என் மலர்tooltip icon

    மதுரை

    • வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை போனது.
    • நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை அடுத்துள்ள சுவாமி மல்லம்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன்(74),ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மனைவி ஞானம்மாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரசுராமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய பரசுராமன் பீரோவில் இருந்த நகை-பணம் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் ராஜாநகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எம்.பி. தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் அழகுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வர இருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறை வேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. வருகிற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பால கிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் சம்பத், மகளிரணி செயலாளர் லதா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூ ராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • தொழிலதிபரிடம் போலி 500 ரூபாய் கட்டுகளை மோசடி செய்துள்ளனர்.
    • இதற்கு மூளையாக செயல்பட்ட ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கப்பலூர் காந்தி நகரை சேர்ந்தவர் கனகரத்தினம், ரெடிமேட் ஆடை தயாரிக்கும் தொழில் செய்து வரும் இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசபட்டியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் போனில் தொடர்பு கொண்டார். உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் சலுகை உள்ளது. அதனை பெற வேண்டுமானால் ரூ.60 ஆயிரம் கமிஷன் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பிய கனகரத்தினம் கடன் பெற ஒப்புக்கொண்டார். இதற்காக கனகரத்தினம் அரசபட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(53), மதுரை வண்டியூரை சேர்ந்த வீரபத்திரன் ஆகியோருக்கு ரூ.30 ஆயிரம் கமிஷன் கொடுத்தாக தெரிகிறது. இதனை அடுத்து சம்பவத்தன்று 2 பேரும் கனகரத்தினத்திடம் ரூ.7.5 லட்சத்தை பேப்பரில் மடித்து கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்த கனகரத்தினத்திறகு் அதிர்ச்சி காத்திருந்தது.பக்கவாட்டில் 500 ரூபாய் நோட்டுகள் போல் காட்சியளிக்கும் அவை வெற்றுத்தாளாக இருந்தது. உடனே இதுகுறித்து கனகரத்தினம், ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் அவை அனைத்தும் கருப்பு பணம். ஒரு குறிப்பிட்ட திரவியம் தடவினால் பணமாக மாறிவிடும் என்று கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனகரத்தினம் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், வீரபத்திரனை கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
    • இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    மதுரை:

    தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தமிழில் பெயர்ப்பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

    • தம்பி முத்துராஜா சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை வீடியோ காலில் நிர்வாணமாக பேசவைத்து அதனை பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
    • செல்போன்கள் மற்றும் லேப் டாப்பை ஆய்வு செய்த போது, கடந்த சில மாதம் மட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை லேப்டாப்பில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துராஜா (30), அங்கு குமார் (32) ஆகிய இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே இருவருக்கும் திருமணமாகிய நிலையில் அங்கு குமார் மதுரை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தின் லக்கேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    தம்பி முத்துராஜா பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில் டெலிவரி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். பெற்றோர் பொருளாதார ரீதியாக வசதியானவர்கள் என்பதால் வேலைக்கு செல்வதையே பொழுது போக்கிற்காக அண்ணன், தம்பி இருவரும் சென்று வந்துள்ளனர்.

    இருவரும் எப்போதும் இரவிலும் கூட தூங்காமல் செல்போன் மற்றும் லேப் டாப்பை பார்த்துக் கொண்டே இருந்து வருவது அவர்களின் தினசரி பழக்கமாக இருந்துள்ளது. அண்ணன், தம்பி இருவருக்கும் தனக்கு தெரிந்த நபர்களுடைய விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தூரத்து உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்ற தம்பி முத்துராஜா அங்கு இளம்பெண் ஒருவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது அதனை தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக இளம்பெண் கதவைத் திறந்தபோது செல்போனில் வீடியோ பதிவு செய்ததை பார்த்து முத்து ராஜாவை திட்டியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அழிக்குமாறும் கூறியுள்ளார். அப்போது இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என முத்துக்குமார் அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் இளம்பெண்ணை நேரில் சந்தித்து மிரட்டி நீ மற்றும் உனது சகோதரி குளிப்பது போன்ற வீடியோக்களை நானும், எனது அண்ணனும் வீடியோ எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டி உள்ளனர்.

    மேலும் அந்த வீடியோவை அழிக்க வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து சரக உதவி ஆணையர் காமாட்சி உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.

    இதில் செல்போனில் ஆபாசமாக வீடியோ படம் எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியானது.

    விசாரணையில் சகோதரர்கள் இருவரும், தாங்கள் ஒவ்வொரு விசேஷங்களுக்கு செல்லும் பொழுதும் அங்கு உடை மாற்றும் இடங்களில் செல்போனை சார்ஜ்போடுவது போலவும் மற்றும் கழிவறைகளில் செல்போன்களை மறந்து வைத்து விட்டு வருவதுபோலவும், ஆடை மாற்றுவது மற்றும் குளிப்பது போன்றவற்றை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து அதனை செல்போன் மற்றும் லேப் டாப்பில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளனர்.

    இருவரும் தனியாக இருக்கும்போது இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் மனநிலையில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது வெளியில் செல்லும் பொழுது சந்தைகள், கடைகள் ஆகிய பகுதிகளில் பெண்களுடைய அந்தரங்க உறுப்புகளை அவர்களுக்கு தெரியாமலேயே செல்போனை மறைவாக பயன்படுத்தி படமாக எடுத்து வைத்திருக்கும் பழக்கம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    முதலில் அண்ணன் இதுபோன்று செல்போனில் பெண்களை மறைமுகமாக ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்த தம்பியும், அதே போன்று செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணனை பாலோ செய்து பெண்களை ஆபாசமாக மறைவிடங்களில் வைத்து வீடியோ எடுத்து வந்துள்ளான்.

    தம்பி முத்துராஜா சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை வீடியோ காலில் நிர்வாணமாக பேசவைத்து அதனை பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதே போன்று முத்துராஜா தான் பழகக்கூடிய அனைத்து பெண்களிடமும் காதலிப்பதாக கூறி இதுபோன்று ஆபாச வீடியோக்களை எடுத்து அது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இவர்களுடைய செல்போன்கள் மற்றும் லேப் டாப்பை ஆய்வு செய்த போது, கடந்த சில மாதம் மட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை லேப்டாப்பில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் பாலியல் வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய காசியின் செயலை மிஞ்சும் வகையில் மதுரையில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பெண்களை ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக இருவரிடமும் இருந்த வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். தேவையான வசதிகளை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்ததால் இதுபோன்ற இச்சை செயல்களுக்கு அடிமையான அண்ணன், தம்பி இருவரும் சில ஆண்டுகளாக இதே மனநிலையில் இருந்து வந்துள்ளனர்.

    தற்போது தொழில்நுட்பம் மேம்பட்டு விட்டதால் அதனை தவறாக பயன்படுத்தும் இது போன்ற நபர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க பெண்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தாங்கள் உடை மாற்றும் அறைகள், குளியலறை, படுக்கை அறைகளில் செல்போன்கள், கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வெளி இடங்களுக்கு செல்லும் போது ரகசிய கேமிராக்கள் உள்ளதா என ஒருமுறை மொபைல் ஆப்களின் மூலமாக சோதனை செய்து விட்டு பயன்படுத்துவது சிறந்தது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது செல்போன் கேமராக்களை தொடாமலே வீடியோக்களை பதிவு செய்யும் ரகசிய தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளதால், தனியார் அறைகளில் செல்போனை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை என்றும் எச்சரித்துள்ளனர்.

    • சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது.
    • மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தொடர்ந்து வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அடிக்கடி சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள், போராட்டம், மறியல், கடையடைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் சிங்காரவேலன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். முற்றுகை காரணமாக சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது.
    • சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் அவ ரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

    போலீஸ் நிலையத்தில் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கள் இருவரும் பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கைதான போலீசார் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப் போது சி.பி.ஐ. வக்கீல் மற்றும் இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் தான் நீதிபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து விடும்.

    சி.சி.டி.வி. காட்சிகளுக்காக ஒரு சாட்சியை சேர்த்து உள்ளார். எனவே இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீர்ப்புக்காக இந்த வழக்கை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • கும்பாபிஷேகத்திற்காக புதுப்ெபாலிவுடன் அழகர்கோவில் ராஜகோபுரம் காட்சியளிக்கிறது.
    • விரைவில் கள்ளழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    மதுரை

    ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்புடையது மதுரை அழகர்கோவில். மேலும் 108 வைணவ திருக்கோவில்களில் ஒன்றாகவும், பாண்டிய நாட்டின் 18 வைணவ கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாகவும் அழகர் கோவில் கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ரூ.1.5 கோடி செலவில் பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது. இதற்காக கடந்த மார்ச்

    13-ந் தேதி கோபு ரங்களுக்கு பாலாலயம் நடந்தது. அதனை ெதாடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது முடியும் தரு வாயில் உள்ளது. இந்த கோவில் கோபுரமானது சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவை கள் கொண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் ராஜகோபுரம் 120 அடி உயரத்துடன் 7 நிலைகளை கொண்டது. இதில் கலைத்திறன் மிக்க 628 சுதை சிற்பங்கள் உள்ளன கோபுரத்தின் உச்சியில் 6¼ அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் உள்ளன.

    தற்போது இந்த கோபுரத்தில் திருப்பணிகள் முடிந்து பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    இதனை கோவில், அழகர் மலைக்கு வரும் பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். விரைவில் கள்ளழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமத்தினர் கும்பாபிஷேகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • மூதாட்டி-வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது80). இவருடைய பேரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மூதாட்டி மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது மகன் திருப்பதிகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர்

    மதுரை பரசுராம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி யன் (45). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அதில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி வசந்தா திருப்பாலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுந்தரானந்த சித்தர் அவதார தின திருவிழா நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழக சட்டமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை தாக்கல் செய்தபோது இந்து சமய அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழகத்தில் உள்ள பதினெண் சித்தர்களோடு தொடர்புடைய கோவில் களில் ஆண்டுதோறும் சித்தர்களுக்கு விழா எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    முதற்கட்டமாக திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் கமலமுனி சித்தருக்கும், சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணன் சுவாமி கோவிலில் பாம்பாட்டி சித்தருக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்தா சித்தருக்கும் கோவில்கள் சார்பில் விழா எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 3-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை) கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரானந்த சித்தர் அவதார தின பெருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மங்கள இசையும், 8 மணிக்கு திருமுறை பாராயணமும், 10 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. 11 மணிக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சமய சான்றோா ர்கள் முன்னிலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து "சித்தர்களின் பெருமை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்ஷா பந்தன் விழா கல் லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசுகை யில், சகோதர, சகோதரிக்கு இடையேயான உறவு பந் தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத் தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ரக்ஷாபந்தன் விழா.

    இப்பண்டிகையை, 'ராக்கி' என்றும் அழைப்பர் எனவும், இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட் டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர் என்றும் ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாது காப்பு பந்தம்' என்றும் பொருள் எனவும் பேசினார்.

    இதையடுத்து திருமங்கலம் பிரம்ம குமாரிகள் அமைப் பச் சேர்ந்த புனிதா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிருக்கு ராக்கி கயிறு கட்டினார். அப்போது அவர் பேசுகையில், தீய விஷயங்கள் மற்றும் தீவி னைகளில் இருந்து சகோ தரர்களைக் காப்பாற்ற வும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயு ளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்ப டுகிறது எனவும் கூறினார்.

    பின்பு, நிர்வாக மேலாண் மைத்துறை இயக்குனர் டாக்டர். நடேசபாண்டியன், மேலாண்மை துறை பேரா சிரியர் டாக்டர் நாசர் மற்றும் பேராசிரியர்கள் தங்கபாண்டியன், திருப்பதி, சிங்கராஜா, ராமுத்தாய், கார்த்திகா, மணிமேகலை, ஜோதி, ஆறுமுக ஜோதி, முதல்வர் அலுவலக ஊழி யர் பிரியங்கா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு ராக்கி கயிறு அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட் டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
    • வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஓ.பி.எஸ். அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூலித்தேவன் நினைவு நாள், மூக்கையா நினைவு நாள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஓ.பி.எஸ். தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 40 பேரை நிறுத்தி வெற்றி பெறுவோம். இதுதான் ஓ.பி.எஸ். நிலைப்பாடு. வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடி மேலக்கோட்டையை கடந்து தான் அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்துபவர்கள் யாரும் இல்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சுங்கச்சாவடியை அகற்றா விட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, நகரச் செயலாளர் ராஜா மணி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருத்தராஜ், நகர துணை செயலாளர் விஜய் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×