search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annual celebrations"

    • கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
    • பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புண்ணியவதி சாலையில் அமைந்துள்ள கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி செயலாளர் நிவேதிகா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே. செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு உறுப்பினர் ஜெயசுதா பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கராத்தே, பிரமிட் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    மேலும் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் சுவை குறையாத அளவில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.விழாவின் ஒரு நிகழ்வாக கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் சென்ற கல்வி ஆண்டிற்கான சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    விழாவில் கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைவர் மோகன் கே.கார்த்திக், பள்ளியின் இயக்குநர் கே.ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், பள்ளியின் முதல்வர் தீபாவதி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்ததோடு அவர்களை பாராட்டினர்.

    • பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது.
    • உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயசாந்தி வரவேற்றார். தலைமையாசிரியை பூங்கொடி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி, பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சோழ வந்தானில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் கழக கவுரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார்.

    பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், துணை சேர்மன் லதாகண்ணன் ஆகியோர் பரிசுவழங்கினர்.தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார். வரவேற்றார். ஆசிரியை பிரேம்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கினர். உதவி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.

    ராயபுரம் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியை பணி மாதா, சோழவந்தான் ஆர். சி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி ஆசிர், பிர பாகர், மணிமேகலை, ஜாஸ்மின் ஜெனிபா ஆகியோர் பேசினர். உதவி ஆசிரியைகள் பிரேமா, அன்ன புஷ்பம், வனிதா, சாந்தகுமாரி, கிறிஸ்டிஜெய ஸ்டார் நிர்வாக ஆசிரியை அனிதா, இல்லம் தேடி கல்வியாசிரியைகள் ராக்கு, ரேகா, சத்துணவு அமைப்பாளர் முருகேசுவரி, உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ×