என் மலர்tooltip icon

    மதுரை

    • மாவட்ட ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் தேசியவிளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை பிரிட்டானியா நீயூட்ரிசன் பவுன்டேசன் சார்பாக 14வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்டஅளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 8அணிகள் விளையாடினர்.இதன் இறுதிபோட்டியில் திருநகர் இந்திரகாந்தி மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட திட்டஅலுவலர் ரஞ்சிதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர் வினோத் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார். முடிவில் உடற்கல்விஆசிரியர் ராஜா நன்றிகூறினார். இதன்ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் செந்தில்குமார்,சுரேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தராஜ், வாஞ்ஜிநாதன், தேவிப்ரியா, பானுப்ரியா, ஜஹீன்கௌசர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணியை தொடரலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    மதுரை

    மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆதி கோரக்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை யான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் 2 சமூகத்திற்கு சார்ந்த கோவில். இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலை யத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் கோவில் நிர்வாகம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது நடைமுறை. அதன் அடிப்படையில் இந்த வருடம் வரும் செப்டம்பர் 3-ந்தேதி நடத்துவதற்கு அமைக்கப் பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் திருப்பணி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்து தனி நீதிபதியிடம் தடை உத்தரவு பெற்றார்.

    இதனால் கும்பாபிஷேக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து அனைத்து தரப்பு மக்களும் நாங்களும் வழிபாடு செய்வதற்கு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட அதிகாரி களால் கும்பாபிஷேக பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அமர்வில் விசார ணைக்கு வந்தது. விசா ரணை செய்த நீதிபதிகள் தற்போது கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ளது. இதனை எதிர்த்து எதிர்மனுதாரர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

    மேலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்ப ணிகள் செய்ய தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது.

    கோவில் கும்பாபிஷேக திருகுழுபணிகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்யலாம். திட்டமிட்டபடி கோவில் கும்பாபிஷேகத்தை 3.9.2023 நடத்திக் கொள்ள லாம் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் கும்பாபிஷேக பணிக்கு யாரேனும் தடையாக இருந்தால் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    • தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.
    • மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரம்மாண்ட முறையில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு கடந்த 20-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் அ.தி.மு.க. தலைமை எதிர்பார்த்தது போல தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும், வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்றும் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நேற்று மாலை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் அழகர் கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக சேலத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரைக்கு காரில் புறப்பட்டார். அவர் காலை 8.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு நுழைவாயில் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க, அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க என்று திரண்டு நின்ற தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை கொடுக்கப்பட்டது.

    மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதி, முக்குருணி விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள், பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட சம்பவம் மதுரை அ.தி.மு.க. தொண்டர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி பின்னர் காரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகாலை முதலே திரண்டதால் அந்த பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    • திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜ்சத்யன் தலைமையில்அ.தி.மு.க.வினர் மனு அளித்துள்ளனர்.
    • சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிடுவார்.

    மதுரை

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கடந்த 21ம் தேதி தனியார் தொலைக் காட்சி யில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை கண் டித்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர் காவல் துறை ஆணையரிடம் மண் டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் புகார் மனு அளித் துள்ளார்.அதில் அவர் கூறி யிருப்பதாவது:-

    கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோ னி மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளை விக்கும் வகையில் சென்னை திருவொற்றியூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

    தி.மு.க. ஆட்சியில் அதி காரிகளுக்கும், மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திண்டுக்கல் லியோனி மேடையில் பெண் களை தரம் தாழ்ந்து இழிவாக பேசி அதன் மூலம் பணம் சம்பா திக்கிறார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து கொண்டு தமிழ கத்தின் நவீன சிற்பியாக இருந்த அம்மாவை விமர்சி ப்பது மிகவும் கண்ட னத்துக்குரியது. மாணவர்க ளுக்கு பாடத் திட்டத்தை வகுக்க கூடிய ஒருவரே ஆணா திக்கதுடன் பெண்களை தரைகுறைவாக பேசியி ருப்பது கடும் கண்ட னத்துக்கு உரியது.

    அவரை கைது செய்ய வேண்டும் என்று காவல் துறை ஆணையரிடம் புகார் மனுகொடுக்கப்பட்டுள்ளது அரசு உடனடியாக பாட நூல் தலைவர் பதவியில் இருந்து அவரைஉடனே நீக்க வேண்டும்.

    திருவள்ளுவர் சேர்ந்த தி.மு.க. பெண்மணி, தி.மு.க. வில் பெண்களுக்கு பாது காப்பு இல்லை, பெண்கள் நிம்மதியாக இல்லை என் பேசியது வலைதளங்களில் வந்துள்ளது.

    இந்த ஆட்சியில் பெண் போலீஸ் கூட பாதுகாப்பு இல்லை பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் மாமுல் கேட்கின்றனர்.

    வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் துடைப் பம் வைத்து சுத்தம் செய் வோம். அதுபோல தொடர்ந்து இது போன்ற இழிவாக குப்பைபோல் பேசினால் துடைப்பத்தால் அவருக்கு கழகத்தினர் வரவேற்பு அளிப்பார்கள்.

    கடந்த மூன்று நாட்களாக லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப் பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தி.மு.க.வினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் பெண்களுக்கு எதிராக வார்த்தைகள் இருந் தால் போலீஸ் தானாகவே நடவடிக்கை எடுக்கலாம் என சட்டம் உள்ளது என அதையும் தெரிவித்துள் ளோம். எனவே திண்டுக்கல் லியோனி மீது வழக்குபதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்பொழுது மெட்ரோ ெரயில் திட்டத்தில் அம்மா பெயரை இருட்டடிப்பு செய்ததை கண்டித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண் டனத்தை தெரிவித்துள்ளார்.இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்தடை ஏற்படும் பகுதிகள் மின் வாரியம் அறிவித்துள்ளது.
    • இந்த தகவலை மதுரை மேற்கு மின் செயற்பொறியா ளர் லதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏ.பி.கே. மெயின் ரோட்டில் நந்த வனம், ஜெயவிலாஸ் பாலம் முதல் வெற்றி திரையரங்கம் வரை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சின்னக்கண் மாய், தென்றல் நகர், மணி கண்டன் நகர், பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர் தெரு, அகஸ்தியர் தெரு, கதிர்வேல் தெரு, மயான ரோடு, காளி யம்மன் கோவில் தெரு, கணக்கு பிள்ளை தெரு, அம்மச்சியார் அம்மன் தெரு, மஹாலிங்கம் சாலை நல்லதம்பி தோப்பு, இந்திரா நகர், திருமாள் நகர், பாண்டி யன் நகர், கரில்குளம், ராம் முனி நகர் 1 முதல் 3 வரை, யோகேந்திரா நகர், ராம்ராஜ் காட்டன், தினமணி நகர், பெரியார் நகர், நூர் நகர், கோவில் பாப்பாகுடி மெயின் ரோடு, அய்யனார் கோவில்தெரு, ஏ.ஏ. மெயின் ரோடு, மேல பொன்னகரம் 2 முதல் 8-வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 தெரு வரை, ஞான ஒளிபு புரம், விசுவாசபுரி 1 முதல் 5-வது தெரு வரை, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி கள், இ.எஸ்.ஐ. மருத்துவ மணை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ் புரம், களத்து பொட்டல், பெரிய சாமிகோணர் தெரு, தத்தனேரி மெயின் ேராடு முதல் மைதானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை மேற்கு மின் செயற்பொறியா ளர் லதா தெரிவித்துள்ளார்.

    • பள்ளி விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள் வழங்கி னார்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் ஒய்.டபிள்யூ.சி.ஏ. பள்ளியின் 56-வது விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பள்ளி தாளாளர் நிர்மலா சந்தோஷம், முதல்வர் மரகதம் ஜெயசீலி ஆகியோர் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டு தல், கோகோ போன்ற பல்வேறு விளையாட்டு களில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

    • அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக திடீர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் மாநிறம், பிஸ்கட் கலர் கருப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும் வெள்ளை கலர் வேஷ்டியும் அணிந்திருந்தார்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் மதுரை வடக்காவணி மூலவீதி பகுதியில் உடல் நலம் சரியில்லாமல் படுத்து கிடந்த வரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இறந்தவர் பெயர் வெங்கட்ராமன் (வயது 75), இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து திலதர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே போல் மதுரை செனாய் நகர் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக மதிச்சியம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் ரோஸ் கலர் அரக்கை சட்டையும், ப்ளூ கருப்பு கலர் கட்டப்பட்ட கைலியும் அணிந்திருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளர்ச்சி திட்டபணிகளை ஆணையாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
    • மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கிழக்கு மண்டலம் 8-வது வார்டில் தாகூர் நகர், ஆர்.ஆர்.நகர், கம்பர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் 8-வது வார்டு சந்தானம் நகர் மெயின் தெருக்கள், 11-வது வார்டு ஜி.ஆர்.நகர் 5, 6-வது தெருக்க ளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள தார் சாலை பணிகள், சந்தானம் நகர் உள் தெருக்கள், மெயின் கிழக்கு தெருக்களில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள தார் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மாட்டுத்தாவணி சர்வேயர் காலனி மெயின் சாலையில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திருப்பாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் காளிமுத்தன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி செயற்பொறி யாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேச பாண்டியன், உதவிப்பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆர்பாட்டத்தில் மதுரை நகரில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரையில் மாநில அரசை கண்டித்து மாநகர் மாவட்ட பா.ஜ.க. மகளி ரணி, இளைஞரணி மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பில ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலா ளர்கள் ராஜ்குமார், பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்பாட்டத்தில் மதுரை நகரில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நடைபெறுகிற ஊழலை தடுத்த நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி தலைவர் ஜூவா நகர் மீனா, இளைஞணி தலைவர் பாரிராஜா, கூட்டுறவு பிரிவு தலைவர் செந்தில்வேல் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தி னம், மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மணிமாலா உள்பட ஏராள மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.31 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார்.
    • பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    என்.ஹெச்.எம். மூலம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட 2 மாடி கட்டிடம் கட்டப்ப ட்டு வருகிறது. இந்த கட்டிட் பணிகளை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதத்திற்கு 130 விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்கு உள்ளானவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்க்க 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. எனவே மரண மடையும் சதவீதமும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க 2 முயற்சிகளை மேற்கொண்டோம்.

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடைபெறும் 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி னோம். அதன் விளைவாக இப்போது ரூ.100 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலூர் அரசு மருத்துவ மனையில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு ரூ.31 கோடி மதிப்பீட்டில் 150 படுக்கை கள், நவீனப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கட்டி டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட கட்டடப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இத்திட்டங்கள் முழுமை பெறும் போது மேலூர் பகுதியில் விபத்து மற்றும் விபத்து மரணங்கள் பெறு மளவு குறையும். பொது மருத்துவ வசதியும் பெரு மளவு முன்னேறி இருக்கும். மருத்துவத்து றையில் மற்ற பகுதியைவிட முன்னேறிய பகுதியாக முன்னுதார ணமான பகுதியாக மேலூர் மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் முகமது யாசின், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் வெங்கடாசலம், மேலூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயந்தி, மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், தாலுகா செயலாளர் கண்ணன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், நகர்மன்ற உறுப்பினர் சர்மிளா பேகம் அப்துல் சலாம், மற்றும் டாக்டர்கள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • எர்ரம்மாள், தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏற்பாடுகளை திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருந்ததியர் தெருவில் ஏர்ரம்மாள் அம்மன், தொட்டிச்சி அம்மன், வலம்புரி விநாயகர், சந்தன கருப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.
    • மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசுமேல் நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை யாசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேட பட்டி மணிமாறன் கலந்து கொண்டு 79 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். அப்போது அவர் பேசுகை யில், அரசு பள்ளியில் படிக்கும் நீங்கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறீர்கள். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார்.

    இந்த மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் எடுத்துரைத்து உரிய தீர்வு காணப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், நகராட்சி கவுன்சி லர்கள் சின்னசாமி, வீரக்கு மார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், பெல்ட்முருகன், ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், ஜெய்லானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×