பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்:

சிபிஎஸ் (தன் பங்கேற்பு ஓய்வூதியம்) திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் சு.ரகு தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஈட்டிய விடுப்பு, ஊக்க ஊதியம் ஜன. 1 முதல் அகவிலைப்படி உயர்வு, தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு புதிய அரசாணை வெளியிடவேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவேண்டும். உயர்கல்வி முன்னேற்பு, பின்னேற்பு அனுமதியை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com