search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம்
    X

    பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். 

    கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம்

    • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக கட்டிட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    • திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் அஜந்தன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானம் வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- பென்சன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதியத்தொகை ரூ1,000-ல் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கி ஒவ்வொரு மாவட்ட வாரியாக விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது.

    மேற்கண்டவை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து மாநில தலைவர் மகாலிங்கம் கூறுகையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென முதல்-அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    Next Story
    ×