மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்
Published on

மதுரை

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வரும் 5-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவ லகத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்து டன் நேரிலோ அல்லது ddemptmdu@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

இந்த முகாமில் 200 -க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த முகாமில் அனைத்து கல்வித்தகுதியுடைய 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் முகாமிற்கு வரவேண்டும்.

மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறும், இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவ தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com