என் மலர்
மதுரை
- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
- தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் கதிரவன் முன்னிலை வகித்தார்
ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, துணத்தலைவர் பாக்கியம் செல்வம், முன்னாள் தலைவர் ஆறுமுகம் கணேசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன், மாறன், கார்த்திகா, ஞான சேகரன், வக்கீல் முருகன், மணிவேல், கேபிள் ராஜா, மனோகரன் ஆகியோர் பேசினர்.
இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்திய பிரகாஷ், வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் திருசெந்தில், ஊத்துக்குளி ராஜாராமன், செல்வமணி, தமிழ்மணி, முருகேசன் உள்பட ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய தொடக்க, ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கவிழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். இதில் கவுன்சிலர் ஜெயகாந்தன், இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, சுந்தர்ராஜன், வார்டு செயலா ளர்கள் ராம் மோகன், திரவியம், பன்னீர்செல்வம், மருதுபாண்டி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார். அதேபோல் தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் பூமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி, ஆசிரியர்கள் மகேஸ்வரி, கலைச்பொன் கவிதா, சுய உதவிக்குழுவினர் விஜயலட்சுமி, லட்சுமி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரக் குளம் கிராமத்தில் முதல–மைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டை–யன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க ஒரு திட்டத்தை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரக் குளத்தில் தொடங்கி வைப் பதை நான் பெருமையாக கருதுகிறேன். இது இந்தியா–வின் முன்னோடி திட்டமாக உள்ளது. உன்னதமான நோக்கத்தில் உருவாக்கப் பட்ட இந்த திட்டம் மிகப்பெ–ரிய வெற்றி அடைய வேண் டும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவிட வேண் டும்.
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிய பெண்கள் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்வது வழக் கம். ஆனால் தாமாக வந்து தி.மு.க. அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை விசா–ரிக்கும் அந்த நீதி அரசர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மீதும் தாமாக வந்து விசாரணை செய்வதிலும் வேகத்தை காட்ட வேண்டும். நீதி என் பது அனைவருக்கும் ஆன–தாக இருக்க வேண்டும். ஒரு சாரருக்கு மட்டும் இருக்கக் கூடாது.
அ.தி.மு.க.வினர் ஆளுங் கட்சியினரை ஏதாவது பழி சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வளை–யங்குளத்தில் நடைபெற்ற மாநாட்டில் வந்தவர்களுக்கு உணவு கூட அளிக்க முடி–யாத நிலையில் தான் உள்ளனர். இதனால்தான் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி, முன் னாள் அமைச்சர்கள் செல் லூர் ராஜூ, ஆர்.பி.உதய–குமார், ராஜன் செல்லப்பா போன்றவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் சென்று விட்டார்.
தமிழக அமைச்சர் உதய–நிதி ஸ்டாலின், மீண்டும் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறியதை வரவேற்கி–றேன். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக் கும். அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப் படும். அந்தந்த மாநிலங் களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் இருக் கும்.
தமிழக அரசு நிராகரிக்கும் எந்த திட்டங்களையும் ராகுல் காந்தி தலைமையி–லான அரசு தமிழகத்தில் திணிக்காது. இதை முன்னெ–டுத்து இருக்கின்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலி–னுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி–னார்.
நிகழ்ச்சியில் அவருடன் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலை–வர் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.பழனிகுமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சத்யன், வித்யா–பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
- வளையல் விற்ற லீலையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக் கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவ–ராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.
இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழா–வையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைக–ளிலும் 4 ஆவணி மூல வீதி–களிலும் சுவாமியும், அம்ம–னும் பஞ்ச மூர்த்திகளுடன் உலா வந்து மண்டகப்படிக–ளில் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள்பாலிப்பார்கள்.
விழாவின் முக்கிய அம் சங்களாக திருவிளையா–டல் புராண தொடர்பான உற்ச–வங்கள் நடைபெறும். அதன் படி கடந்த 19-ந்தேதி கருங் குருவிக்கு உபதேசம் செய் தல், 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற் கிழி அருளல், 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளல், 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டி லீலைகள் நடந்தன.
நேற்று இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல் நடந்தது. இன்று (25-ந்தேதி, வெள்ளிக்கிழமை) வளை–யல் விற்ற திருவிளை–யாடல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மீனாட்சி அம்மன், சுந்தரேசு–வரரை தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ் வாக இன்று இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறு–கிறது. சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மதுரை மகாராணியாக மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வார். ஆவணி மூலத் திருநாளின் 7-ம் நாள் முதல் பங்குனி வரையான எட்டு மாதங்களுக்கு மதுரை மன்னராக சுந்தரேசப் பெரு–மான் ஆட்சிபுரிவார். இத–னைக் குறிக்கும் வகையி–லேயே சுந்தரேசப் பெருமா–னுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
நாளை (26-ந்தேதி) நரியை பரியாக்கியது, குதி–ரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந் தது நடைபெறும். அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக–ளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவா–தவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளு–வார்கள்.
அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக் கப்படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபு–ரம் வழியாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடு–வதற்கும் அனுமதி அளிக்கப் படும். 28-ந்தேதி விறகு விற்றல் லீலை நடைபெறும்.
- குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்றவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
- இது தொடர்பாக பெருங்குடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிரா–மத்தை சேர்ந்தவர் பாலமுரு–கன் (வயது 40). இவருக்கு திருமணமாகி ஜோதிமணி என்ற மனைவியும், 2 மகன் களும், ஒரு மகளும் உள்ள–னர்.
கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பால–முருகன் வழக்கமாக பெரிய–ஆலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அந்த பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு குளிக்க செல்வார். அதே–போல் இன்று காலை 7 மணிக்கு சென்றவர் தொட் டியில் தண்ணீர் இல்லா–ததால் அங்கு திறந்த நிலை–யில் இருந்த மின்சார பெட் டியில் சுவிட்சை இயக்கி–னார்.
அப்போது எதிர்பாராத வி–தமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலி–யானார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெருங்குடி போலீசார் பால–முருகனின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோத–னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி–றார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே–போல் தண்ணீருக்காக திறந்து கிடந்த பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 பேர் காயம் அடைந்தனர். இது இரண்டாவது சம்பவம் ஆகும்.
பெரிய ஆலங்குளம் பஞ்சாயத்து நிர்வாகத்தி–னரிடம் பலமுறை இது–தொடர்பாக புகார் அளித் தும் அவர்கள் கண்டுகொள் ளாததால் இன்று ஒருவர் உயிர்ப்பலி ஆகியிருப்பதாக பாலமுருகனின் உறவினர் கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறைந்த வயதில் மின்சாரம் பாய்ந்து பலியான பால–முருகன் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- லதா மாதவன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.
மேலூர்
அழகர் கோவில் அருகே கிடாரிப்பட்டிலுள்ள லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடந்தது. சேர்மன் டாக்டர் டத்தோ மாதவன் தலைமை தாங்கி னார். இதில் டாஃபே நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் மணி கண்டன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முருகன் வர வேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கினார்.
கல்லூரி முதல்வர்கள் வரத விஜயன், தவமணி, அனிதா, டீன் ஹேமலதா செயல் அலுவலர்கள் முத்துமணி மீனாட்சி சுந்தரம், காந்தி நாதன், பி.ஆர்.ஓ. பிரபாகரன் துறை தலைவர்கள், பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.
- கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் சாவில் மர்மம் நீடிக்கிறது.
- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையில் வடுகபட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இதுகுறித்து அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை கொன்று கிணற்றில் வீசியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13 நாட்களாகியும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இறந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டி ருந்ததால் கொலை செய்து கொண்டு வந்து இந்த கிணற்றில் வீசி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இறந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்து வரும் வழியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட காவல் நிலையங்களுக்கும் தகவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியாததால் சமீபத்தில் யாரேனும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன பெண் பற்றிய புகார் ஏதும் உள்ளதா? என்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இறந்த பெண், ரோஸ் கலர் சுடிதார், காட்டன் பேண்ட், அணிந்துள்ளார், காலில் கருப்பு கயிறு கட்டியுள்ளார்.
இது தவிர இந்த பெண்ணின் சடலத்தை காரில் தான் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத், உத்தர வின்பேரில், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் கொண்ட தனி படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பங்கேற்றார்.
- அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் பேய்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 250 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 6 ஆயிரத்து 394 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
ஊரக பகுதிகளை தன்னி றைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்க ளுக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகிய திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறலாம். இதற்காக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இடையபட்டி கண்மாய் பகுதிக்குள் சென்ற ஒருசில நிமிடங்களில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது.
- முயல் வேட்டைக்கு சென்று பலியான அனுமந்த் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அலப்பளாச்சேரி கிராமம். இதனையொட்டி இடையபட்டி கண்மாய் பகுதியில் ஏராளமான முயல்கள் வளைதோண்டி அதில் வசித்து வருகின்றன. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடிக்கடி வேட்டைக்கு சென்று பிடித்து வருவது வாடிக்கையாகும்.
இந்த நிலையில் அலப்பளாச்சேரியை சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்த் (வயது 17), அவரது நண்பர்கள் இடையபட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் கருப்பசாமி (21), மணி மகன் மனோஜ்குமார் (24) மற்றும் சிலர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் முயல் வேட்டைக்காக புறப்பட்டு சென்றனர். கடந்த சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்துவரும் பலத்த மழையால் கண்மாய்க்குள் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது.
இதற்கிடையே அவர்கள் இடையபட்டி கண்மாய் பகுதிக்குள் சென்ற ஒருசில நிமிடங்களில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு எழுந்தனர். பின்னர் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். அப்போது கண்மாய்க்குள் அனுமந்த், கருப்பசாமி ஆகியோர் மூச்சு, பேச்சின்றியும், மனோஜ்குமார் காயங்களுடன் முனகியவாறும் கிடந்தனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த கிராம மக்கள் 3 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அனுமந்த், கருப்பசாமி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மனோஜ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முயல் வேட்டைக்கு சென்று பலியான அனுமந்த் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். அதேபோல் இறந்த கருப்பசாமிக்கு திருமணமாகி சோலையம்மாள் என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முயல் வேட்டைக்கு சென்றவர்கள் மழை காரணமாக மின்சாரம் பாய்ந்து பலியானார்களா? அல்லது ஏற்கனவே வேட்டைக்காக யாராவது வைத்திருந்த மின் வேலியில் சிக்கி இறந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரவோடு இரவாக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அங்கு இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
- முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.
- சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மதுரை:
குடும்ப வறுமை காரணமாகவும், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவும் பட்டதாரிகள் முதல் படித்தவர்கள் வரை பலரும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதை கனவாக கொண்டுள்ளனர்.
அவர்களின் பசிக்கு இரைபோடும் வகையில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனங்கள் பல்வேறு ஆசைகளை அவர்களுக்கு விதைத்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கிறார்கள்.
அவ்வாறு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பலர் வேறு வழியின்றி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் ஏராளமாக அரங்கேறியுள்ளன. உற்றார், உறவினர்களிடம் கடன் வாங்கி, இருக்கும் நகைகளை அடமானம் வைத்து கிடைத்த பணத்துடன் ஆசைகளுடன் வெளிநாடுகளுக்கு பறக்கும் பலருக்கும் அது நிராசையாகவே இருந்துள்ளது.
இதில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏஜெண்டுகள் இதற்காக பணிபுரிந்து வருகிறார்கள். வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு பணி பெண்கள் தேவை மாதம் கை நிறைய சம்பளம் என்கின்ற விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.
ஆனால், இது பெரிய வேலை. என்பதனால் பலரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சுற்றுலா பயணிகளாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அவ்வாறு செல்லும்போது, எதாவது பிரச்சினை ஏற்பட்டால், அரசு உதவி செய்வது ரொம்பவே கடினம். இதற்குத் தமிழ்நாட்டிலேயே பல உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு வீட்டு வேலை என்று நம்பி வெளிநாட்டிற்குச் சென்ற தென் மாவட்டங்களைச் சார்ந்த இளம்பெண்கள் அங்கு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அதாவது வேலை என அழைத்துச் சென்று ஒரு கும்பல் பெண்களை பாலியல் தொழில் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஏலம் மூலம் முகம் தெரியாத நபர்களுக்கு விற்பனை செய்து விடுவதாகப் புகார் பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஓமன் நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் சென்று பெண்களை ஏலத்துக்கு விடுவதாகவும், அதில் மாட்டிக்கொண்ட தன் தாயை மீட்டு தர வேண்டுமென மகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து ஓமன் நாட்டிலுள்ள ஏஜெண்டு ருக்மணியை ரூ.2, 3 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ருக்மணி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வந்த 15-க்கும் மேற்பட்ட பெண்களை தனி அறையில், அதுவும் ஆண்கள் தங்கிருந்த அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினரை தொடர்பு கொள்ள முடியாததால் இதுகுறித்து ருக்மணியின் இரண்டாவது மகள் செல்வலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் நேரடியாக மனுவை கொடுத்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நானும் என் அக்காவும் கல்லூரியில் படித்து வருகிறோம். கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வருவதால் தன் தாயை வெளிநாட்டில் இருந்து அழைத்து வர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்றார்.
இதையடுத்து ஓமன் நாட்டில் தவித்து வந்த அந்த பெண் பல்வேறு சமூக அமைப்புகள் உதவியுடன் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டார். இதேபோல் ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
- நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. உண்ணாவிரதம் நடத்துவது நாடகம் என ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
- முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.
மதுரை
மதுரையில் ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான் 3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் நடைபெற்றது.
இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி இனிப்புகளை ஆட்டோ தொழிலாளர் களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
நிலவில் சந்திரயான் 1-ஐ மயில்சாமி என்ற தமிழர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2-ஐ வனிதா என்ற தமிழர் அனுப்பினார். தற்போது சந்திரயான் 3-ஐ நிலவில் அனுப்பிவெற்றி பெற்றுள்ளது. அதை விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழர் வீர முத்துவேல் அனுப்பி இன்றைக்கு உலக பெருமையை தமிழகத்திற்கு கிடைக்க செய்துள்ளார்.
நிலவின் தென் துருவம் ஆபத்தான பகுதியாகும். அதை சாதித்து காட்டியது நமக்கு பெருமையாகும் அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடி யார் இதற்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். தற்போது அவரின் ஆணைக்கிணங்க தற்போது கேக் வெட்டி இனிப்புகளை வழங்கப் பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் நீட்டை ரத்து செய்யும் கையெழுத்தை போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது பச்சைப்பொய் பேசுகிறார் கள்.
இதே எடப்பாடியார் காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பெறவேண்டும் என்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தார். ஆனால் இன்றைக்கு தி.மு.க. பச்சை பொய் பேசுவதை வாழ்க்கை யாகவும், அரசியல் கடமை யாகவும் கூறிவருகிறது.
தி.மு.க. அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி உள்ளனர், தற்போது ராகுல் பிரதமர் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் என்ற ரகசியத்தை கூறுகிறார்கள். ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது, நீட்டை எப்போது ரத்து செய்வது. இப்படி பச்சைபொய் பேசுவது ஏமாற்று நாடகமாகும். இதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அருள் ஆனந்தர் கல்லூரியில் ரத்ததானம்-உறுப்புதான முகாம் நடந்தது.
- ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் ரத்ததான சேவை இயக்கத்தின் பொன் விழாவை (1973- 2023) முன்னிட்டு 50 ஆண்டு கால ரத்ததான சேவையை நினைவுகூறும் வகையில், மெகா ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்வில், கல்லூரி முதல்வர் அன்பரசு வர வேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமர குருபரன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக ஜெர்ரி ரொசாரியோ கலந்து கொண்டு ரத்ததானத்தின் முக்கியத்துவம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரத்ததானம் செய்த கல்லூரி மாண வர்கள், கிராம மக்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. என்.எஸ். எஸ். திட்ட ஒருங்கி ணைப்பாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.
அருள் ஆனந்தர் கல்லூரியின் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 151 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. ஜெரி ரொசாரியோவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயக்கம், ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.
ஓராண்டில் (1973ம் வருடம்) அதிக எண்ணிக்கை யில் ரத்ததானம் செய்த மைக்கான சுழற்கோப்பை மற்றும் கேடயத்தை வென்றது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த டாக்டர் மு.கருணாநிதி தன்னார்வக் கொடையாளர் விழாவில் கல்லூரிக்கு கோப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரத்த தானச் சேவையை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவ ர்கள் பங்கேற்ற விழி ப்புணர்வு மாரத்தான் போட்டியை செல்லம்பட்டி யில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்து ராமன் தொடங்கி வைத்தார்.
விழாவில் கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி, மதுரை தோப்பூர் முதன்மை மருத்துவ அலுவலர் காந்திமதி நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 335 மாணவர்களும், 15 பணியாளர்களும் ரத்ததா னம் செய்தனர். 300 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.






