தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், ம.பி. எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இருந்து விலகல்

கடந்த மூன்று ஐந்து வருடங்களாக என்னுடைய வேதனையை முதல்வர் கேட்கவில்லைதனது தொகுதியில் புதிதாக சேர்ந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறேன்
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், ம.பி. எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இருந்து விலகல்
Published on

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க சிவராஜ் சிங் சவுகான் வியூகம் வகுத்து வருகிறார். பா.ஜனதாவும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மத்திய பிரதேசம் ஷிவ்புர் மாவட்டத்தில் உள்ள கோலாரஸ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., வீரேந்திர ரகுவான்ஷிதான் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் விஷ்னு தத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், தான் கடந்த மூன்று- ஐந்தாண்டுகளாக சந்தித்து வந்த வேதனை குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரிவித்திருந்தேன். அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாலியர்- சம்பல் பகுதியில் என்னைப் போன்ற கட்சியினர், புதிதாக பா.ஜனதா கட்சிக்கு வந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறோம். நாங்கள் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்காக உழைத்தவர்கள்.

கோலாரஸ் பகுதிகளில் ஊழல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, என்னால் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. என்னையும், என்னுடன் பணியாற்றுபவர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, 2020-ல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த போது, விவசாயிகளுக்கான 2 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி பற்றி பேசவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com