என் மலர்
மதுரை
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
- அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட் பகுதி யை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் காளீஸ்வரன் (23). இவருக்கும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று புதூர் பஸ் நிலைய பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து காளீஸ்வரனின் தாய் தேவி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
அண்ணா நகர் கோமதிபுரம் ஆவின் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி முத்துமாரி (28). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வசித்து வந்தனர். இதன் காரணமாக முத்துமாரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜரானார்.
- 2018-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த சருகனியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றிய தையல் ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த இடத்துக்கு புதிய ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி பள்ளியின் தாளாளர் சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தனர்.
இதனால் கடந்த 2015-ம் ஆண்டில் பள்ளி தாளாளர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சருகணி நடுநிலை பள்ளியில் தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கல்வி அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜரானார். (அவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).
அப்போது, ஏற்கனவே 2018-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை இத்தனை ஆண்டு களாக செயல்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்காக சாமி சத்தியமூர்த்திக்கு 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டார்.
இதைக்கேட்ட அரசு வக்கீல், இந்த தண்டனையை தற்போது நிறுத்தி வைக்க கோரியதால், கல்வி அதிகாரிக்கு விதித்த தண்டனை 2 வாரத்திற்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
- அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
மதுரை
அண்ணா திராவிட மக் கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் சே.பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
ரோம்நகர் தீப்பிடித்து எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த தைப் போல இந்திய ஒன்றி யம் முழுவதும் பா.ஜ.க. வினால் வன்முறைத் தீ பற்றி எரிகிறது மணிப்பூர் வன்முறையை உடனே தடுத்து நிறுத்தா விட்டால் உச்ச நீதிமன்றமே தலையிடும் என தலைமை நீதியரசர் ஒன்றிய அரசை எச்சரித்தற்கு பிறகு பிரதமர் பட்டும் படா மலும் மணிப்பூர் கலவரம் குறித்து சில நொடிகளில் பேட்டியளித்துச் சென்ற காட்சியை உலகமே எள்ளி நகையாடுகிறது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கும் பிரதமரின் செய லுக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதை மூடி மறைப்ப தற்காக அமைதிப் பூங்கா வான தமிழகத்தில் பாதயாத் திரை என்ற பெயரில் சொகுசு வாகனத்தில் அண்ணாமலை பயணம் சென்று வருகிறார் தமிழ் மண்ணைப் பொறுத்தளவில் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையில் சுயமரியாதை, சமூக நீதி, சமதர்மம், இன உரிமை, மாநில சுயாட்சி,இந்தியக் கூட்டாச்சி ஆகிய கோட் பாடுகளில் பேணிக் காத்து வருகிறது.
கவர்னர் ரவியும் அண்ணாமலையும் தினமும் புலம்பி வருவதை நாட்டு மக்களும் திராவிட இயக்க மும் சிறிது கூட அவர்களை பொருட்படுத்தவில்லை, திராவிட இயக்கத்தின் கொள்கையில் தமிழக மக்கள் பட்டைத் தீட்டப்பட்ட வைரமாக திகழ்ந்து வரு கிறார்கள். மணிப்பூரில்
இரு பழங்குடி இனப்பெண் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு 80 நாட்களுக்கு பிறகே காவல் துறை முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்துள்ளது அவ்விரு பெண்களையும் காவல்துறையினரே போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் இது தொடர்பான வழக்கை மாநில காவல்துறையினர் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது இதை விசாரிக்க முன்னாள் நீதிபகள் கொண்ட சிறப்பு புலனாய் வுக் குழு அல்லது ஒரு சிறப்பு குழுவை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப் படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளது வரவேற்கத்தாகும்.இது பிரதமர் மோடிக்கும், மணிப்பூர் மாநில பாஜக அரசிற்கும் பெருத்த அவமா னமாகும், பா.ஜ.க.விற்கு ஏற் பட்டிருக்க கூடிய அவமா னங்களை மூடி மறைப்ப தற்காக பாதயாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அண்ணாமலை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இத்தகைய நாடக அரசி யல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை 2024 தேர்தலில் பாஜகவிற்கு தமிழ் மண் சரியான பாடம் புகட்டும்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
- பதவியேற்பு விழா நடந்தது.
- வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரி பரமேசுவரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முதல் துணை ஆளுநர் டாக்டர் சசிக்குமார், மண்டல தலைவர் ஜெயச் சந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.
விழாவில் தலைவராக ராமசந்திரன், செயலா ளராக பாலசுந்தரம், பொரு ளாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். பின்னர் பயனாளிகளுக்கு ஆடை கள், அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விருதுகள், தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தை களுக்கு விளையாட்டு உப கரணங்கள், பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் இல்லத்திற்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் நிர்வாகிகள் சிவக்குமார், பாபநாசம், பொன்னையா, குருசாமி, காந்திராஜன், சிவசங்கரன், சங்கு, பாபுசரவணன், சோழவந்தான் நகர்தலைவர் மருதுபாண்டியன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
- ராணி மங்கம்மாள் பெயரில் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டியில் தெலுங்கர் மன்றம் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. தெலுங்கர் மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வெலம நாயுடு சங்க தலைவர் ஜெயராமன், மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தெலுங்கர் மன்ற பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் முன்னாள் சேர்மன் சுப்புராஜ் மற்றும் கிளானிஸ் மருத்துவமனை இயக்குநர் மது புருஷோத்தமன் கலந்து கொண்டு பேசினார்.
டி.கல்லுப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் மகுடாபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் ராணி மங்கம்மாள் பெயரில் கல்லுப்பட்டியில் பெண்கள் கலைக் கல்லூரி நிறுவ வேண்டும். கோடைகால அரண்மனையில் ராணி மங்கம்மாள் சிலை வைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மதுரை அருகே பாலமேட்டில் ரத்த தான முகாம் நடந்தது.
- இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏ.வி.பி. குழுமம் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இந்த முகாமை ஏ.வி.பி. குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், முன்னிலை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முகாமை ஒருங்கிணைத்தனர். இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
பின்னர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ரத்த தானம் வழங்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
- மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் நகர்மன்ற தலைவி வழங்கினார்
- சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திலகவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இந்தநிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், சின்னச்சாமி, வீரக்குமார், ஜமீலாபெளசியா ஆகி யோர் கலந்து கொண்டனர். தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதேபோல் திருமங்கலம் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
- தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
- மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு அடுத்தபடியாக 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி திருத்தேரில் அலங்கார திரைச்சீலை கட்டுதல், தேர்ச்சக்கரம் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பித்தல், மரக்குதிரைகள் பொருத்துதல், தேர் முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்து வடங்கள் பொருத்தப்பட்டன. காலை 6.30 மணிக்கு மேல் பெருமாள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண் பக்தர்கள் உள்ளிட்டோர் அருள் வந்து சாமியாடியபடி வந்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டை வாசல்களை கடந்து 4 ரதவீதிகளிலும் அசைந்தாடி வந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதேபோல் தேரோட்டத்தை வயதான பக்தர்கள் மற்றும் பெண்கள் சிரமமின்றி காணும் வகையில் அகன்ற திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. அதேபோல் மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தேரோட்ட விழா முடிந்து இன்று இரவு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை (2-ந் தேதி, புதன்கிழமை) புஷ்ப சப்பரம், 3-ந்தேதி ஆடி 18-ம் பெருக்கு உற்சவ சாந்தி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு 8 மணி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணி வரை மட்டும் மதுரையில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் பஸ்கள் வலையபட்டி வழியாக மரக்காயர்புரம் சென்று பின்பு மேலூர் செல்லும் வகையிலும், மேலூரில் இருந்து அழகர் கோவில் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் மரக்காயர்புரம் சென்று நாயக்கன் பட்டி வழியாகவும், மதுரைக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
- கோவிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நுழைவு விதி சட்டம், இந்து அல்லாத எந்த சமயத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என சட்டத்தில் உள்ளது என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த சட்டம் சொல்வதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினார். இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
- வருகிற 6-ந் தேதி தொகுதி வாரியாக பாக முகவர்கள் சிறப்பு கூட்டம் நடக்கிறது.
- வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து வந்து தவறாமல் கலந்து கொள்ள செய்து சிறப்பிக்க வேண்டும்.
மதுரை
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொகுதி வாரியாக வருகிற 6-ந் தேதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், அமைச்சருமான மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தி.மு.க. தலைவர் வழிகாட்டுதலின் படி இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் முதல்-அமைச்ச்ா மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வடக்கு மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, சோழவந்தான் மற்றும் மேலூர் சட்டமன்ற தொகுதி களுக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்களும் பங்கேற்க வேண்டியுள்ளது.
இதனை முன்னிட்டு வடக்கு மாவட்டம் மேற்கண்ட தொகுதிக்கு உட்பட்ட சிறப்பு வாக்குச் சாவடி முகவர்களுக்கான சிறப்புக் கூட்டம் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழ்காணும் அட்டவ ணைப்படி நடைபெற உள்ளது.
அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அன்றைய தினம் காலை 10 மணிக்கு திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரி அருகில் உள்ள குறிஞ்சி மகாலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் அலங்காநல்லூரில் உள்ள சுபிக்க்ஷா திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் அங்குள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மஹாலில் நடைபெற உள்ளது.
இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து வந்து தவறாமல் கலந்து கொள்ள செய்து சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தி.மு.க. சார்பில் பாக முகவர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-
தேர்தலில் கிளைச் செய லாளராக இருப்பவர்கள் பாக முகவர்தான். உங்கள் பணி மிகவும் முக்கியமானது. நமது பகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர். அதை சரியாக கணக்கெடுக்க வேண்டும். பாக முகவர்கள் தான் தேர்தலின் அடித்தளம் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை அமைத்து அதை உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
கிராமம், கிராமமாக சென்று திண்ணை பிரசாரம் செய்து அ.தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறி யடிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணிகளை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அதனை தாங்கள் கொண்டு வந்ததாக
அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.
அதனை முறியடிக்க வேண்டும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. நல்லாட்சியின் சான்றாக இந்த தேர்தல் அமைய வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் தற்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதல் தொகுதி யாக தொண்டர்கள் அனை வரும் பாடுபட வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், முத்துராமன் மகிழன் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அணி அமைப்பாளர்கள் கொடி சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், ஒன்றிய செய லாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, நாகராஜ், மதன்குமார், பாண்டியன், பேரூர் செயலாளர்கள் வருசை முகமது, திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றார்.
- போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவ லகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகி றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் நேரடியா கவோ, மனுக்கள் மூலமா கவோ தெரிவிப்பார்கள்.
அதன்படி இன்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராள மானோர் மனு கொடுக்க நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த பொது மக்கள் மற்றும் போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இது தொடர்பாக போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர்.
அப்போது அவர் பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமணி மகள் கவிதா, மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. இவரது குடும்பத்தினர், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நடத்தி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக ரூ.4 லட்சம் அபராதம் கட்டவில்லையென்றால் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






