என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/09/02/1942881-kollaii.webp)
வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை போனது.
- நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை அடுத்துள்ள சுவாமி மல்லம்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன்(74),ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மனைவி ஞானம்மாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரசுராமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய பரசுராமன் பீரோவில் இருந்த நகை-பணம் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் ராஜாநகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)