என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
    X

    திரவுபதி அம்மன் கோவில் திருவிழா

    • திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 24-ந் தேதி தொடங்குகிறது
    • உபயதாரர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதிஅம்மன்கோவில் பூக்குழி திருவிழா வருகிற 24-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மகாபாரகதையில் வரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் புரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    24-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை கொடியேற்றம், 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை சக்திகரகம், 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் திருக்கல்யாணம், மாலை அம்மனும் சுவாமியும் வீதிஉலா, 27-ந்தேதி (வியாழக்கிழமை) சர்க்கரையுககோட்டை சைத்தவன், துரோணாச்சாரி வேடம், 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருப்பட்டி கிராமத்தில் பீமன் வேடம், கீசகன் வதம் 29-ந்தேதி (சனிக்கிழமை) சோழவந்தானில் பீமன் வேடம், கீசகன் வதம், 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை அர்ஜுனன் வேடம், அம்மன் புறப்பாடு, அர்ஜுன் தபசு நடக்கிறது.

    மே 1-ந்தேதி (திங்கட்கி ழமை) இரவு 8 மணியளவில் காளிவேடம், அம்மன்பு றப்பாடு, அரவான் பலி கொடுத்தல், கருப்பு சாமி வேடம் நடு இரவு காவல் கொடுத்தல், 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு திரவுபதை வேடம், துரியோதனன் படுகளம், அம்மன் புறப்பாடு, திரவுபதை சபதம் முடித்து கூந்தல் முடிப்பு, 3-ந்தேதி (புதன்கிழமை) மாலை மந்தைகளத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அம்மன் புறப்பாடு நடைபெறும்.

    4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை கொடி இறக்கம், வைகை ஆற்றில் தீர்த்தமாடுதல், இரவு கோவில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி, அதிகாலையில் அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வந்து கோவிலை வந்தடையும். 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பட்டாபிஷேகம், இரவு வீரவிருந்து நடைபெறுகிறது.

    தினமும் மகாபாரத தொடர் சொற்பொழிவு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி, கோவில் ஆலோசகர் முருகேசன் உள்பட உபயதாரர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×