search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்
    X

    வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

    • வளர்ச்சி திட்டபணிகளை ஆணையாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
    • மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கிழக்கு மண்டலம் 8-வது வார்டில் தாகூர் நகர், ஆர்.ஆர்.நகர், கம்பர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் 8-வது வார்டு சந்தானம் நகர் மெயின் தெருக்கள், 11-வது வார்டு ஜி.ஆர்.நகர் 5, 6-வது தெருக்க ளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள தார் சாலை பணிகள், சந்தானம் நகர் உள் தெருக்கள், மெயின் கிழக்கு தெருக்களில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள தார் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மாட்டுத்தாவணி சர்வேயர் காலனி மெயின் சாலையில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திருப்பாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் காளிமுத்தன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி செயற்பொறி யாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேச பாண்டியன், உதவிப்பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×