ரெயில் மோதி தொழிலாளி பலி

ரெயில் மோதி தொழிலாளி பலியானார். தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புது நெடுங்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் முத்து மணி(வயது35). இவர் அதே பகுதியில் உள்ள கல் உடைக்கும் ஆலையில் பணி யாற்றி வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

இந்தநிலையில் இன்று காலை முத்துமணி வீட்டில் இருந்து அருகில் உள்ள வடகரை தண்டவாள பகுதிக்கு சென்றதாக கூறப் படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முத்துமணி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துமணி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொ ண்டாரா? அல்லது தண்ட வாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com