search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு
    X

    மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

    • ஓணம் பண்டிகையையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • மல்லிகை 900 ரூபாய்க்கு விற்பனையானது.

    மதுரை

    ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி பூஜையை யொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் கொண்டா டப்படும் முக்கிய மான பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் அதிக அளவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்களும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    பண்டிகை கொண்டாட் டத்தில் மலர்களால் கோலமிட்டு பண்டிகையை வரவேற்பதால் இந்த பண்டிகைக்கு அதிகளவில் பூக்களின் தேவை இருக்கும். அதுபோல வரலட்சுமி பூஜைக்கும் மலர்களின் தேவை அதிகம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    தற்போது பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் பூக்களின் விலை கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு இயல்பான விலைக்கு விற்கப்பட்டன. அந்த வகையில் மல்லிகை பூ 500 முதல் 600 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. மேலும் இதர பூக்களான பிச்சி, முல்லை, கன காம்பரம், சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்களும் வழக்கமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டியும், வரலட்சுமி பூஜை தினத்தையொட்டியும் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள் ளது.

    அதன்படி இன்று காலை மல்லிகை பூ கிலோ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.முல்லை 700 ரூபாய்க்கும், பிச்சி 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டன. அரளி, பட்டன் ரோஸ், சிவந்தி ஆகிய மலர்கள் 300 ரூபாய்க்கும், வாடாமல்லி 150 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பூஜைக்கு தேவையான மற்ற வண்ண மலர்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்கள் தொடரும் என்று வியாபா ரிகள் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் பூக்களை வாங்க சென்ற பொதுமக்கள் சற்று தயக்கத்துடனே பூக்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×