என் மலர்
மதுரை
- விபத்தில் காலை இழந்த வீரரின் தாயார் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
- மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது.
மதுரை
மதுரை கோச்சடை பகுதியில் கடந்த 26-ந் தேதி மாலை 3 பழுதடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்து கொண்டிருந்தனர். அதுசமயம் அந்த வழியாக ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரன் (வயது18) என்பவர் நடந்து வந்துள்ளார். மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது. இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக ஆம்பு லன்ஸ் உதவியுடன் இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் வரையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர் விக்னேஸ்வரனை, அமைச்சர் தங்கம் தென்ன ரசு மதுரை அரசு மருத்துவ மனைக்கு சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சமும், மின்வாரியம் சார்பில் 3 லட்சமும் நிவாரண உதவி அறிவிக்கப் பட்டது. அப்போது விளை யாட்டு வீரரின் தாயார் தீர்த்தம் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டு மென கோரிக்கை வைத் தார்.
இந்த நிலையில் மின்வாரியம் சார்பில் அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்த பரிதி விக்னேஸ்வரனின் தாயார் தீர்த்தம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளித்தார். அப்போது, பணம் தேவையில்லை. எனது மகனுக்கு அரசு வேலை தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
- அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
- வாக–னத்தை ஸ்கேன் செய்து வேகத்தை கம்பங்களில் அமைக்கப் பட்டுள்ள டிஜிட் டில் போர்டுகள் காட்டுகின்றன.
மதுரை
மதுரையில் இருந்து மற் றும் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்வ–தற்கு முக்கிய சந்திப்பு மைய–மாக திருமங்கலம் உள்ளது. இந்தியாவின் முதல் நான்கு வழிச்சாலையான காஷ்மீர்-கன்னியாகுமரி நெடுஞ் சாலை திருமங்கலம் வழி–யாக செல்கிறது.
சென்னை வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள், மதுரையில் இருந்து செல் லும் வாகனங்கள் பெங்க–ளூரு, கோவை, கொடைக்கா–னல் வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக தான் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், சிவகாசி, தென் காசி, செங்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இதனால் வாகனப் போக் குவரத்து அதிகமுள்ள பகுதி–யாக திருமங்கலம் உள்ளது. மேலும் நான்கு வழிச் சாலை–யில் கப்பலூர் தொழிற் பேட்டை உள்ளது. இதனால் பயணிகளின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தொடர்ச்சியாக திருமங்கலம் பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலையில் வாகனங் கள் அதிவேகத்தில் சென்ற–படி இருக்கும்.
இந்த நிலையில் அஜாக்கி–ரதையாக கார்கள், இரு சக்கர வாகனங்களை இயக் குபவர்கள் விபத்தில் சிக்கு–வதும், உயிரிழப்புகள் ஏற்ப–டுவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங் களில் திரு மங்கலம் நான்கு வழிச் சாலை பகுதி–யில் நடந்த விபத்துகளில் பலர் இறந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம–டைந்து சிகிச்சை பெற்று வருகின்ற–னர். ஆனாலும் விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக நடந்த விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரை இழந்துள்ளனர். இந்த நிலை–யில் இந்தப் பகுதியில் விபத் துகளை தடுக்க அரசும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் வேகக் கண்காணிப்பு கருவி–கள் பொருத்தப்பட்டு வரு–கின்றன. நாம் வாகனத்தில் செல்லும் போது வாக–னத்தை ஸ்கேன் செய்து வேகத்தை கம்பங்களில் அமைக்கப் பட்டுள்ள டிஜிட் டில் போர்டுகள் காட்டு–கின்றன.
திருமங்கலம் நான்கு வழிச்சாலை பகுதியில் இத்த–கைய வேகக் கண்காணிப்பு கருவிகளை அதிகமாக பொருத்த வேண்டும் என–வும், மேலும் அதிக வேகத் தில் செல்லும் வாகனங்க–ளுக்கு எச்சரிக்கை சமிக்ஞை–களை தரும் தொழில் நுட் பத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களின் செல் போன்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பவும், உடனடி அபராதம் விதிக்க–வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ–லர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
- 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.
மதுரை
நாளை ஆடி பவுர்ணமி தினம் என்பதால் மதுரை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித் துள்ளது. மல்லிகை பூ 600 ரூபாய்க்கு விற்பனையானது.
மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக மல்லிகை பூக்கள் வழக்கமாக 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. மற்ற பூக்களான பிச்சு, சம்பங்கி, செவ்வந்தி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் சராசரியாக 100 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாளை ஆடி பவுர்ணமி தினம் என்ப தாலும், இன்னும் 2 நாட்க ளில் ஆடி 18 வருவதாலும் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்க ளைத் தேடி பொது மக்கள் ஆர்வத்துடன் சென்று வாங்கி வருகிறார்கள்.
இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் பூக்களை வாங்க ெபாதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதன் காரணமாக அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மேலும் சம்பங்கி 100 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, அரளி ஆகிய மலர்கள் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டன் ரோஸ் இன்று 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து cள்ளனர். இன்னும் சில தினங்களில் ஆடி 18 வர இருப்பதால் பூக்களின் விலை இன்னும் சில நாட்க ளுக்கு தொடர்ந்து அதிக ரிக்கும் என்று வியா பாரிகள் தெரிவித்தனர்.
- கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம் நாளை நடக்கிறது.
- முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அலங்காநல்லூர்
108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளுகிறார். அதன்பின் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திருத்தேர் புதிய வண்ண அலங்கார திரைச்சீலை அமைத்தல், திருத்தேர் சக்கரங்கள், குதிரை உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதல் பிரேக் ஆகியவை புதுப்பித் தல் பணி மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்றது. மேலும் தேரோட்டத்தை பக்தர்கள் காண ஆங்காங்கே அகன்ற திரைமூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவில் துணை ஆணையர் இராமசாமி மற்றும் உள்துறை அலு வலர்கள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணி களை துரிதப்படுத்தியும், பணியாளர்களுக்கு ஆலோ சனை வழங்கியும் வருகின்ற னர். ஆடி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மின்தடை அறிவிப்பு குளறுபடியால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
- மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களை சிரமப்படுத்துகிறது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் மின்சார வாரியம் நகர் மற்றும் புறநகர் என இரண்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்புற அலுவல கத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் மின்சார பராம ரிப்புக்காக மின்தடை அறிவிப்பு வெளியிடப்படு கிறது. இந்த அறிவிப்பானது 2 நாட்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.
ஆனால் ஏதோ ஒரு காரணம் கூறி மின்தடை அறிவிக்கப்பட்ட அன்று காலை இன்று மின்தடை இல்லை என்று திடீரென தகவல் தருகின்றனர். இவ் வாறு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட தொழி லாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள் மற்றும் மின்சாரம் சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்க ளுக்கு சார்ந்த தொழில் நிறுவனங்கள் விடுமுறை விட்டு விடுகின்றனர்.
ஆனால் அன்று காலை திடீரென மின்சார தடை இல்லை என அறிவிப்பதால் அவர்களுக்கு அன்று ஒரு நாள் வேலை பாதிக்கப்படுகி றது. மேலூர் மின்சார வாரி யம் 4 நாட்களுக்கு பின்னால் மீண்டும் நாளை மின்தடை என்றுஅறிவிப்பை வெளி யிட்டுள்ளனர்.
இதனால் தொழில்கள் முடங்கவதோடு தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறி விப்பை வெளியிட்டு பொது மக்கள் சிரமத்தை குறைக்க உரிய நடவடிக்கை இனி மேலாவது மேற்கொள் வார்களா? அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கூறுகின்றனர்.
- கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
- ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருமங்கலம் கோட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. கோட்டத்தலைவர் இளங் கோ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்ததார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை மற்றும் தீர் மானங்களை வாசித்தார்.
இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், திருமங் கலம் அருகேயுள்ள கப்ப லூர் டோல்கேட் நகராட்சி எல்லையிலிருந்து 5 கி.மீ தூரத்திற்குள் விதிமுறை களை மீறி அமைந்துள்ளது.எனவே இங்கிருந்து டோல் கேட்டினை அகற்றி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய மத்திய அரசு உடனடி யான நடவடிக்கை எடுக்க வேண்டும்,
திருமங்கலம் நகரில் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் பணிகள், ெரயில்வே மேம் பால பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கப்ப லூரில் ஆர்.டி.ஓ. அலுவல கம் அருகே இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வா கத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் கோட்ட துணைத்தலைவர் பால கிருஷ்ணன் மாநில கவுரவ தலைவர் பரமேஸ்வரன், திருமங்கலம் கோட்டத்தினை சேர்ந்த ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
- சோழவந்தான் பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11 அபிஷேகங்கள் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து பூஜைகள் நடந்தன. இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இந்தப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
- காட்டுத்தீயின் பாதிப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆடி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சதுரகிரி வனச்சரகத்திற்குட்பட்ட ஊஞ்சிக் கல் மலையில் காட்டுத் தீ பரவியது. காற்றின் வேகம் காரணமாக தீ சில கிலோ மீட்டர் பரவியதால் அதனை தடுக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
காட்டுத்தீயின் பாதிப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மலையேற தாணிப்பாறைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் தீயின் பரவல் குறைந்தது. மேலும் இந்த காட்டுத் தீ காரணமாக சதுரகிரி கோவில் அமைந்துள்ள பகுதியில் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் மலையேறினர்.
மலை பாதைகளில் நீரோடைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வனத்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 2-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
- பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.
- தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது.
திருமங்கலம்:
கன்னியாகுமரி மாவட்டம் செங்குடியை அடுத்த செங்கண்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின் (வயது 34), சாம் டேவிட்சன் (30). இதில் ஜேம்ஸ் மார்ட்டின் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது தம்பியான சாம் டேவிட்சனையும் கப்பலில் வேலைக்கு சேர்க்க விரும்பினார். இதற்கான பயிற்சிக்காக சென்னைக்கு தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார்.
அவர்களுடன் ஜேம்ஸ் மார்ட்டினின் பெரியப்பா மகன் கமலேஷ் (50) என்பவரும் சென்னை செல்ல தயாரானார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே காரில் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி சென்னைக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த கார் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடியை அடுத்த விருதுநகர் மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்துகொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.
காரை ஓட்டி வந்த ஜேம்ஸ்மார்ட்டின் அதனை நிறுத்த முயன்றார். ஆனால் தாறுமாறாக ஓடி அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதியது. ஆனாலும் வேகம் கட்டுக்குள் வராததால் நிற்காமல் சென்ற கார் தடுப்புசுவரையும் தாண்டி எதிர்திசை நோக்கி பாய்ந்தது.
அப்போது பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் அந்த லாரி நான்குவழிச்சாலையில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் காரில் வந்த மூன்று பேர் மற்றும் கண்டெய்டனர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுரை விரகனூரைச் சேர்ந்த செல்வகுமார் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே தாறுமாறாக எதிர்திசையில் பாய்ந்த காரை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சினிமா படப்பிடிப்பில் நடப்பது போன்ற பிரமிப்பை இந்த விபத்து ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய காருக்குள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்த நான்கு பேரின் உடல்களையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தால் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தக்காளி விலை தொடர்ந்து உச்சம் அடைந்துள்ளது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை
தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.150 வரை விற்கப் பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை பெரிய அளவில் குறையவில்லை.
மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடமாநில வியாபாரிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்க ளில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி, பரவை மார்கெட்டுகளுக்கு வரும் தக்காளியின் வரத்து அதிகரிக்கவில்லை.
இதனால் விலை பெரிய அளவில் குறையவில்லை. மார்க்கெட்டுகளுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது.
இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை உச்சத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இன்று மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனால் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை உச்சத்திலேயே தொடர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற கணக்கிலேயே வாங்கு கின்றனர். மேலும் சமையலுக்கு தக்காளியை சிக்கன மாக பயன்படுத்தி வருகிறார்கள்.
- மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப இறந்தனர்.
- மற்றொரு விபத்தில் டோல்கேட் ஊழியர் நசுங்கி பலியானார்.
மதுரை
மதுரையை அடுத்த திருப் பரங்குன்றம் அருகேயுள்ள ஹார்விபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் உறவுக்கார பெண் மற்றும் தனது மகள், மகனுடன் இன்று மதியம் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட் டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உசிலம் பட்டி சந்திப்பு அருகே சென்றபோது, மோட் டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடியது. அதனை நிறுத்தமுயன்றும் முடியா–ததால் இறுதியில் அருகி–லிருந்த வழிகாட்டி பலகை–யில் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற அய்யனார் குடும்பத்தினருடன் தூக்கி வீசப்பட்டார். இதில் அய்யனார் மற்றும் அவரது மகள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தி–லேயே பரிதாபமாக உயிரி–ழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த அந்த பெண் மற்றும் அய்யனாரின் மகன் இரு–வரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
மற்ெறாரு விபத்து

விபத்தை ஏற்படுத்திய வடமாநில லாரி மற்றும் விபத்தில் சேதம் அடைந்த ஆம்னி வேனை படத்ல் காணலாம்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை நோக்கி வந்தது. அந்த லாரி மது–ரையை அடுத்த வண்டியூர் டோல்கேட்டில் நுழைந்த–போது திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடி, டோல்கேட்டில் பணம் வசூலிக்கும் கவுண்டர் மீது மோதியது. இதில் பணம் வசூலில் ஈடுபட்டிருந்த டோல்கேட் ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் விபத்தை ஏற்படுத் திய அந்த லாரி நிற்காமல் தொடர்ந்து சென்று எதிர் திசையில் வந்த மற்றொரு ஆம்னி வேன் மீதும் மோதி–யது.
இதில் அந்த வேனில் பயணம் செய்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் டோல்கேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
- போலி ஆவணம் தயாரித்து பணி நியமன உத்தரவு வழங்கிய மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டார்.
- 30-க்கும் மேற்பட்ட–வர்கள் சுமார் ரூ.1 கோடி ரூபாய் கொடுத்து வேலை வரும் என்று நம்பி காத்து இருந்தனர்.
மதுரை
மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந் திரன். இவர் பெருங்குடி அருகே உள்ள டோல்கேட் டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வளையங்குளத்தை சேர்ந்த சதீஸ்வரன் என்பவரும் அதே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் ஜெயச்சந்திரனுடன் நட்பாக பழகினார்.
மேலும் அவரிடம் நான் இங்கு பகுதி நேரமாகத்தான் வேலை பார்க்கிறேன். மதுரை ஐகோர்ட்டு அலுவ–லகத்தில் உதவியாளராகவும் உள்ளேன். எனவே எனக்கு அங்குள்ள நீதிபதிகள், பதிவாளர் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தெரியும் என கூறியுள்ளார். அத்துடன் ஐகோர்ட்டில் உதவியாளர் பணிகள் காலியாக உள்ளன. 3 லட்ச ரூபாய் கொடுத்தால் உடனடியாக அங்கு வேலை கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார். அதை நம்பிய ஜெயச் சந்திரன் நகையை அடகு வைத்து ரூ.3 லட்சத்தை அவரிடம் கொடுத்ததாக ெதரிகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சதீஸ்வரன், நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்துகளை போட்டு வேலைக்கான போலியான ஆணையையும் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உறவினர்கள், தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள். அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பி 30-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.1 கோடி ரூபாய் கொடுத்து வேலை வரும் என்று நம்பி காத்து இருந்தனர்.
அப்போது அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர் வேலைக்கான உத்தரவுகளையும், அடையாள அட்டை உள்ளிட்டவைகளையும் வழங்கி உள்ளார். மேலும் நான் சொல்லும் போதுதான் அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்கு சென்று வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜெயச்சந்திரனும் சதீஸ் வரன் கூறியது போல் வேலைக்கான உத்தரவு நகலை பெற்றுக்கொண்டு மதுரை ஐகோர்ட்டில் அவர் தெரிவித்த நபரை போய் பார்த்தார். அவரும் ஒரு மாத காலம் பயிற்சி உள்ளது. அதன்பின் நீதிபதிக்கு உதவியாளாராக சேர்ந்து கொள் ளலாம் எனக்கூறி 10 நாள் கழித்து வாருங்கள் என கூறி அனுப்பி இருக்கிறார்.
மீண்டும் 10 நாட்கள் கழித்து ஐகோர்ட்டுக்கு சென்று வேலைக்கான பணி நியமன ஆணையை காண் பித்த போது, அது போலி என தெரியவந்தது. இதையடுத்து ஜெயச்சந்திரன், மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு போலி பணி ஆணை தயாரித்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து சதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கே.கே.நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராமலிங் கம் ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை ஐகோர்ட்டு உள்பட பல்வேறு கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை மோசடி நடந் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






