search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "extortion of jewels"

    • நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காமராஜ், இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(வயது49). இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணியளவில் கவிதா தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது மர்மநபர் மோட்டார்சைக்கிளில் கவிதாவை பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென மர்மநபர் கவிதாவை மறித்து அவரை தாக்கி கழுந்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினான். இதுகுறித்து கவிதா சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • 25 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொண்டலாம்பட்டி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தியிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.
    • என் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

    சேலம்:

    காதலர்களை மிரட்டி நகை பறித்த வழக்கில் கைதான சேலம் வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலத்தில் 25 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொண்டலாம்பட்டி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தியிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 45) என்ற சர்க்கரை வியாபாரி, எனது தந்தையின் உறவினர் என்று கூறி அறிமுகமானார்.

    கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே நைசாக பேசி அழைத்து சென்று, என் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதன் பின்னரே அவர் எனது தந்தையின் உறவினர் இல்லை என்பதும், மோசடி நபர் என்பதும் தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து தனிப்படை அமைத்து, சரவணனை போலீசார் தேடி வந்தனர்.

    இதனிடையே, கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, சரவணனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    சரவணன் கடந்த 10 ஆண்டுகளாக பல பெண்களை ஏமாற்றியும், காதலர்கள் சேர்ந்து இருக்கும்போது, அவர்கள் பேசுவதை படம் எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டியும் நகை, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் சரவணனிடம் இது போன்று நகையை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள், சரவணன் மீது புகார் கொடுக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

    ×