2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்.
2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

மதுரை

மதுரை தென்பரங்குன்றம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் விக்னேஸ்வரன் (21). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

தென்பரங்குன்றம், விஸ்வகர்மா நகர் கோபி மகன் ராஜா (21). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மேற்கண்ட 2 பேரும் குற்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதன்படி விக்னேஸ்வரன், ராஜா ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்

X

Maalai Malar
www.maalaimalar.com