ஊராட்சி செயலாளர் தற்கொலை

ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.
ஊராட்சி செயலாளர் தற்கொலை
Published on

திருமங்கலம்

திருமங்கலம் தாலுகா வலையபட்டியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 43). இவருக்கு செந்தில் என்ற மனைவி யும் ஒரு மகன், மகளும் உள்ளனர். முத்துராமன் சவுடார் பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பல நாட்க ளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இத னால் மன விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். தகவல் அறிந்த நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி திரு மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முத்து ராமன் தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com