தாலுகா அலுவலகம் முன்பு சாய்ந்த புளியமரம்

தாலுகா அலுவலகம் முன்பு புளியமரம் சாய்ந்தது. தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.
தாலுகா அலுவலகம் முன்பு சாய்ந்த புளியமரம்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மதுரை -திண்டுக்கல் நகர்புற சாலையில் புளியமரம் இன்று காலை 6 மணிக்கு திடீரென்று சாலையின் நடுவே சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தினை அகற்ற வந்தனர். அப்போது அங்கிருந்த சாலை பணியாளர் ஜே.சி.பி. மூலம் மரத்தினை அகற்றுவதாக கூறியதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். ஆனால் 10 மணியாகியும் மரம் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது.

இதனால் போக்குவரத்து பாதித்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மதுரை செல்லும் நகர் புறவழிச்சாலை வழியாக எதிரும் புதிருமாக வந்தது செயற்கையான விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது. தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.

X

Maalai Malar
www.maalaimalar.com