என் மலர்
மதுரை
- திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.
- சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று நடைபெறும். அதன்படி நேற்று இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. இதற்காக வைகை ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டு அதில் ஏடுகளை மிதக்கவிடப்பட்டது. அப்போது ஏடுகள் எதிரேறி வந்தன. பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ஏடு எதிரேறிய வரலாற்றை ஓதுவார்கள் விளக்கினர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன்செட்டியார், கோவில் பணியாளர்கள் பிரதோஷ கமிட்டியினர் கலந்து கொண்டனர். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
- ஊத்துக்குளி ராஜாராமன், திருவேடகம் பெரிய கருப்பன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரையில் தி.மு.க. வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி ராஜாராமன், திருவேடகம் பெரிய கருப்பன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்கரை ஊராட்சி செயலாளர் சோழராஜா வரவேற்றார். கூட்டத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேசினார். கூட்டத்தில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, டிசம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு ஆகியவற்றில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தான லட்சுமி, மாவட்டஇளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, இளைஞர் அணி பால் கண்ணன் கார்த்தி, மகளிர் அணி இந்திரா காந்தி, ஆதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நள்ளிரவு நேரத்தில் நடந்த இக்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உரங்கான்பட்டியை அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்தனர்.
இதில் மூத்த மகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் சத்தியமூர்த்தி (வயது 27) என்பவரும் வௌிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.
சத்தியமூர்த்தி விளையாட்டு, மஞ்சு விரட்டு, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் பல்வேறு ஊர்களில் நடந்த பந்தயங்களில் அவர் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சத்தியமூர்த்தி வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சத்தியமூர்த்தி அவர்களை பார்த்ததும் பதட்டம் அடைந்தார். பின்னர் அவர் உடனே வீட்டுக்குள் சென்று தப்ப முயன்றார்.
ஆனால் சுதாரித்துக் கொண்டு சுற்றி வளைத்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தியை துரத்தி சென்று பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வீட்டின் வெளியே மகனின் அலறல் சத்தம் கேட்டு கதவை திறந்து வந்த தாய் மல்லிகா, சத்தியமூர்த்தி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி மற்றும் கீழவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சத்தியமூர்த்தியை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இக்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- 2013-ம் ஆண்டு மட்டும் 111 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மதுரை:
சென்னையை சேர்ந்த பீட்டர்ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இந்தியா- இலங்கை நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையில், பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த 1983-ம் வருடம் முதல் 2005-ம் ஆண்டு வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது வரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை தமிழக மீனவர்கள் இழந்துள்ளனர்.
2013-ம் ஆண்டு மட்டும் 111 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 19.6.2023 அன்று 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 21.6.2023 அன்று 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதாவது, 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே, அந்த உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என மத்திய அரசு வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுக்கு உட்பட்டது. இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- நரம்பியல் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த நோயாளிக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் குழு சாதனை படைத்தது.
மதுரை
தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை யாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தில் நீரிழிவு, சிறுநீரக நோய், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் உள் ளிட்ட பல்வேறு நோய் பாதித்த 69 வயதான ஆண் நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூளை செயல்பாட்டில் சிரமங்கள், தன்னிச்சையான நடுக்கங்கள், திடீரென ஏற்படும் தசை வெட்டியி ழுப்பு, நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் 4 மாதங்களாக இருந்துள்ளது. வேறு இடங்களில் குணப்ப டுத்த இயலாத பார்கின்சன் நோயும் இருந்தது. இதைய டுத்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நரம்பி யல் நிபுணர் டாக்டர். நரேந் திரன், மூளை – நரம்பியல் துறை தலைவரும், முது நிலை நிபுணருமான டாக்டர். விஜய் ஆனந்த் ஆகி யோர் தலைமையிலான குழுவினர் அவரை பரிசோ தித்து, சிகிச்சை திட்டத்தை உருவாக்கியது. அதன்படி அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் அவர் பூரண குணமடைந்தார்.
இதுபற்றி டாக்டர் நரேந்தி ரன் கூறியதாவது:-
பார்கின்சனிசம் என அழைக்கப்படுவது, நரம்பி யல் சிதைவு கோளாறுகளின் ஒரு தொகுப்பாகும். அவ ருக்கு இமேஜிங் மற்றும் பெட் சோதனைகளும் மேற் கொள்ளப்பட்டன. மேலும் ஒரு புதிய எதிர்ப்பு உயிரி இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இவையெல் லாம் சேர்ந்து இந்நோயா ளியை குணப்படுத்துவதற்கு எங்களுக்கு உதவின என் றார்.
நரம்பியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபு ணருமான டாக்டர். விஜய் ஆனந்த் கூறுகையில், இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட போது, குமட்டல், பொதுவான உடல் நடுக்கங் கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப் பதாக நோயாளி கூறினார். அவருக்கு செய்யப்பட்ட விரிவான மருத்துவ பரிசோ தனைகளில் ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறை வாக இருப்பது தெரிந்தது. ரத்தசோகை பாதிப்பும் இருந்தது. மூளை முதுகுத் தண்டு நீரை பரிசோதித்த போது வெள்ளை ரத்த அணுக்களும், புரத அளவு களும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. பல் வேறு சாத்தியமுள்ள நோய றிதல் முடிவுகளை பரிசீலிப் பதற்கு இந்த ஆய்வு முடிவு கள் தூண்டின என்றார்.
இவரது பாதிப்பிற்கு உறுதியான காரணத்தை அறிய ஒரு நுட்பமான நோயறிதல் செயல்முறை மருத்துவர்கள் குழுவால் தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஸ்டீ–ராய்டுகள், சிரை ஊடாக செலுத்தப்ப டும் இமுனோ–குளோபிளின் கள் ஊசி மருந்து ஆகிய வற்றை உள்ள–டக்கிய ஒரு விரிவான செயல் உத்தியை பல்வேறு மருத்துவ நிபுணர் களை உள்ளடக்கிய குழு இந்நோ–யாளிக்காக வடிவ–மைத்தது. மிக கவனமாக திட்டமிடப்பட்ட இந்த அணு குமுறை யானது, நோயாளி யின் நிலைமையில் கணிச மான முன்னேற்றம் ஏற்பட வழி வகுத்தது என்றார்.
டாக்டர். நரேந்திரன் கூறுகையில், மருத்துவ நோயறிதலிலும், சிகிச்சையி லும் அதுவும் குறிப்பாக, நுட்பமான, அரிதான மருத் துவ பாதிப்பு நிலைகளை மேலாண்மை செய்வதில் துல்லியமான விளிம்பு நிலை யின் முக்கியத்துவம், மருத்து வம் மற்றும் நோயா ளியின் நலனை மையமாக கொண்டு வடிவமைக்கப்ப டும் சிகிச்சை பராமரிப்பில் நாங்கள் கொண்டிருக்கும் தளராத பொறுப்புறுதி நேர்மறையான சிகிச்சை விளைவுகளை அடைவதில் மிக முக்கிய பங்காற்றியி ருக்கிறது என்றார்
மீனாட்சி மிஷன் மருத்து வமனை மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். பி.கண்ணன் கூறுகையில், இந்த சிக்கலான நேர்வில் வெற்றிகர சிகிச்சை மேலாண்மை, மீனாட்சி மிகச்சிறந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் முழுமையான அர்ப்பணிப் பிற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது. மூளை நரம்பியல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத் தின் முன்னணி சிறப்பு நிபுணர்களால் மேற்கொள் ளப்பட்ட இந்த அணுகுமுறை பல்வேறு துறைகளை உள் ளடக்கிய ஒத்துழைப்பு நடவ டிக்கையாக இருந்தது. நோயாளியின் நலவாழ்வு மற்றும் மேம்பட்ட சிகிச் சையை வழங்குவதில் எங்க ளது குறிக்கோள் மற்றும் செயல்பாட்டிற்கு நேர்த்தி யான சாட்சியமாக இது திகழ்கிறது என்றார்.
இதற்காக நன்றி தெரிவித்த நோயாளி, எனது நோய் பாதிப்பிற்கான கா ரணத்தை சரியாக கண்டறியவும் மற்றும் அதற்கு தீர்வு காணவும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்து வக் குழுவினர் வெளிப்ப டுத்திய உறுதியான அர்ப்ப ணிப்பிற்கும், உயர்தர சிகிச் சைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் தே.மு.தி.க.வினர் 150 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
மதுரை
மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தே.மு.தி.க. முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அவருடன் தே.மு.தி.க. மதுரை முன்னாள் வடக்கு மாவட்ட துணைச்செயலா ளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சி யம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்து ல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர்கள் கவிஞர் மணி கண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெய பாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150-க் கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்ட செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
- ஏல விற்பனை சொத்துகளை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
- இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார்.
மதுரை
மதுரையை சேர்ந்த வக்கீல் செந்தில் குமாரையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பல்வேறு சூழ்நிலைகளால் ஒரு நபரின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு அந்த சொத்துக்கள் கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு, வருவாய்துறை மூலம் ஏலம் விடப்படுகிறது.
அவ்வாறு, ஏலம் விடப் படும் போது ஏலத்தில் கலந்து கொண்டு சொத்துக் களை வாங்கும் நபர், ஏலத் தில் வாங்கிய விற்பனை சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது விற்பனைச் சான்றிதழை பதிவு செய்யும் போது சொத்தின் சந்தை மதிப்பில் 11 சதவீதத்தை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என பதிவுத்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அரசானை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதி ரானது.
இதனால், ஏலத்தில் சொத்து வாங்கியவர் கூடு தல் நிதி சுமை ஏற்படும். எனவே, இந்த அரசாணை யை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந் தது.
அப்போது இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் பிறப் பித்த இடைக்கால தடையை நீடித்து, வழக்கை 4 வாரங் களுக்கு ஒத்திவைத்தனர்.
- முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம் மன் சிலை முன்பு உரிமையா ளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்ப டுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை கண்கா ணித்து அவர்களுக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதித்து வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் இல்லாமல் குற்றச்செயல்க ளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந் தது. இந்த நிலையில் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை துணை ஆணையர் குமார் தலைமையில், மாநகர பகுதிகள் முழுவதும் தீவிர வாகன சோதனை இன்று மேற் கொண்டனர். இதில் இரண்டு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை கூறினர்.
மேலும் முறையாக நம்பர் பிளேட் பொருத்தி மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் அகற்றப்பட்டு புதிய நம்பர் பிளேட் வைத்து மதுரை பெரியார் பேருந்து நிலையம்
- அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தானில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலா ளர் முருகேசன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், முன்னாள் சேர்மன் முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, ஆர்யா, சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டிலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புறநகர்மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதா வது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, சோழ வந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, மருத்துவரணி கருப்பட்டி தங்கப்பாண்டி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் தாலுகா வலையபட்டியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 43). இவருக்கு செந்தில் என்ற மனைவி யும் ஒரு மகன், மகளும் உள்ளனர். முத்துராமன் சவுடார் பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பல நாட்க ளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இத னால் மன விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். தகவல் அறிந்த நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி திரு மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முத்து ராமன் தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள்.
- வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே மேலக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் மதுரை சுப்ரமணியபுரம் பகுதியைச் ராஜாசந்திரசே கர் என்பவருக்கு சொந்த மான புதிய பட்டாசு கடை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது.
ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த முத்து சங்கையா, நல்லூரைச் சேர்ந்த முத்துக் குமார், மூவரசன் ஆகிய மூன்று பேரும் கடையின் அருகே சோலார் மின்வி ளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் வயரில் இரும்பு கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முத்து சங்கையா (வயது 35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற இரண்டு பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் இறந்த முத்துசங்கையா உட லைக் கைப்பற்றி திரு–மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து திருமங்க லம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதே போல் திருமங்கலம் தாலுகா போலம்பட்டி பகு தியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி ராஜலெட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கண்டித்தே வன்பட்டி பகுதியில் மின்கம் பத்தில் ஏறி வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கிய தில் கீழே விழுந்தவர் மின் சார கம்பத்தின் கீழே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பியில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தேங்காய் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
- கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
மதுரை
வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. சில மாதமாக மட்டை தேங்காய் சந்தை விலை குறைவாக இருந்தது. தற்போது மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.10.65-க்கும் குறைந்தபட்சமாக ரூ.6.10-க்கும் விலைபோனது. கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.74.50-க்கும் குறைந்த பட்சமாக ரூ.56.30- க்கும் விலைபோனது.
மறைமுக ஏலத்தில் 20 வியாபாரிகள் போட்டி முறையில் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைத்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் கொப்பரை எடுத்து வந்தததை மதுரை விற்ப னைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார். மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டம் செப்டம்பர் வரை மட்டுமே உள்ளதால், தென்னை விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து தங்களின் தேங்காய்களை கொப்ப ரையாக மதிப்பு கூட்டி முதல் தர கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.






