என் மலர்tooltip icon

    மதுரை

    • எஸ்.என்.கல்லூரியில் என்.எஸ்.எஸ்.முகாம் நடந்தது.
    • விஜயகுமார் வரவேற்று பேசினார்.

    மதுரை,

    மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் வலையங்குளம், குசவன்குண்டு மற்றும் சோளங்குருணி கிராமங்களில் நடைபெற்றது.

    முகாமின் தொடக்க விழாவில் திட்ட அலுவலர் விஜயகுமார் வரவேற்று பேசினார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார்.

    வலையங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனசேகரன், சித்த மருத்துவர் லதா ராணி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, ரூட்செட் மைய இயக்குநர் சுந்தராச்சாரி, ஒருங்கிணைப்பாளர் கோகிலா, விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கோபிநாத் பேசினர்.

    நிறைவு விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் கிராமங்களில் உள்ள ஊரணிகளை சுத்தம் செய்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். திட்ட அலுவலர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன் முகாமிற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.

    • பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட் சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரண மாக நாகலட்சுமி 100 நாள் வேலை திட்ட மேற்பார்வை யாளராக பணியாற்றி வந் தார்.

    பணி தொடர்பாக நாக லட்சுமிக்கும், பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாகலட்சுமி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் நட வடிக்கை எடுக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தொடர் பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு நாகலட்சுமி எழுதிய கடிடத்தில், தனது தற் கொலைக்கு காரணம் மையிட்டான்பட்டி பஞ்சா யத்து துணைத்தலைவர் முருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து என குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் பிரேத பரி சோதனைக்காக நாகலட்சுமி யின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை கைது செய்ய வேண்டும், நாகலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    5 பெண் குழந்தை களையும் அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உற வினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கிராமிய சந்தை தொடக்கப்பட்டது.
    • பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நபார்டு கிராமிய சந்தை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம்தென்னரசு கிராமிய சந்தையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நபார்டு வங்கி உதவியுடன் சீட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.

    சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வட்டாரத்தில் உள்ள விவசாய பங்கு தாரர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது.

    பின்னர் நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு வாழ்வாதார கடனுதவி திட்டத்தின் கீழ் 5 கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.16.59 லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு இலவச தார்ப்பாய்களைஅமைச்சர் வழங்கினார்.

    சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விவசாய கடன் அட்டை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2.44லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு நபார்டு கிராமிய சந்தை உறுப்பினர் அட்டை களையும், விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க பதிவு சான்றிதழையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ் (மல்லாங்கிணறு), செந்தில் (காரியாபட்டி), காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பாண்டியன், முதன்மை செயல் அலுவலர் சிவகுமார், பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை தென்பரங்குன்றம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் விக்னேஸ்வரன் (21). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

    தென்பரங்குன்றம், விஸ்வகர்மா நகர் கோபி மகன் ராஜா (21). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் மேற்கண்ட 2 பேரும் குற்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதன்படி விக்னேஸ்வரன், ராஜா ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு நடந்தது.
    • 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    கள்ளந்திரி, குறிஞ்சி நகர், ஏ.என்.புரம் முகாம் அமைப்பாளர்கள் மணிபாரதி, நொண்டிசாமி, அஜித் ஆகியோரது தலைமையில் 30 பேர், பொய்கைக்கரைப்பட்டி நந்தகோபால் தலைமையில் 10பேர், வெள்ளியங்குன்றம் நொண்டிசாமி தலைமையில் 10பேர், பில்லுச்சேரி தினேஷ் தலைமையில் 10பேர், மாத்தூர், மாத்தூர் காலனி காசி, சின்னையா ஆகியோரது தலைமையில் 20பேர், குருத்தூர் மாரி காளி தலைமையில் 25பேர், மாங்குளம் மீனாட்சி புரம் சபரிநாதன், கண்ணன், செல்வம் ஆகியோரது தலைமையில் 25பேர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    ராவணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுத்து வந்தனர். மேற்கு ஒன்றியம் சார்பில் 22 வாகனங்களில் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றியம் சார்பில் 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

    • வைக்கோல் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
    • கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெரியாறு கால்வாய் நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டதை முன்னிட்டு சோழவந்தான் மற்றும் திருவலவாய நல்லூர், திருவேடகம், ஊத்துக்குளி, மேலக்கால், நாராயணபுரம், ராயபுரம், ரிஷபம், கருப்பட்டி, இரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் தீவிரமாக நடைபெற்றது.

    இருபோக சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தற்போது அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து வயல்களில் உள்ள வைக்கோல்களை நவீன எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது. 30 கிலோ எடையுள்ள கட்டுக ளாக கட்டப்பட்டு வைக்கோல் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த வைக்கோல் கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் தற்போது தங்களது நிலங்களில் வைக்கோலை பிரித்து விற்பனை செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    • ரூ.11½ லட்சம் மோசடி செய்த ராணுவ வீரர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    • ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆத்தங்குடி கிராமத்ைத சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது கப்பலூரில் ஐ.ஓ.சி. நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார்.

    இவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்டுகுளத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது வெளிநாட்டு நிறு வனத்தில் முதலீடு செய்தால் சில மாதங்களில் இருமடங்கு தொகை கிடைக்கும் என சிவக்குமார் கூறினார்.

    இதனை நம்பி பல தவணைகளில் ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்தை சிவக்குமா ரிடம் கொடுத்தேன். பல மாதங்கள் ஆனபின்பும் பணம் கைக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது மோசடி என தெரியவந்தது. இதையடுத்து பணத்ைத திரும்பித்தருமாறு சிவக்குமா ரிடம் கேட்டேன்.ஆனால் அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே உரிய நடவடிக்ை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படை யில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது.
    • உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயசாந்தி வரவேற்றார். தலைமையாசிரியை பூங்கொடி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி, பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சோழ வந்தானில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் கழக கவுரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார்.

    பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், துணை சேர்மன் லதாகண்ணன் ஆகியோர் பரிசுவழங்கினர்.தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார். வரவேற்றார். ஆசிரியை பிரேம்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கினர். உதவி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.

    ராயபுரம் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியை பணி மாதா, சோழவந்தான் ஆர். சி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி ஆசிர், பிர பாகர், மணிமேகலை, ஜாஸ்மின் ஜெனிபா ஆகியோர் பேசினர். உதவி ஆசிரியைகள் பிரேமா, அன்ன புஷ்பம், வனிதா, சாந்தகுமாரி, கிறிஸ்டிஜெய ஸ்டார் நிர்வாக ஆசிரியை அனிதா, இல்லம் தேடி கல்வியாசிரியைகள் ராக்கு, ரேகா, சத்துணவு அமைப்பாளர் முருகேசுவரி, உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 24-ந் தேதி தொடங்குகிறது
    • உபயதாரர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதிஅம்மன்கோவில் பூக்குழி திருவிழா வருகிற 24-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மகாபாரகதையில் வரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் புரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    24-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை கொடியேற்றம், 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை சக்திகரகம், 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் திருக்கல்யாணம், மாலை அம்மனும் சுவாமியும் வீதிஉலா, 27-ந்தேதி (வியாழக்கிழமை) சர்க்கரையுககோட்டை சைத்தவன், துரோணாச்சாரி வேடம், 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருப்பட்டி கிராமத்தில் பீமன் வேடம், கீசகன் வதம் 29-ந்தேதி (சனிக்கிழமை) சோழவந்தானில் பீமன் வேடம், கீசகன் வதம், 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை அர்ஜுனன் வேடம், அம்மன் புறப்பாடு, அர்ஜுன் தபசு நடக்கிறது.

    மே 1-ந்தேதி (திங்கட்கி ழமை) இரவு 8 மணியளவில் காளிவேடம், அம்மன்பு றப்பாடு, அரவான் பலி கொடுத்தல், கருப்பு சாமி வேடம் நடு இரவு காவல் கொடுத்தல், 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு திரவுபதை வேடம், துரியோதனன் படுகளம், அம்மன் புறப்பாடு, திரவுபதை சபதம் முடித்து கூந்தல் முடிப்பு, 3-ந்தேதி (புதன்கிழமை) மாலை மந்தைகளத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அம்மன் புறப்பாடு நடைபெறும்.

    4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை கொடி இறக்கம், வைகை ஆற்றில் தீர்த்தமாடுதல், இரவு கோவில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி, அதிகாலையில் அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வந்து கோவிலை வந்தடையும். 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பட்டாபிஷேகம், இரவு வீரவிருந்து நடைபெறுகிறது.

    தினமும் மகாபாரத தொடர் சொற்பொழிவு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி, கோவில் ஆலோசகர் முருகேசன் உள்பட உபயதாரர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்.
    • ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவிப்பு விட வேண்டும்.

    மதுரை :

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்கிற உறுதியை அம்பேத்கரின் பிறந்தநாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊழல் பட்டியலை நான் வரவேற்கிறேன். இது ஒன்றும் புதிது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது, அது எப்படி அவர்களுக்கு கிடைத்தது? என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி உள்ளது. அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்திருப்பதால், அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள். அ.தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவிப்பு விட வேண்டும். அண்ணாமலைக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இது. அ.தி.மு.க.வின் ஊழலையும் வெளியிட்டு நடுநிலையாக இருக்க வேண்டும்.

    அங்கு கூட்டணி வைத்து இருப்பதால் வாயை மூடி இருந்தால் ஊழல் செய்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்போம். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அ.தி.மு.க. சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள், நடவடிக்கை எடுங்கள்.

    மோசமான ஆட்சி நடைபெறுவதற்கு தலைவர்கள் காரணம் இல்லை, அந்த தலைவர்களை தேர்வு செய்த மக்கள்தான் காரணம் என ஆபிரகாம் லிங்கன் சொல்கிறார். இந்த மாதிரி ஆட்களை சட்டசபைக்கு அனுப்பியது யார்?. எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது. அதை விட்டுவிட்டு ஐ.பி.எல். பார்ப்பதற்கு டிக்கெட் கேட்கிறார்கள்.

    மதுரை திருமங்கலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலைசெய்து கொண்ட விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்து நடைபெறாமல் இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குளிர்பானம் என்று நினைத்து மண்எண்ணெய் குடித்த மூதாட்டி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலவளவு, புது சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி லட்சுமி (76). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகன் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அங்கு சமையல் அறையில் இருந்த ஒரு பாட்டிலில் நீல நிற திரவம் இருந்தது. அதனை குளிர்பானம் என்று நினைத்து அவர் குடித்து விட்டார். அதன் பிறகு தான், அது மண் எண்ணெய் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த லட்சுமிைய மீட்டு மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி-தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சட்ட மேதை அம்பேத்காரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகே அவுட் போஸ்டில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், மண்டலத் தலைவர் வாசுகி, பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, கவுன்சிலர் நந்தினி, திருப்பாலை ராம மூர்த்தி, வாடிப்பட்டி கார்த்திக், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட நிர்வாகி கள், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வேலுச்சாமி குழந்தைவேலு, அக்ரி.கணேசன், சின்னம்மா, ஒச்சுபாலு, மூவேந்திரன், சுதன், ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×