search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GRADUATE TEACHERS"

    • மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    • தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை தொழில்சார் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் கலைச் செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

    கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 28-ந்தேதி முதல் நேரடி வகுப்புகளாக தொடங்கப் பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடை பெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மதுரை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிழ்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (0452 -2564343) என்ற எண்ணிலோ அல்லது (peeomadurai27@gmail.com) மெயில் ஐ.டி.யில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து தேர்வுகளுக்கும் தயாராக ஏதுவாக புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெட் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி.
    • வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி. கலந்தாய்வு முடிந்த பின் உருவாகும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் உடனடி துணை பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

    பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்தும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போது தான் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காது. பதவி உயர்வுக்கு பின் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் கடந்த முதல் தேதி அடிப்படையில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்துவதன் வாயிலாக வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    கரூர்:

    சிபிஎஸ் (தன் பங்கேற்பு ஓய்வூதியம்) திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் சு.ரகு தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஈட்டிய விடுப்பு, ஊக்க ஊதியம் ஜன. 1 முதல் அகவிலைப்படி உயர்வு, தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு புதிய அரசாணை வெளியிடவேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவேண்டும். உயர்கல்வி முன்னேற்பு, பின்னேற்பு அனுமதியை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ×