மதுரைக்கு இரவு 8.35 மணிக்கு வரும்.
தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படு கின்றன. இது 6-ந் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்ப ரத்தில் இருந்து புறப்படும். மதுரைக்கு நள்ளிரவு 11.45 மணிக்கு வரும்.
அதன் பிறகு நாகர்கோவி லுக்கு அடுத்த நாள் அதி காலை 3.35 மணிக்கு செல்லும். மறு மார்க்கத்தில் 7-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்படும் ெரயில், எழும்பூருக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும். இந்த ெரயில் மதுரைக்கு இரவு 8.55 மணிக்கு வரும்.
12-ந் தேதி நாகர்கோவி லில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ெரயில், தாம்ப ரத்துக்கு அடுத்த நாள் காலை 4.10 மணிக்கு செல்லும். 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் .
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- மேலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
மேலூர்
மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி இடையே அமைந்துள்ளது கருங்காலக்குடி. இங்கு 24 மணிநேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க காலத்தில் இருந்தே, கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. மேலும் கருங்காலக்குடியில் இருந்து அவசர மற்றும் விபத்து காய சிகிச்சைகளுக்கு மதுரைக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்கு இந்த 108 வாகனம் மிகுந்த உதவியாக விபத்தில் சிக்கிய மக்களின் உயிர் காக்கும் பயனுள்ள வாகனமாக செயல்பட்டு வந்தது.
மேலும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து காய சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டுமென ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிகாரிகளிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளனர். தற்போது இருக்கும் வசதியையும் குறைக்கும் வகையில் இங்கு இயங்கி வந்த 108 அவசர சிகிச்சை வாகனத்தை அவசர கதியில் தும்பைப்பட்டிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்திரவிட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு வாகனம் தும்பைப்பட்டிக்கு சென்றுவிட்டது. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் அதிகாரிகளிடம் இங்கிருந்து மாற்றம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மீண்டும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.
- ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
- தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புது நெடுங்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் முத்து மணி(வயது35). இவர் அதே பகுதியில் உள்ள கல் உடைக்கும் ஆலையில் பணி யாற்றி வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி.
இந்தநிலையில் இன்று காலை முத்துமணி வீட்டில் இருந்து அருகில் உள்ள வடகரை தண்டவாள பகுதிக்கு சென்றதாக கூறப் படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முத்துமணி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துமணி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொ ண்டாரா? அல்லது தண்ட வாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒத்தக்கடை காளமேகப் பெருமாள் கோவில் திருக்கல்யாணம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
- 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆண்டாள் வீதி உலா நடக்கிறது.
மேலூர்
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோ கூர். இங்கு பிரசித்தி பெற்ற காளமேகப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான காளமேகப் பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவ விழாவை யொட்டி வருகிற (3-ந்தேதி) ஆண்டாளுக்கு எண்ணை காப்பு உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) ஆண்டாள் வீதி உலா நடக்கிறது.
5-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மோகனவள்ளி தாயார் சன்னதி முன் மண்டபத்தில் காளமேக பெருமாள்-ஆண்டாள், ஸ்ரீதேவி- பூமிதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
அன்று இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி-அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் தக்கார் செல்வி, செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணியளவில் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, காமராஜர் சாலை வழியாக, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வந்து சேரும்.
அதன் பின்னர் மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும். மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
- வீடு புகுந்து வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- முக்கிய குற்றவாளி ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பிச்சைகாளி. இவரது மகன் அழகர் (வயது21), கட்டிட தொழி லாளி.
சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மதிய நேரத்தில் அவரது வீட்டுக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட கும்பல் அழகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் மற்றும் பேரையூர் போலீசார் விசாரணை நடத்தினர். வாலிபரை கொலை செய்தது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக் கையில் ஈடுபட்டனர்.
அப்போது கொலையில் ஈடுபட்டது நிலையூரை சேர்ந்த அழகு சேதுபதி(25) மற்றும் திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்த அஜய்(24), பாண்டித்துரை(25), ஆதித்தன்(19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில், பேரையூரை சேர்ந்த ராமர் என்பவரது தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ராமரின் தம்பி லட்சுமணன் கிணற்றில் விழுந்து இறந்தார். தம்பியின் சாவுக்கு அழகர் தான் காரணம் என கருதிய அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கொலையில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முக்கிய குற்றவாளி ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.






