என் மலர்tooltip icon

    மதுரை

    • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடந்தன.
    • கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு பேச்சு போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்க வளாக கூட்டரங்கில் நடந்த போட்டிகளில் 26 பள்ளி மாணவர்களும், 14 கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

    இதில் பள்ளிகள் பிரிவில் பொன் முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி குருவம்மாள், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெய்ஸ்ரீ, தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தீப்தி ஆகியோர் பரிசு முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி ஷர்மிகா, டி.கல்லுப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமதர்ஷினி ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி அளவில் செந்தமிழ்க் கல்லூரி மாணவி ராஜமாலதி, மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகக் கல்லூரி மாணவர் வெங்கடேஷ், மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டரிடம் பெற உள்ளனர்.

    • மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    • தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை தொழில்சார் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் கலைச் செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

    கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 28-ந்தேதி முதல் நேரடி வகுப்புகளாக தொடங்கப் பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடை பெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மதுரை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிழ்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (0452 -2564343) என்ற எண்ணிலோ அல்லது (peeomadurai27@gmail.com) மெயில் ஐ.டி.யில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து தேர்வுகளுக்கும் தயாராக ஏதுவாக புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெட் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட்டார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு நடத்தும் கி.ரா.வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கி.ரா.வின் படைப்புலகம் என்னும் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் அறி ஞர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் என பலரும் தங்கள் கட்டுரைகள் எழுதி அவற்றை நூலாக்கம் செய்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தலைமை தாங்கி னார். கல்லூரியின் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார் சாமி அவர்கள் முன்னிலை வகித்தனர். இயக்குனர் பிரபு வாழ்த்துரை வழங்கி னார்.

    விழாவில் துறைத்தலைவர் பரிமளா வரவேற்றார். முத்துராஜா நன்றி கூறினார். இப்பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன் பெற்றுக்கொண்டார்.

    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் கருப்ப சாமி, ஜோதி முருகன், முத்துராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சிறப்பு குழந்தைகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை முறை குறித்த 6 நாள் கருத்தரங்கு நடந்தது.
    • மதுரை கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் ஆயுஷ் செவிலியர்களுக்காக தொடங்கியது.

    மதுரை

    மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் ஆயுஷ் செவிலிய சிகிச்சையாளர்க–ளுக்கான "சிறப்பு குழந்தைகளுக் கான சித்த புற மருத்துவ சிகிச்சை முறைகள்" பற்றிய 6 நாட்கள் தொடர் மருத்துவ கருத்தரங்கு மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை ஆண்டாள்புரம் ஓட்டல் ஸ்ரீதேவியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல் வர் பேராசிரியர் டாக்டர் கே.கனகவல்லி, குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். மேலும் அவர் ஆயுஷ் தெரபிஸ் டுளுக்கான திறன் மேம் பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். சித்த மருத்துவத்தின் சிறப்பே புற மருத்துவ முறைகள் தான். சிறந்த முறையில் மருத்துவ ஆவணங்களை பதிவு செய்து புற மருத்துவ சிகிச்சையின் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய அவசியம், ஆங்கில மருத்துவத்தில் இருப்பது போன்று செவிலிய பணி மட்டுமல்லாமல் நோயாளிக–ளின் உடனிருந்து புறமருத்துவ சிகிச்சையை தொடர்ந்து செய் யும் வாய்ப்பு ஆயுஷ் தெர–பிஸ்டு–களுக்குத்தான் உள்ளது என் றார்.

    மேலும் பணியின்போது சொந்த விருப்பு வெறுப்பு இன்றி நோயாளிகளின் பாது–காப்பு மற்றும் முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு ஆயுஷ் தெரபிஸ்டுகள் பணி புரிய வேண்டும் என அறிவுரை வழங்கினார். கோகிலா சித்த மருத்துவமனை டாக்டர் ஜெ.–ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். அருப்புக்கோட்டை தி லெமூரியா சித்த மருத்துவ–மனை டாக்டர் பா.மணி–கண் டன் வாழ்த்துரை வழங்கி–னார்.

    கோகிலா சித்த மருத்துவ–மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் பா.பவித்ரா பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வியக்க வைத்தார். கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய உயர் நிர்வாக அலுவலர் ச.செந்தில்நாதன் நன்றி கூறினார். ஆயுஷ் தெரப்பிஸ்டுகளுக்கான புற–மருத்துவ செய்முறை பயிற்சி கையேடு புத்தகம் வெளியி–டப்பட்டது.

    கோகிலா சித்த மருத்துவ–மனை ஆராய்ச்சி மைய குழந்தை மற்றும் மகளிர் மருத்துவ பிரிவு மருத்துவர் டாக்டர் தபசினி சிறப்பு குழந்தைகள், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக் கான பொடி திமிர்தல், தப்பளம் புறவளையம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் அதன் செய்முறைகளை நேரிடை பயிற்சியாக செய்து காண்பித்தார்.

    தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, புது–டெல்லி, கோவா ஆகிய மாநி–லங்களில் இருந்து 30 ஆயுஷ் தெரபிஸ்டுகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி தொடர்ந்து 6 நாட்களாக 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மற்றும் வருகை தர உள்ள சித்த மருத்துவ பேராசிரியர்கள், ஆதரவு வழங்கிய தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்தா ரிசர்ச் கவுன்சில், தமிழ் நாடு இந்திய மருத்துவ துறை இயக்குனரகம், இந்திய மருத்து–வத்துறை பாண்டிச்சேரி, சாந்தகிரி சித்த மருத்துவக் கல்லூரி, ஆரோக்கிய சித்த மருத்துவமனை, மணிப்பால் மருத்துவக் கல்லூரி சித்த மருத்துவப் பிரிவு மற்றும் அனைத்து தனியார் மருத்துவ–மனைகளுக்கும் கோகிலா மருத்துவமனை நன்றிகளை தெரிவித்துள்ளது.

    • சந்திராயன்-3 நிலாவில் சாதனை தேச ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
    • மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியா அனுப்பிய சந்திராயன்-3, நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இதுவரை நிலவின் தென்பகுதியில் யாரும் ஆய்வு செய்யாத நிலையில் நமது சந்திராயன் முதன் முறையாக அங்கு கால்தடம் பதித்து இருப்பது உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளன.

    நமது நாடு பல மொழி, பல இனம், பல மதம் என இருந்தாலும் தேசம் என்று வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள். அதற்கு எடுத்து காட்டாக, சந்திராயன் நிலவில் தரையிறங்கும் காட்சியை கோடான கோடி மக்கள் நேற்று நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். சந்திராயன் வெற்றியை அனைவரும் கொண்டாடினர். இந்த வெற்றி, நமது தேசத்தின் ஒற்றுமையை உலக்கு பிரதிபலித்து இருக்கிறது. இந்த ஒற்றுமை நமக்கு மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமி சந்திராயன் வெற்றிக்கு பாடுப்பட்டவர்களை வாழ்த்தி இருக்கிறார். அவரது வழியில் மதுரை மக்கள் சார்பாக நானும் சந்திராயன் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானி களை மனதார பாரட்டு கிறேன்.

    இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு தமிழரான திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் இருப்பது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமையான விஷயம். எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்த தருணத்தில் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த திட்டத்திற்கு ஊக்கம் தந்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கு எனது நன்றியை தேரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓணம் பண்டிகையையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • மல்லிகை 900 ரூபாய்க்கு விற்பனையானது.

    மதுரை

    ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி பூஜையை யொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் கொண்டா டப்படும் முக்கிய மான பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் அதிக அளவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்களும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    பண்டிகை கொண்டாட் டத்தில் மலர்களால் கோலமிட்டு பண்டிகையை வரவேற்பதால் இந்த பண்டிகைக்கு அதிகளவில் பூக்களின் தேவை இருக்கும். அதுபோல வரலட்சுமி பூஜைக்கும் மலர்களின் தேவை அதிகம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    தற்போது பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் பூக்களின் விலை கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு இயல்பான விலைக்கு விற்கப்பட்டன. அந்த வகையில் மல்லிகை பூ 500 முதல் 600 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. மேலும் இதர பூக்களான பிச்சி, முல்லை, கன காம்பரம், சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்களும் வழக்கமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டியும், வரலட்சுமி பூஜை தினத்தையொட்டியும் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள் ளது.

    அதன்படி இன்று காலை மல்லிகை பூ கிலோ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.முல்லை 700 ரூபாய்க்கும், பிச்சி 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டன. அரளி, பட்டன் ரோஸ், சிவந்தி ஆகிய மலர்கள் 300 ரூபாய்க்கும், வாடாமல்லி 150 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பூஜைக்கு தேவையான மற்ற வண்ண மலர்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்கள் தொடரும் என்று வியாபா ரிகள் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் பூக்களை வாங்க சென்ற பொதுமக்கள் சற்று தயக்கத்துடனே பூக்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • சாத்தியார் அணை வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார்.
    • இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சாத்தியார் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வகுத்து மலை, கல்லுமலை அடிவாரத்தில், வைகாசிபட்டி, கோவில்பட்டி, போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் செல்கிறது.

    இந்தப்பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன் பாடற்ற நிலையில் உள்ளது. வனத்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் பல ஆண்டுகளாக இந்த பகுதி கிராம மக்கள் சென்று வர போதிய சாலைவசதி இல்லை.

    வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலை யாக மாற்ற வேண்டி இப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    தொடர்ந்து முதல மைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு கொடுத்து இருந்தனர். இதை பரிசீலித்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, அதிகாரிகள் நேற்று காலையில் சம்மந்தப்பட்ட சாத்தியார் அணையை சுற்றியுள்ள வனத்துறை சார்ந்த மலை அடிவார சாலைகள் அனைத்தையும் அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவில், சாலையின் அகலம் 7½ மீட்டர் அளவிலும், அத்து மால் செய்தனர். இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக வெங்கடே சன் எம்.எல்.ஏ. கூறுகையில், வைகாசிபட்டி கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த மலை சாலை பயனுள்ளதாக அமையும். மேலும் இந்த பணிகள் தொடங்க வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடக்கும். இதேபோல் சரந்தாங்கி, முடுவார்பட்டி மலை சாலை களும், வனத்துறையின் அனுமதியின் பேரில் விரைவில் தார்சாலை அமைக்க பணிகள் நடை பெறும் என்றார்.

    • தாலுகா அலுவலகம் முன்பு புளியமரம் சாய்ந்தது.
    • தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மதுரை -திண்டுக்கல் நகர்புற சாலையில் புளியமரம் இன்று காலை 6 மணிக்கு திடீரென்று சாலையின் நடுவே சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தினை அகற்ற வந்தனர். அப்போது அங்கிருந்த சாலை பணியாளர் ஜே.சி.பி. மூலம் மரத்தினை அகற்றுவதாக கூறியதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். ஆனால் 10 மணியாகியும் மரம் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது.

    இதனால் போக்குவரத்து பாதித்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மதுரை செல்லும் நகர் புறவழிச்சாலை வழியாக எதிரும் புதிருமாக வந்தது செயற்கையான விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது. தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.

    • அய்யனார் கோவிலில் 21 பந்தி 61 சேணை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி பெரியகுளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் 21 பந்தி 61 சேணை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மங்கல இசை முழங்க 2 கால யாக பூஜையுடன் கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை 21 பந்தி அய்யனார் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • உண்ணாவிரத பந்தலில் இதுவரை நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா உள்ளிட்டவர்களின் படங்கள் பிளக்ஸ் பேனர் வடிவில் வைக்கப்பட்டிருந்தது.
    • தி.மு.க.வினர் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மதுரை:

    மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 20-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். நீட் தோ்வை தடை செய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிர்ப்பு தெரிவித்து தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

    ஆனால், மதுரையில் மட்டும் அன்றைய தேதியில் உண்ணாவிரதம் நடைபெறவில்லை. அன்று மதுரையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் பொன் விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது.

    மதுரை புறநகர் பகுதிகளில் இருந்து தி.மு.க.வினரின் வாகனங்களும், அதேபோல் அ.தி.மு.க. மாநாட்டிற்கும் வாகனங்கள் ஏராளமானவை வரும் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் மட்டும் வேறொரு தேதியில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் முதலில் 23-ந்தேதி நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்தது. பின்னர் மீண்டும் இந்த உண்ணாவிரதம் 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    உண்ணாவிரத பந்தலில் இதுவரை நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா உள்ளிட்டவர்களின் படங்கள் பிளக்ஸ் பேனர் வடிவில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், இதில் பங்கேற்ற மாணவரணியினர் பலர் அனிதாவின் படம் அச்சிடப்பட்டிருந்த டி.ஷர்ட் அணிந்து பங்கேற்றனர். மேலும் மதுரை மாவட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். 

    • மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும்.
    • ஐகோர்ட்டு நியமித்த வக்கீல் குழுவின் கமிஷனர் தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, "மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மது பாட்டில்களில் விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் போன்றவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவித்து கண்காணிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மத்திய அரசு வக்கீல்கள் குழு ஆய்வு செய்து, 23-ந் தேதி (அதாவது நேற்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஐகோர்ட்டு நியமித்த வக்கீல் குழுவின் கமிஷனர் தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதனை தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விலை விவரப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

    • உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் மூலம் ரூ.2¼ கோடி வியாபாரிகள் வருமானம் ஈட்டினர்.
    • ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ெரயில்வே துறைக்கு செலுத்தினால் போதுமானது.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் 27 ெரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியா–ளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலை–கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். அதன் மூலம் வருமான அள–வாக ரூ.81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ஈட்டியுள்ளனர்.

    இதேபோல திருநெல் வேலி ரெயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனை–யில் ரூ.28 லட்சத்து 23 ஆயி–ரத்து 71-ம், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 270, திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 405, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனை–யில் ரூ.15 லட்சத்து 43 ஆயி–ரத்து 975,

    திண்டுக்கல்லில் சின்னா–ளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 297, ஸ்ரீவில் லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 655, தென்கா–சியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 210, ராமநாத–புரத்தில் கருவாடு விற்பனை–யில் ரூ.5 லட்சத்து 34 ஆயி–ரத்து 650,

    ராமேசுவரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனை–யில் ரூ.3 லட்சத்து 67 ஆயி–ரத்து 201, மணப்பாறை–யில் முறுக்கு விற்பனையில் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 10, மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 575, காரைக்கு–டியில் செட்டிநாடு நொறுக் குத் தீனிகள் விற்ப–னையில் ரூ.3 லட்சத்து 429, சாத்தூரில் சேவு விற்பனையில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 640 என உள்ளூர் சிறு குறு உற் பத்தியாளர்கள் வருமா–னம் ஈட்டியுள்ளனர்.

    இதன் மூலம் மொத்தத் தில் ரூ.2 கோடியே 18 லட் சத்து 7 ஆயிரத்து 235 வரு–மானம் பெற்றுள்ள உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

    மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மரப் பாச்சி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கை–யில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள்,

    கொடைக்கானல் ரோட் டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட் கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்கு–டியில் விவசாய விளை–பொருட்கள், வாஞ்சி மணி–யாச்சியில் மக்ரூன், மானாம–துரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்பு–கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட் களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல் லது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத் தி–ருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண் டும்.

    உள்ளூர் உற்பத்தியாளர்க–ளுக்கு வாய்ப்பு வழங்க வெளிப்படை தன்மையுள்ள நடைமுறைகள் பின்பற்றப் பட்டு வருகின்றன. இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவா–ளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண்ணப் பம் பெறப்படுகிறது.

    இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவானது, குலுக் கள் முறையில் விண்ணப்பங் களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரெயில் நிலையத் தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ள–லாம்.

    இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரெயில் நிலையங்க–ளில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாக அமைகி–றது. உற்பத்தியாளர்கள் விண்ணப்பத்துடன் ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ெரயில்வே துறைக்கு செலுத் தினால் போதுமானது.

    சிறிய ெரயில் நிலையங்க–ளில் பயணிகள் பயன்பாட் டிற்கேற்ப பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்படு–கிறது. உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பயணிகள் ஆர்வமுடன் வாங்குவதாக–வும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள் ளதாகவும் உள்ளூர் பொருட் கள் உற்பத்தியா–ளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×