சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

மதுரை அருகே தும்பைபட்டி ஊராட்சியில் சமுதாய கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
Published on

மேலூர்

கொட்டாம்பட்டி ஒன்றியம் தும்பைபட்டி ஊராட்சியில் உள்ள தாமரைப்பட்டியில் மேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சமும், கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள்தலைவர் வெற்றிச்செழியன், தும்பைபட்டி ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பொண்ணு முருகன், ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னகரம்பட்டி பழனிதுரை, மேலவளவு விஜயராகவன், கிடாரிப்பட்டி சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் மலைசாமி, அட்டப்பட்டி கந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், சமூக ஆர்வலர் தேவராஜ், தெற்கு ஒன்றிய பாசறை தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com