என் மலர்
மதுரை
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது.
- கவச உடை அணிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
மதுரை
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொ டங்கி விட்டது. குறிப்பாக வட மாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்றும், நாளையும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகைகளை நடத்தும்படி மத்திய அரசு அறிவித்தி ருந்தது. அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று மதியம் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. டீன் ரத்தினவேல் தலை மையில் டாக்டர்கள் கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.
அப்போது ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்யப் பட்டது. தொடர்ந்து கொரோனா அறிகுறி இருந்தால் உடனே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தடுப்பு ஒத்திகையில் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- சாலைகளில் குப்பைகளை சிதறவிட்டு செல்லும் மாநகராட்சி லாரிகளால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
- சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நாள்தோறும் 100 டன் குப்பைகளை சேகரித்து மாநகராட்சி 92-வது வார்டு பகுதியில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் குப்பைகள் சுத்தரிக்கும் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த குப்பைகள் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அந்தத் தொட்டியில் குப்பை களை கொட்டியும் மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்பட்டு அதனை அந்தந்த வார்டுகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வந்து சேர்க்கின்றனர். இந்த குப்பைகளை எல்லாம் மாநகராட்சி குப்பை லாரிகள் மூலமும், டிராக்டர் மூலமும் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு கொண்டு செல்லும் குப்பை லாரிகள், டிராக்டர்கள் ஓரிடத்தில் அள்ளிய குப்பைகளை வீதி எங்கும் சிதறவிட்டும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு குப்பைகளை காற்றில் பறக்க விட்டும் செல்கின்றன. இதனால் சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து பலமுறை கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கூறியும் எந்த பலனும் இல்லாத நிலையில் தான் இருக்கிறது. மேலும் இந்த குப்பை களை கொண்டு சேர்க்கும் குப்பை லாரிகள் காண்ட்ராக்டர் மூலம் எடுத்து செல்வதால் காண்ட்ராக்டர்கள் அதிக குப்பைகளை கொண்டு சென்றால் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக லாரி மற்றும் டாக்டர்களில் குப்பைகளை எடுத்துச் செல்வதினாலும் குப்பைகள் இப்படி வீதி களில் சிதறி விழுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மெத்தனமாக நடந்து வருகின்றன. குப்பைகள் அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன.
இது போதாதென்று சேகரிக்கும் குப்பைகளை சாலை முழுவதும் சிதறவிட்டுச் செல்கின்றன. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- மதுரை அருகே தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயல் வீரர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தார். இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி கிளை நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார். ராஜா என்ற பெரியகருப்பன், கேபிள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொறுப்பாளர் சம்பத் முன்னிலையில் வார்டு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். இதில் பேரூர் சேர்மன் ஜெயராமன், அவைதலைவர் தீர்த்தராமன், பொருளாளர் கண்ணன் பேரூர்துணை செயலாளர்கள் ஸ்டாலின், செந்தில், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, 1-வது வார்டு செயலாளர் அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை அருகே நடந்த விபத்தில் பைக்கில் வந்த வாலிபர் பலியானார்.
- இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை அருகே உள்ள வலையங்குளம் நெடுமதுரையை சேர்ந்தவர் அழகு (வயது 48). நேற்று காலை இவர் அதே பகுதியை சேர்ந்த மொக்கை என்பவருடன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றார்.
பின்னர் திருமங்கலம் ரிங்ரோடு-நிலையூர் ரோட்டில் திரும்பியபோது திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அழகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அழகு மனைவி பெரிய அழகி கொடுத்த புகாரின்பேரில் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.
- மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை தொடங்குகிறது.
- வருகிற 15-ந் தேதி பால்குடம், தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது.
மதுரை
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இது மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்ததாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி மாரியம்மன் இன்று (திங்கட்கிழமை) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்த டைகிறார். அங்கு கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும்.
நாளை (11-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி காட்சி அளிப்பார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரரிடம் இருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து 4 சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்ற டைவார்.
அங்கு இரவு 11மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
5-ம் நாளான 15-ந்தேதி இரவு 7.25 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். அன்று மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து காட்சி அளிப்பார்.
7-ம் நாளான 17-ந்தேதி திருவிளக்குபூஜையும், பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு 18-ந்தேதியும் நடக்கிறது. 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
20-ந்தேதி காலை 6 மணி முதல் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் இரவு 7.25 மணிக்கு மேல் தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.
- மதுரையில் இளம்பெண் திடீரென மாயமானார்.
- இதுகுறித்து கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை கரிமேடு மோதிலால் மெயின்ரோடு, யோகாநந்தசாமி தெற்கு மடம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(38), டிரைவர். இவரது மனைவி மணிமேகலை(26). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 6 மாதமாக மணிமேகலை யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் இருந்து பையுடன் வெளியேறிய மணிமேகலை அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.
- கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக கட்டிட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
- திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திருமங்கலம்
திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் அஜந்தன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானம் வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- பென்சன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதியத்தொகை ரூ1,000-ல் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கி ஒவ்வொரு மாவட்ட வாரியாக விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது.
மேற்கண்டவை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மாநில தலைவர் மகாலிங்கம் கூறுகையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென முதல்-அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
- திருமங்கலம் அருகே காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ராகுல்காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் தீப்பந்தம் ஏந்தி ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தது தவறு என கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமங்கலம் வட்டார தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிக்குமார், உலகநாதன், கள்ளிக்குடி வட்டார தலைவர்கள் பாண்டியன், தளபதி சேகர், கரிசல்பட்டி கிராம கமிட்டி முருகேசன், மணிகண்டன், மாவட்ட செயலாளர் ஆலம்பட்டி ராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இரவில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மதுரை அருகே தும்பைபட்டி ஊராட்சியில் சமுதாய கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
மேலூர்
கொட்டாம்பட்டி ஒன்றியம் தும்பைபட்டி ஊராட்சியில் உள்ள தாமரைப்பட்டியில் மேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சமும், கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள்தலைவர் வெற்றிச்செழியன், தும்பைபட்டி ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பொண்ணு முருகன், ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னகரம்பட்டி பழனிதுரை, மேலவளவு விஜயராகவன், கிடாரிப்பட்டி சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் மலைசாமி, அட்டப்பட்டி கந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், சமூக ஆர்வலர் தேவராஜ், தெற்கு ஒன்றிய பாசறை தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பழம்பெருமை வாய்ந்த சப்பரத்தை இந்த ஆண்டு சீரமைத்து அழகரை எழுந்தருள செய்வது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
- கோவில் துணை ஆணையர் நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரை:
மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் முத்தாய்ப்பாக மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மே 3-ந்தேதி புறப்பாடாகிறார்.
திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் இந்த திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்தினம் இரவு தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்கு எழுந்தருள்வது வழக்கம்.
இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் ஆயிரம் பொன் சப்பரம் செய்யப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பு எதுவும் செய்யப்படாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அழகர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்தச் சப்பரம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் முன்புள்ள மண்டகப்படியில் நிறுத்தப்பட்டிருந்தது. மன்னர் காலத்தில் மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட இந்த சப்பரம் பயன்பாடின்றி இருப்பதை அறிந்த பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பழம்பெருமை வாய்ந்த சப்பரத்தை இந்த ஆண்டு சீரமைத்து அழகரை எழுந்தருள செய்வது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கோவில் துணை ஆணையர் ராமசாமி நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு வருவார். இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் தனது ஆட்சிக்காலத்தில் ஸ்தபதியை அழைத்து ஆயிரம் பொன் சப்பரத்தை செய்தார்.
100 ஆண்டுகளுக்கு முன் இந்த சப்பரத்தில் அழகர் எழுந்தருளினார். ஆனால் காலப்போக்கில் சப்பரம் பயன்படுத்தபடவில்லை. இதன் பெருமையை அறிந்து தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டே ஆயிரம் பொன் சப்பரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என்றார்.
- வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெறுகிறது.
மதுரை:
கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்து உள்ளது.
நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகுபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அதே போல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெற்றது.
- மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா சிக்கியது.
- 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெங்களூர் கைலாஷ் குமாரை தேடி வருகின்றனர்.
மதுரை
மாட்டுத்தாவணி போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தனர்.அவர்களிடம் 8 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் தெற்குவாசல் பாண்டிய வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சையது இப்ராஹிம் (வயது23), சோலை அழகுபுரம் குருசாமி மகன் சசிகுமார்(18), ஒத்தப்பட்டி காட்டு நாயக்கர் தெரு தினகரன் மகன் சுந்தரபாண்டி(19) என்பது தெரிய வந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய எண்ணூர் வள்ளுவர் நகர், மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணமூர்த்தியை தேடி வருகின்றனர். தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். ரைபிள் கிளப் அருகே 7 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதற்கிடையே ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது 830 கிலோ குட்கா, 7 செல்போன்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
6 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரித்தனர். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சித்தூர் காசிராமன்(28), தர்மபுரி மாவட்டம், நாகமரத்துபள்ளம் விக்ரம் ( 35), தர்மபுரி சித்தநல்லி தயாநிதி (32), சிங்கம்புணரி சுந்தரம் நகர், கதிரவன் (42), சிவகங்கை மாவட்டம், மணப்பட்டி வெள்ளைச்சாமி ( 42), திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிப்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு சக்திவேல் மகன் ஹரிஷ்பாபு (20) என்பது தெரியவந்தது.
6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெங்களூர் கைலாஷ் குமாரை தேடி வருகின்றனர்.






