என் மலர்tooltip icon

    மதுரை

    • திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறச்செய்ய நாம் தற்போது இருந்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர் பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் வசதி வீடு தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

    விரைவில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகள் 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சியினர் மக்களிடம் தவறான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வீடு தோறும் திண்ணைப் பிரசாரம் செய்து நமது அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அதற்கான பணிகளை தற்போது இருந்து நீங்கள் பார்க்க தொடங்குங்கள். கடந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். தற்போது நாம் ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளரை விருது நகர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறச் செய்ய நாம் தற்போது இருந்து தேர்தல் பணி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டி, மகிழன், பகுதி செயலாளர் உசிலை சிவா, கிருஷ்ணபாண்டி, அணி அமைப்பாளர்கள் விமல், ஆலங்குளம் செல்வம், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த், கருவேலம்பட்டி வெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவலாளி போலீசில் ஒப்படைத்தார்.
    • குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
    • தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வரும் 5-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவ லகத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்து டன் நேரிலோ அல்லது ddemptmdu@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

    இந்த முகாமில் 200 -க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் அனைத்து கல்வித்தகுதியுடைய 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் முகாமிற்கு வரவேண்டும்.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறும், இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவ தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடந்தது.
    • ஆசிரியர் சண்முகதிருக்குமரன் மதுரையும் கலைஞரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தேனி, சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடக்க ஆணையிடப்பட்டது.

    அதனடிப்படையில், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் பணியாளர்கள்/அலுவ லர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 107 பேர் பங்கேற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நர் (பொ) சுசிலா வர வேற்றார்.

    மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் வானதி கருத்த ரங்கை தொடங்கி வைத்து பேசினர்.

    மீனாட்சி கல்லூரியின் முதுகலை தமிழாய்வுத் துறைத் தலைவர் சந்திரா கலைஞர் நிகழ்த்தியச் செம்மொழிச் செயற் பாடுகள் எனும் தலைப்பி லும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் தட்சிணா மூர்த்தி மொழிப்பயிற்சி எனும் தலைப்பிலும், முனிச்சாலை, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியின், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சண்முகதிருக் குமரன் மதுரையும் கலைஞ ரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் முத்துமுருகன் திரைப்படங் களில் தமிழ் வளர்ச்சி எனும் தலைப்பிலும், விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கணினித்தமிழ் எனும் தலைப்பிலும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் சங்கீத் ராதா காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி சட்டம், வரலாறு எனும் தலைப்பி லும் பேசினர்.

    முடிவில் தமிழாய்வு துறைத்தலைவர் சந்திரா நன்றி கூறினார்.

    • நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காமராஜ், இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(வயது49). இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணியளவில் கவிதா தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது மர்மநபர் மோட்டார்சைக்கிளில் கவிதாவை பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென மர்மநபர் கவிதாவை மறித்து அவரை தாக்கி கழுந்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினான். இதுகுறித்து கவிதா சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ.பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித்தரப்படும், தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.

    இதைத்தொடர்ந்து 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூர் துணைச்செயலாளர் ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், ஒன்றிய, பேரூர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும், மகளிரணி அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.

    • 4 பேரும் மதுரை அய்யர் பங்களா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கிளப்பிற்கு சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்தனர்.

    மதுரை:

    ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் தோபாராவை சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (வயது 32). இவர் தஞ்சாவூரில் ஜி.எஸ்.டி. அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டம் குருவாடாவை சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜி ஜுன்ஸ் ஜினுவைச் சேர்ந்தவர் ராமச்சந்திர தேசுசாய் மகன் சுபேஷின் (29). இவர் முத்துப்பேட்டையில் கஸ்டம்ஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். ஹரியானா மாநிலம் குரு கிராம் மாவட்டம் நூர்கரத் துவை சேர்ந்தவர் யாராம் ஆனந்த் மகன் தினேஷ்குமார் (24). இவர் மதுரையில் சி.பி.ஐ. கிரைம் பிராஞ்ச் உதவி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் 4 பேரும் மதுரை அய்யர் பங்களா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கிளப்பிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திரும்பும்போது அவர்களுக்கான பில் தொகையை கிளப் ஊழியர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து அவர்கள் ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த கிளப்பின் மேனேஜர், உச்சபரம்பு மேடு அய்யர் பங்களா ஹரிஹரன் தெருவை சேர்ந்த ஆனந்த் பாபு (38) என்பவர் அங்கு சென்றுள்ளார்.

    அவர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 அதிகாரிகளும் கிளப் மேலாளர் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக பேசி பாட்டில்களை உடைத்து அடித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிளப் மேனேஜர் ஆனந்த் பாபு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது.

    • மதுரையில் வெயில் அதிகமாக வாட்டி வதைக்கிறது.
    • அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகத்தின் பெரும்பா–லான பகுதிகளில் மேற்கு திசையில் வீசும் காற்றின் நிலை மாறுபாட்டால் இடியு–டன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆனால் அதே வேளையில் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்த வரிசையில் மதுரை–யில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த மே ஜூன் மாதங்களில் அக்கினி நட்சத்திரம் வெயி–லின் தாக்கம் உக்கிரமாக இருந்தது.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் பிற்ப–கல் கடந்து மாலை வரை உச்சத்தை சுட்டெரித்தது. வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு கூட இரண்டு முறை தள்ளிவைப்பட்டதை நாம் அறிவோம்.

    கோடை காலம் முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் விடாது துரத்தும் கருப்பு போல ஆடி மாதமான தற்போதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பலருக்கு உடல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அள–வுக்கு அதிகமான வியர்வை–யால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவ–திப்பட்டு வருகிறார்கள்.

    ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழியை பொய்யாகும் அளவிற்கு தற்போது ஆடி மாதத்தில் வெயில் வாட்டி வதைப்பது பொதுமக்களை கலக்கம–டைய வைத்துள்ளது. அது–வும் உச்சபட்சமாக கடந்த சில தினங்களாக மதுரையில் 100 சதவீதத்தை தாண்டும் அளவிற்கு கடுமையான வெயில் அடிக்கிறது. நேற்று முன்தினம் மதுரையில் 107 டிகிரி வெயில் பதிவாகி அதிர்ச்சி அடைய வைத்துள் ளது.

    இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவி–கள், வேலைக்கு செல்பவர் கள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் பலரும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடை–கின்றனர். வெயிலின் தாக் கம் குறையாததால் பகலில் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அத்தியா–வசிய காரணங்களுக்காக கூட செல்லாமல் வீடுகளுக் குள் முடங்கிவிடுகிறார்கள்.

    இந்த நிலையில் அடிக்கடி மின்வெட்டு வேறு வந்து பொதுமக்களை வாட்டுவ–தால் அடிக்கும் வெயிலுக்கு வீட்டிலே இருக்க முடியாமல் வயதானவர்கள் குழந்தை–கள் அவதிப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழிதேடுகி–றார்கள். உச்சபட்சமாக மதுரை விமா நிலையம் பகுதியில் 105.8 பாரன்ஹீட்டும், மதுரை மாநகரில் 107 டிகிரி வரை வெயில் பதி–வா–ன–தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

    இதற்கிடையே தமிழகத் தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருப்பது பொதுமக்களை மேலும் வருத்தமடைய செய்துள்ளது. இந்த நிலை மாற வருண பகவானுக்கு வழிவிட்டு சூரிய பகவான் கடந்து செல்ல வேண்டும் என்பதே மதுரை வாசிகளின் ஒட்டு–மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்துவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
    • 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கின்ற தி.மு.க. அரசை எதிர்த்து அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடியார் தினந்தோறும், அறிக்கை வாயிலாகவும், சட்டமன்றத்திலும் உரிமை குரலை எழுப்பி வருகிறார்.

    ஆனால் தி.மு.க.வை இன்றைக்கு சிலர் துதி பாடுகிற ஒரு நிலையை பார்க்கிறபோது நமக்கு வேதனையாக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் திருநாமத்தை சொல்லி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சொல்லி வளர்ந்தவர்கள், அம்மாவின் அடையாளம் என்று வாழ்ந்தவர்கள், இன்றைக்கு அம்மாவின் மரணத்திற்கு காரணமாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை, கொடுக்கப்பட்டிருக்கிற அந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துதி பாடும் நிலையில் உள்ளனர் இதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும், தமிழக மக்களும் இன்றைக்கு எள்ளி நகையாடுகிறார்கள்.

    இன்றைக்கு மக்களால் கைவிடப்பட்டவர்கள், தொண்டர்களால் கைவிடப்பட்டவர்கள், கழக நிர்வாகிகளின் நம்பிக்கை இழந்தவர்கள், இந்த இயக்கத்திற்கு தொடர்ந்து இடையூறாக இருப்பவர்கள் ஏன் இன்னும் ஒரு படி மேலே, புரட்சித் தலைவர் மாளிகையை தன் காலால் எட்டி உதைத்த கயவர்கள், அம்மாவே தெய்வம் கழகமே கோயில் என்று வாழ்ந்து வருகிற தொண்டர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு குண்டர்களும் இருந்து நமக்கு வேதனை அளிக்கிறது.

    அரசியலிலே நிலை நிறுத்திக் கொள்வதற்காக எதிரிகளிடம் உண்மை தொண்டர்களை, விசுவாசத்தொண்டர்களை அடமானம் வைத்து, தங்கள் வாழ்வை உயர்த்தி கொள்வதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து, இன்றைக்கு கடைசி முயற்சியாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லுகிறார்கள்.

    எதற்காக இந்த போராட்டத்தை இன்றைக்கு நீங்கள் நடத்துகிறீர்கள் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? இந்த சம்பவத்தில் வழக்குகளை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அதனு டைய குற்றவாளிகளை நீதிமன்றத்திலே அங்கே சமர்ப்பித்து அந்த சட்ட நடவடிக்கை எல்லாம் உங்களுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் நீங்கள் எங்கே அமெரிக்கா ஐக்கிய நாட்டுல இருந்தீர்களா? ஜப்பானில் இருந்தீர்களா? இன்றைக்கு போராட் டத்திற்கு தலைமை தாங்குகிற நீங்கள் (ஓ.பன்னீர் செல்வம்) தானே அன்றைக்கு இருந்த இத்தனை நடவடிக்கை களுக்கும் முக்கிய பொறுப் பாளராக இருந்து அன்றைக்கு நீங்கள் இதை வழிநடத்துவதையும் நீங்கள் வரலாற்றை மறைத்து விட முடியாது.

    எடப்பாடியாருக்கு எதிராக போராட தொண்டர்களை நீங்கள் பங்கேற்க செய்வதற்கு எடுக்கிற முயற்சி எல்லாம் தோல்வில்தான் முடியும்.

    8 கோடி தமிழர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கின்ற எடப்பாடியாரை நீங்கள் அவதூறு செய்யலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகும்.

    தி.மு.க.வின் ஊது குழலாக மாறி நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வியாபாரியை கடத்தி சென்று தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நோக்கன் கோட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது32). மதுரை அப்பன் திருப்பதியை சேர்ந்தவர் தங்க பிரகாஷ். இருவரும் கட்டிடங்களுக்கு தேவை யான பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

    இதனால் தொழில் போட்டி காரணமாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் முத்துகுமாரின் சகோதரர் குமரன் சேதுபதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமாரை சிலர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில் முத்துக்குமாரின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் அங்கிருந்து அவரை மீட்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பன்திருப்பதியை சேர்ந்த தங்கபிரகாஷ், தங்கம், சர்வேயர் காலனி சரவணன், கே.புதூர் முன்னமலை, எஸ்.கொடிக் குளம் ராமர் ஆகிய 5 பேர் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பிரகாஷ், தங்கம், சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    • செல்லூர் மீனாம்பாள்புரத்திற்கு மாற்று வழியாக பேருந்தை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிக–வும் சிரமப்பட்டு வரு–கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர், எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆகியோருக்கு 25-வது வார்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்டது செல்லூர் மீனாம்பாள்புரம். மதுரை பொன்மேனி பணிமனையில் இருந்து மீனாம் பாள்புரத்திற்கு (வழித்தட எஎண் 6 ஏ) அனுப்பானடியில் இருந்து பல வருடங்களாக அரசுப்பேருந்து வந்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பால் பேருந்து சேவை நிறுத்தப்பட் டது.

    பல மாதங்களாக பேருந்து சேவை இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இருந்து கேந்திரிய வித்யா–லாயா பள்ளி, ஓ.சி.பி.எம். பள்ளி, நாய்ஸ் பள்ளி, டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, அமெரிக்கன் கல்லுாரி, செயின்ட்மேரிஸ் பள்ளி, சௌராஸ்டிரா பள்ளி, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவனை, தியாகராஜர் கல்லூரி, ராஜாஜி மருத்துவமனை செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் அலுவ–லர்கள் கூலி தொழிலாளர் கள் மற்றும் கடைகள் ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசுப்பேருந்தை பி.டி.ராஜன் ரோடு, பீ.பி.குளம் வழியாக மீனாம்பாள்பு–ரத்திற்கு மாற்று வழியில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருமங்கலத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.

    மதுரை

    கொடநாடு கொைல மற்றுமு கொள்ளை வழக்கு–களில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரியும், இதுவரை குற்ற–வாளிகளை கண்டுபிடிக் காமல் மெத்தனப்போக் கோடு செயல்படும் தி.மு.–க.வை கண்டித்தும் இன்று மதுரை மாவட்டம் திருமங்க–லம் தாலுகா அலுவலகம் ராஜாஜி சிலை அருகே ஓ.பி.எஸ். அணி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

    மதுரை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு மாவட்ட கழக செயலா–ளர்கள் ஐயப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அமைப்பு செயலாளர் ஜி.ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க. மாவட்ட செய–லாளர் பேராசிரியர் ஜெய–பால், ராஜலிங்கம், மேலூர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற் றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் பேசுகையில், இங்கே கூடியி–ருக்கும் நாளை நமது வெற் றியை நிர்ணயிக்கும் கூட்டம் என்றும் முன்னாள் முதல் வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களா கொலை, கொள்ளைகளை கண்டுகொள்ளாமல் இருக் கும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம். கொலை–யாளியை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று பேசினார்.

    இதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜி–னாமா செய்ேவன் என்று கூறிய உதயகுமார் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வேண்டியதுதானே என்றார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலி–தாவின் மன உளைச்சலுக்கும் மரணத்தின் காரணம் தி.மு.க.வும், அரசு போட்ட பொய்யான வழக்கும் தான் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் அணி என்றும், ஓ.பி.எஸ்சிடம் இருப்பது தொண்டர் அணி என்றும் பேசினார்.

    மதுரையை தெற்கு மாவட்ட செயலாளர் உசி–லம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப் பன் பேசுகையில், எடப்பாடி–யிடம் தான் மக்கள் செல் வாக்கு இருக்கிறது என்று சொல்லும் உதயகுமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுகிறேன். உசிலம் பட்டியில் யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப் போமா என்று சவால் விட் டார்.

    இன்று தமிழகம் முழுவ–தும் அனைத்து மாவட்டங்க–ளிலும் ஓ.பி.எஸ். ஆணைக்கி–ணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலா–ளர்கள் மேலூர் சரவணன், பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம் ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் மாணவரணி மாநில துணைசெயலாளர் ஒத்தக் கடை பாண்டியன், முன் னாள் எம்.எல்.ஏ. பாண்டி–யம்மாள், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண் ணன், உசிலை சசி–குமார், பிரபு, திருமங்கலம் சிவா, ஜெயகுமார், பன்னியன் ஊராட்சி தலைவர் காசி–நாதன்,

    பாரப்பத்தி முத்தையா, ஆட்டோ கருப்பையா, கொம்பையா, புல்லட் ராமமூர்த்தி, சாத்தன உடை–யார், பத்ரி முருகன், ராஜமாணிக்கம், சுந்தரா, வக்கீல் சரவணன், ஜோதி–முருகன், கோடீஸ்வரன், லோகநாதன், பாலசுப்பி–ரமணியன், மாவூத்து வேலன், துதி திருநாவுகரசு, வி.கே.எஸ்.மாரிச்சாமி, திருமங்கலம் நகர செயலாளர் ராஜாமணி, மாவட்ட பொருளாளர் ரவி உள்பட ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.

    ×