என் மலர்tooltip icon

    மதுரை

    • மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த 4-ந்தேதி பாலாலயம் நடக்கிறது.
    • வெளிநாடுகளில் இருந் தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்

    மதுரை

    கோவில் மாநகரமாக போற்றப்படும் மதுரையின் அடையாளமாக திகழ்வது மீனாட்சி அம்மன் கோவில். ஆண்டின் அனைத்து மாதங் களிலும் பல்வேறு திரு–விழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங் கள், வெளிநாடுகளில் இருந் தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷே–கம் நடத்தப்படும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு–கள் செய்யப்பட்டு வருகின் றன.இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம் மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் வருகிற 4-ந்தேதி பாலாலயம் நடைபெற உள்ளது.

    முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவி–லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதி–யில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடை–பெறுகிறது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவி–லில் ரூ.25 கோடியில் திருப் பணிகள் நடத்தவும், வீர–வசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத் தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப் படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடை பெறும்.

    மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்கு ரார்ப் பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜ–கோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடை பெறும்.

    4-ந்தேதி காலை 7.15 மணிக்கு மேல் 9.05 மணிக் குள் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண் டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர் ணாஹூதி, தீபாராதனையு–டன் கலசங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்த–ரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலஸ்தாபன மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சிகள் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடை பெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கோவில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், கண்காணிப் பாளர் பானுமதி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • மேடை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது.
    • மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதி நாவினிபட்டி 4 வழிச்சாலை அருகே நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி செய்து வருகிறார்.

    விழாவுக்கான மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான முகமது யாசின், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் துரண சேர்மனுமான பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலூர் நகர்மன்ற துணைத்தலைவர் இளஞ்செழியன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த மூன்று ஐந்து வருடங்களாக என்னுடைய வேதனையை முதல்வர் கேட்கவில்லை
    • தனது தொகுதியில் புதிதாக சேர்ந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறேன்

    மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க சிவராஜ் சிங் சவுகான் வியூகம் வகுத்து வருகிறார். பா.ஜனதாவும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

    இந்த நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    மத்திய பிரதேசம் ஷிவ்புர் மாவட்டத்தில் உள்ள கோலாரஸ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., வீரேந்திர ரகுவான்ஷிதான் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் விஷ்னு தத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    மேலும், தான் கடந்த மூன்று- ஐந்தாண்டுகளாக சந்தித்து வந்த வேதனை குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரிவித்திருந்தேன். அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாலியர்- சம்பல் பகுதியில் என்னைப் போன்ற கட்சியினர், புதிதாக பா.ஜனதா கட்சிக்கு வந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறோம். நாங்கள் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்காக உழைத்தவர்கள்.

    கோலாரஸ் பகுதிகளில் ஊழல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, என்னால் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. என்னையும், என்னுடன் பணியாற்றுபவர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, 2020-ல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த போது, விவசாயிகளுக்கான 2 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி பற்றி பேசவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • வாழ்வின் அனைத்து அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புத்துணர்வு பெற சுற்றுலா உதவும் என்று கல்லூரி முதல்வர் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திரு–மங்கலம் அருகே ஆலம்பட்டி–யில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுலா மேலாண்மை, ஓட்டல் மேலாண்மை, பி.பி.ஏ., ஏவியேசன், ஆஸ்பி–டல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. போன்ற பட்ட படிப்பு–கள் கற்றுத் தரப்படுகிறது.

    ஏராளமான கேரள, வட மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு பயின்று வருகிறார்கள். கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சகிலா ஷா ஆகி–யோரின் ஆலோசனை பேரில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் சுற்றுலா பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் தமிழ்த்துறை சார்பில் நடத் தப்பட்டது.

    கருத்தரங்கைத் துவக்கி வைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், உல களவில் சுற்றுலாத்துறை மிகப் பெரியளவில் வளர்ந் துள்ளது எனவும், மாலத்தீவு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுலாத்துறை வருவாய் ஈட்டும் முக்கிய துறையாக இருக்கிறது என–வும், மனிதன் தன் வாழ்வில் உண்டாகும் அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புத்து–ணர்வு பெற சுற்றுலா உத வும் என்பதில் துளியள வும் ஐயமில்லை எனவும் கூறி னார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரி யின் சுற்றுலாத்துறை தலை வர் டாக்டர். நளாயினி, உலகின் பல சுற்றுலா தலங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத் துரைத்து சுற்றுலாத்து–றையில் குவிந்து கிடக்கின்ற வேலை வாய்ப்புகள் பற்றி–யும் எடுத்துரைத்தார். பின் னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித் தார்.

    முன்னதாக, தமிழ்த்து–றைப் பேராசிரியர் ஜோதி வரவேற்றார். இக்கருத்த–ரங்கில் தமிழ் துறைப் பேரா சிரியர்கள் சிங்கராஜா, ஆறு முகஜோதி, இன்பமேரி, சிவசுந்தரி, வணிகவியல் துறை பேராசிரியர் அப்துல்லா, வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் மணி மேகலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பேராசிரியர் க–ளும்,

    தமிழ், வரலாறு, வணிகவி யல், ஓட்டல் மேனேஜ்மென்ட், பாரன்சிக் சயின்ஸ் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ராமுத்தாய் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    • பிடிபட்ட திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து செல்போன்களை மீட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரவி, கருப்பையா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் திருடன்...திருடன்... என கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    எல்லீஸ் நகர் பாலம் கீழ்ப்பகுதியில் பிடிபட்ட திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து செல்போன்களை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் திடீர்நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் பறிக்க அவருடன் மேலும் 4 பேர் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார்? என்பது தொடர்பாகவும், வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏற்கனவே அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு மூலை முடுக்கு முதல் கிராமம், பட்டிதொட்டி வரை சென்றடைந்தது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சாமியை தரிசனம் செய்தேன்.

    கேள்வி:- கொடநாடு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுக்கம் ஏற்படுகிறது என்று தி.மு.க. அதிகாரப்பூர்வ முரசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார்களே? உண்மையை சொல்லத் தயார் என்று அவர் ஏன் சி.பி.சி.ஐ.டி.க்கு வரவில்லை? வந்திருந்தால் நம்பலாம்? என்று அதில் கூறி இருக்கிறார்களே?

    பதில்:- நான் சட்டசபையிலே இதுபற்றி கேட்டேனே? அப்போதே முதலமைச்சர் சொல்லியிருக்கலாம். பல கேள்விகள் எழுப்பினேன். அப்போது ஏன் வாய்மூடி இருந்தார்கள். இவர்கள் வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள்.

    ஒரு முதலமைச்சர் இருக்கிறபோது பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேர் இறந்தார்கள். அதையெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோமா? திருப்பி கொண்டு வரமாட்டோமா?

    அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒரு சம்பவம் நடைபெறுகிறது. நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறுகிறது. இதை மட்டும் ஏன் மையமாக வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஏற்கனவே அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    நான் இதுபற்றி அடிக்கடி தெளிவுபடுத்தி உள்ளேன். இதுபற்றி சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். ஏன் அவர்கள் அதைப்பற்றி மட்டும் குறிப்பிடவில்லை?

    அந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு. குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசு. வழக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்றது. அப்போது அந்த குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்கு, ஆஜரானது தி.மு.க. வழக்கறிஞர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடி இருக்கிறார். இதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறார்கள். நீங்களும் வெளியிடுவது கிடையாது. தெளிவுப்படுத்தியது கிடையாது.

    இதில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள். இதில்தான் சந்தேகம் ஏற்படுகிறது.

    நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். இந்த அரசுக்கு சொல்கிறேன். இதை ஏன் சி.பி.ஐ. விசாரிக்க கூடாது. சி.பி.ஐ.க்கு உத்தரவிடுங்கள். சி.பி.ஐ. விசாரிக்கட்டும். நீங்கள் தான் சந்தேகம் இருக்கிறது என்கிறீர்கள். சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படையுங்கள்.

    இந்த ஜாமீன்தாரருக்கும், கொலை குற்றவாளிக்கும் என்ன சம்பந்தம்? இந்த கொலை குற்றவாளிகள் எல்லோரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல் என இப்படி கொடும் குற்றம் புரிந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு கேரளாவில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அப்படி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கொடும் குற்றவாளிகளுக்கு தி.மு.க. வழக்கறிஞர் ஆஜராகி வாதாடி வருவதற்கு என்ன காரணம்?

    தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஜாமீன்தாரராக இருப்பதற்கு என்ன பின்னணி, என்ன தொடர்பு இருக்கிறது? அதுதான் எங்களது கேள்வி. வழக்கு நடந்த சூழலில் இடையில் 15 மாத காலம் கொரோனா காலத்தில் நீதிமன்றம் நடைபெறவில்லை. அதுதான் காலதாமதம். பிறகு இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் இதை விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லி ஐ.ஜி. தலைமையில் விசாரணையை மேற்கொண்டனர்.

    அந்த ஐ.ஜி., அவருக்கு கீழ் டி.ஐ.ஜி., எஸ்.பி., ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., இத்தனை பேர் இருந்து விசாரித்து நீதிமன்றத்தில் சுமார் 790 பக்கம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும் 90 சதவீதம் வழக்கு முடிந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தகவல்.

    அப்படியிருக்கும்போது ஏன் மறுபடியும் சி.பி.சி.ஐ.டி.க்கு போகிறீர்கள். உங்கள் அரசாங்கம் தானே நியமித்தது? அதில் என்ன சந்தேகம்?

    ஒரு ஐ.ஜி. தலைமையில் இவ்வளவு விசாரணை மேற்கொண்ட பிறகு 10 சதவீதம் விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? ஆனாலும் எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியவில்லை. அதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை அடிக்கடி இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதை அடிக்கடி நீங்களும் கேட்க நானும் பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    இதுபற்றி சட்டமன்றத்திலும் நேருக்கு நேர் முதலமைச்சரிடம் கேட்டுவிட்டேன். வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே? உங்கள் அரசாங்கத்தின் விசாரணை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?

    இப்போது இவர் முதலமைச்சராக இருக்கிறார். ஒரு கொலை நடந்தால் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டினால் அவர் ஏற்றுக்கொள்வாரா?

    கேள்வி:- ஏன் பதறுகிறீர்கள் என்று கேட்கிறார்களே?

    பதில்:- நான் பதறவில்லை. நான் பலமுறை அறிக்கை வாயிலாக சொல்லிவிட்டேன். பேட்டியின்போதும் விளக்கமாக கூறியுள்ளேன். நீங்கள் ஏன் அந்த ஜாமீன்தாரரை விசாரிக்க மறுக்கிறீர்கள்? அதில் தானே உண்மை வெளிவரும்.

    குற்றம் புரிந்தவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். கொடும் குற்றம் புரிந்த இவர்களுக்கு தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் எதற்கு ஜாமீன்தாரராக இருக்கிறார்? அதுதான் மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது.

    கேள்வி:- உண்மை வெளி வந்துவிடும் என சி.பி.ஐ. விசாரணைக்கு தி.மு.க. தயங்குகிறார்களா?

    பதில்:- அப்படித்தான் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
    • திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    மதுரை

    பெருங்குடி கணபதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முத்துராஜா (வயது 30). இவருடைய சகேகாதரர் அங்கு குமார் (32). இவர்கள் இருவரும் பெண்கள் தனியாக குளிக்கும் போதும் அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்த னமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தனர்.

    இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் விஷேசத்தில் அவர்கள் கலந்துகொண்டனனர்.அங்கு கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்தது.அவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அந்தப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரி டம் கூறினார். அவர்கள் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துராஜா, அங்கு குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் அவர்கள் பலபெண்களை வீடியோ படம் எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளி யானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
    • மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரவி, கருப்பையா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கி ருந்து ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் திருடன்...திருடன்... என கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    எல்லீஸ் நகர் பாலம் கீழ்ப்பகுதியில் பிடிபட்ட திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து செல்போன்களை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் திடீர்நகர் போலீசில் ஒப்படைக்கப் பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் பறிக்க அவருடன் மேலும் 4 பேர் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார்? என்பது தொடர்பாகவும், வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • வண்டியூர் கண்மாய் பிரதான கால்வாயில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியது.
    • ஒருவித ரசாயன நெடி வீசுகிறது.

    மதுரை

    மதுரை நகரில் குடிநீர் ஆதாரமாக மாடக்குளம், வண்டியூர், செல்லூர் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாயை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பு என தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனால் கண்மாய் நீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் இருந்து வைகையாற்றுக்கு பிரதான நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

    மேலும் ஒருவித ரசாயன நெடியும் வீசுகிறது. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வகையில் பிரதான கால்வா யில் சாயப்பட்டறைகள் மற்றும் பெயிண்ட் நிறுவ னங்கள் கழிவுநீரை கலந்ததா? என தெரிய வில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். 

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.
    • ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை வலையங்குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த மாநாடு வெற்றி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.

    கிழக்கு நுழைவு வாயில் வழியாக கோவிலுக்குள் சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த அவர் பிரகாரங்கள் வழியாக சுற்றி வந்தார். பொற்றாமரை குளத்தின் படிக்கட்டுகளில் நின்றவாறு கோவில் அழகை ரசித்தார்.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இன்று இரண்டாவது நாளாக அவர்கள் சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டனர். இதையடுத்து கனிமொழி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி கோவிலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் கனிமொழி எம்.பி.யும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். இருவரும் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    ஆனால் இருவரும் வெவ்வேறு பிரகாரங்களில் இருந்தனர். அவர்கள் சந்திக்கவில்லை என்று உடன் சென்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் முதலில் எடப்பாடி பழனிசாமியும், அதன் பிறகு கனிமொழி எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் கோவிலை விட்டு வெளியே வந்து புறப்பட்டு சென்றனர்.

    இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற நிலை குழுவினர் கனிமொழி தலைமையில் ஆய்வு நடத்தினர்.
    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை யில், குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கனிமொழி கலந்துரையாடி னார். தொடர்ந்து மதுரை யானைமலை ஒத்தக்கடை யில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை பார்வை யிட்டனர்.

    பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் கனிமொழி கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் தொடங்கி மதுரை மாவட்டம் வரை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருகிேறாம். இந்த ஆய்வின் போது களிமண் பொம்மை தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது கலெக்டர் சங்கீதா, நாடாளுமன்ற இயக்குநர் கல்யாண சுந்தரம், நாடாளுமன்ற நிலைக்குழு அலுவலர் சுனில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று மாலை 6.15மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்பு சாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    மேலும் இதன் முக்கியவிழாவான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 148-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 23-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்றுமாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியை யும் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ்துரைராஜ் நடைபெற உள்ளது. இரவு 7மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணவிளக்குகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது.

    9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இந்த திருவிழா ஏற்பாடு களை எஸ்.வி.டி.அதிபர் வளன், எஸ்.வி.டி. நிர்வாகி ஆன்றனி வினோ, உதவி பங்குதந்தை அடைக்கலராஜ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்ற னர்.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ் பெக்டர் முத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகே சன், மாயாண்டி, உதயக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட போலீசார்கள் செய்து வருகின்றனர்.

    ×