என் மலர்tooltip icon

    மதுரை

    • அருள்ஆனந்த் கல்லூரியில் போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • கல்லூரி துணை முதல்வர் துரை சிங்கம் நன்றி கூறினார்.

    மதுரை

    அருள் ஆனந்தர் கல்லூரி மற்றும் வெற்றி தமிழா இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு முகாம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் கல்லூரியில் நடைபெற்றது.

    முகாமை முதல்வர் அன்பரசு தொடங்கி வைத்தார். சிறுபான்மை நலத்துறையைச் சேர்ந்த கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். மதுரை

    வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி "கடந்து வந்த பாதை'' என்ற தலைப்பிலும், மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபொனி "எனது அனுபவம்" என்ற தலைப்பிலும், இந்திய தொல்பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் ராமசெல்வம் "எளிது எளிது போட்டி தேர்வு எளிது" என்ற தலைப்பிலும், திருவனந்தபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் பழனிச்சாமி "போட்டித் தேர்வு எதிர்கொள்வது எப்படி" என்ற தலைப்பிலும் மாணவ மாணவிகளுக்கு போட்டித்தேர்வு எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும் பேசினர்.

    முடிவில் கல்லூரி துணை முதல்வர் துரை சிங்கம் நன்றி கூறினார். விழிப்புணர்வு முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர் சங்கரநாராயணன் மற்றும் சேவியர் செய்திருந்தனர்.

    • ‘வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை சட்டக்கல்லூரி அருகில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்தில் நீலம் பதிப்பகத் தின் சார்பில் தி.லஜபதி ராயின் வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழா வில் வழக்கறிஞர் ச.ராஜ சேகர் வரவேற்றார்.

    நீலம் பதிப்பகம் வாசுகி பாஸ்கர் தொடக்க உரையாற் றினார். புதுச்சேரி மொழியி யல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்கு நர் பக்தவச்சல பாரதி நூலை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார்.

    வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நூல் குறித்து பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல் கான், வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் உரை யாற்றினர்.

    முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் நூல் ஆய்வுரை யும், நூலாசிரியர் தி.லஜபதி ராய் ஏற்புரையும் ஆற்றினர். விழாவில் திரளான தமிழ் ஆர்வலர்கள், நூல் ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • நீரிழிவு நோய்க்கு தீர்வு காண கல்லீரல், கணைய கொழுப்பு அளவை குறைப்பது முக்கியம் என்றார்.
    • மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் எஸ்.ஸ்ரீதர் விளக்கமளித்தார்.

    மதுரை

    எந்திரத்தனமான இந்த உலகில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது அதிகரித்துவரும் ஒன்றாகும். இது இந்தியாவில் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இரண் டாம் வகை நீரிழிவு நோய்க்கான காரணங்கள் பல உள்ளன. இதில் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகள் அடங்கும்.

    நீரழிவு நோய்க்கு மரபணு ஒரு முதன்மை காரணியாக இருந்தாலும், அதிகரித்து வரும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவை காரணிகளாக அமைகின்றன.

    நகரமயமாக்கல் மற்றும் மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், உடலுழைப்பு இல்லாமை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது 2021 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 74.2 மில்லி யனாக இருந்ததை விட கணிசமான அதிகரிப்பு என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையானது இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுகிறது. மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு நோயாளிகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளது. உலகளவில் இரண்டாம் வகை நீரிழிவு நோயுடன் வாழும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் இந்தியர் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். நீரிழிவு நோயாளிகளின் இந்த அதிகப்படியான எண்ணிக்கை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை களின் அவசரத் தேவையை குறிக்கிறது.

    நீரழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால் நீரிழிவு நோயை திரும்ப பெற முடியுமா என்பதை புரிந்து கொள்வதேயாகும். நீரழிவு நோயை திரும்ப பெறுதல் என்பது நிரந்தரமான சிகிச்சையை குறிக்கிறது என்பதால், "நீரிழிவு நோய் நிவாரணம்" என்பது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.

    உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்றவை ஒருவருக்கு மீண்டும் ஏற்படும் சூழ்நிலையில் நீரழிவு நோயின் தீவிரம் அதிகரிக்கலாம், இதனால் மீண்டும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

    இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான நிரந்தர தீர்வை புரிந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். நீரிழிவு நோயின் நிரந்தர தீர்வு என்பது ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற செயல்பாடுகள், தொடர் மருந்து சிகிச்சை அல்லது இன்சுலின் சிகிச்சை தேவையில்லாத இயல்பான அல்லது சாதாரண நிலைக்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் HbA1c ன் மதிப்பு (மூன்று மாத கால ரத்த சர்க்கரை அளவுகளின் மதிப்பு) குறைந்தது ஆறு மாதங்களுக்கு 6.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்போது, மட்டுமே இதை அடைய முடி யும்.

    கல்லீரல் மற்றும் கணைய கொழுப்பு அளவு குறைக்கப்படு வதே நிவாரணத்திற்கு உரிய வழி என்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. மேலும் குறைந்த கலோரி கொண்ட உணவை பின்பற்றுவதன் மூலம் 10-15 சதவீதம் அளவு எடை குறைப்புடன் இதை அடையலாம். நீரிழிவு நோயை நிர்வகிக்க எடை குறைப்பை பராமரிப்பது முக்கியம் என் பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முன்பு இழந்த எடையை மீண்டும் பெற்றுவிட்டால், நீரழிவு நோய் மீண்டும் வர மற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஆனால் நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு என்பது அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது. இரண்டாம் வகை நீரழிவு நோய் ஒரு குறுகிய காலத்திற்குள் கண்ட றியட்டிருந்தால், இது பெரும்பாலான நோயாளிக ளுக்கு இருக்கும். 6 ஆண்டுகளுக் கும் குறைவாக நீரிழிவு நோய் மருந்துகள் உண்ணும் நோயாளி கள், இரண்டாம் வகை நீரழிவு நோய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால், நிரந்தர தீர்வு நிலையை அடைவது கடினமாகும்.

    நீண்ட கால நீரிழிவு நோயின் பாதிப்புகளான இதய நோய், சிறுநீரக நோய், நரம்பு பாதிப்பு, பார்வைக் கோளாறுகள், மன நலப் பிரச்சினைகள் போன்ற நோய்வாய்ப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை உடைய நீரிழிவு நோயாளிகள் நிரந்தர தீர்வு காண்பது கடினம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் நிலையை திறம்பட நிர்வகிக்க நீரிழிவு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். சிகிச்சையளிக் கும் நீரிழிவு மருத்துவரிடம் நிரந்தர தீர்வு அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அறிய இது உதவும்.

    மேற்கண்ட தகவலை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்து வமனை அகச்சுரப்பியல் மற் றும் நீரிழிவு நோய் உயர் சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • செகந்திராபாத்-ராமநாதபுரம் ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மதுரை

    செகந்திராபாத்- ராமநாதபுரம்- செகந்திராபாத் சிறப்பு விரைவு ரெயில்களின் சேவையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து தென்மத்திய ரெயில்வே அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

    அதன்படி செகந்திரா பாத்- ராமநாதபுரம் சிறப்பு ரெயில் (07695) செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய புதன் கிழமைகளில் செகந்திரா பாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07696) செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரெயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை.

    திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்க ளுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடை பெற்று வருகிறது.

    • மதுரை வைகை ஆற்று பாலத்தில் மின்வாரிய அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • பாலமுருகன் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் மோதிலால் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(51). இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கிராமத்தில் மின்வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வார விடுமுறையை முன்னிட்டு சம்பவத்தன்று பாலமுருகன் ஊருக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் ஆரப்பாளையம் வைகை வடகரை அம்மா பாலம் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது இறந்து கிடப்பது மின்வாரிய ஆய்வாளர் பாலமுருகன் என தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை அடையாளம் காண்பித்தனர்.

    இது தொடர்பாக மனைவி நாகராணி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரலட்சுமி விரத சிறப்பு வழிபாடு நடந்தது.
    • மீனாட்சி அம்மன் கோவில் புகழ் ரதி சிலையும் இடம்பெற்றிருந்தது.

    மதுரை

    மதுரை குட்செட் தெருவை சேர்ந்த சூரிய கலா-செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து இந்த ஆண்டிற்கான வரலட்சுமி பூஜையை தங்களது வீட்டில் சிறப்பாக செய்தனர். உலக நலனுக்காகவும், பெண்கள் நலனுக்காகவும், அனைத்து குடும்ப நலனுக்காகவும் அவர்கள் வழிபட்டனர். தென்னை ஓலை பின்னணியில் லட்சுமி தேவி தாயார் அருள் பாலித்தார்.

    ஒவ்வொரு நாள் முடிவிலும் வழிபாட்டிற்கு பின்னர் சூரியகலா ஓவியம் ஆக்கப்பட்ட சிறப்பு கல் சிற்பங்களை பார்வையாளர்களுக்காகவும், பக்தர்களுக்கா கவும் தனது வீட்டில் காட்சிப்படுத்தினார். இதில் சிறப்பம்சமாக பழங்கால கேரளா ஓவிய முறையில் வரையப்பட்ட கஜ சம்ஹார மூர்த்தியும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புகழ் ரதி சிலையும் இடம்பெற்றிருந்தது. பக்தர்களும் நண்பர்களும் இந்த ஆண்டும் சாமியை தரிசித்தும் கலையை ரசித்தும் சில ஓவியங்களை பக்தியுடன் வாங்கி சென்றனர்.

    • இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து நேற்று இலங்கைக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதில் மதுரையில் தங்கியிருப்பதற்கான முகவரிகள் இருந்தன. ஆனால் அந்த பெண் இலங்கை தமிழ் பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் இலங்கையை சேர்ந்த உமாவதி என தெரியவந்தது. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மதுரை புதூரை சேர்ந்த பிரதாப்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் முறைப்படி இந்திய குடியுரிமை பெறாமல் திருமணமான பதிவை வைத்து ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டையும் விண்ணப்பித்து பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உமாவதியை அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    மன்னாடிமங்கலம் பாம்பலம்மன் கோவில் 58-வது முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதை யொட்டி கடந்த வாரம் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

    முதல் நாள் முத்து பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை பா.ஜனதா விவசாய அணி மாநில துணை தலைவர் மணி முத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டி யன் ஆகியோர் தலைமையில் முளைப்பாரிக்கு முத்து பரப்பினார்கள்.

    மாலை உலக நன்மைக்காக பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி னர். தினசரி அன்னதானம் வழங்கப்பட்டது. 8-ம் நாள் அம்மனுக்கு பூ அலங்காரம் மற்றும் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை பூசாரி வீரசேகர் சக்தி கரகம் எடுத்து வந்தார். 9-வது நாள் காலை பால்குடம், அக்னிசட்டி பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலை அம்மன் சிலை ஊர்வலத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    10-ம் நாள் காலையில் முளைப்பாரி கரைத்தல், மாலையில் தெய்வீக வேடங்கள் அணிந்து வண்டி வேஷம் நடந்தது. தினசரி கலை நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.ஆறுமுகம், கணேசன், ஒன்றிய கவுன் சிலர் ரேகா வீரபாண்டி, நிர்வாகிகள் செந்தில்மயில் ஆனந்தகுமார், கண்ணன், ராஜபாண்டி, கார்த்திக்ரவி உட்பட ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    விழா கமிட்டினர், கிராம பொதுமக்கள், பாம்பலம்மன் கோவில் நண்பர்கள் ஆகி யோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.

    • கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை முக்கிய சுற்றுலா தலமாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பிலும், போக்குவரத்து போலீசார் சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோரிப்பாளையம், கீழவாசல், தெற்குவாசல், காளவாசல், ஆரப்பாளையம், சிம்மக்கல், கீழமாசிவீதி, பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம், காமராஜர் சாலை, விளக்குத்தூண் ஆகிய நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதாலும், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்தத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கோரிப்பாளையத்திலும் வாகன நிறுத்தும் இடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நகரில் ஏற்கனவே உள்ள 2 பல்லடுக்கு வாகன நிறுத்தம் இடங்களை நவீனப்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரி, அண்ணா பஸ் நிலையம்,கோரிப்பாளையம் பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காளவாசல், பை-பாஸ் ரோடு, மாசிவீதிகள், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கலாம்.

    • ம.தி.மு.க. மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாநாடு நடைபெற உள்ள இடத்தை பூமிநாதன் எம்.எல்.ஏ. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை வலையங் குளத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    மாநிலம் முழுவதும் இருந்து திரளான ம.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வலையங்குளத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பூமிநாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் பொருளாளர் சுருதி ரமேஷ்.பார்வையிட்டடனர். இதில் நிர்வாகிகள் சுப்பையா, கீரைத்துரைபாண்டியன் பாஸ்கரசேதுபதி, பச்சமுத்து. புகழ்முருகன், மாயழகு., அய்யனார். காளிமுத்து முத்துலெ ட்சுமி.. கரு.சுந்தர், அன்னமுகமது, கவுரி மகேஷ், திருப்பரங்குன்றம் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
    • இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) வணிகவியல், கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் "தொழில்முனைவோருக்கான வணிக வாய்ப்புகள்" என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது. பாத்திமா கல்லூரி முதுகலை வணிக மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியை சுகன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வணிக வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் தொழில் முனைவோருக்கான தகுதிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். செயலாளர் விஜயராகவன் பேசினார். முதல்வர் ராமசுப்பையா, வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவி சுஜிதா பாலா வரவேற்றார். துறைத் தலைவி நாகசுவாதி விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவிப் பேராசிரியைகள் மஞ்சுளா மற்றும் பாபி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவி ஷானு நன்றி கூறினார்.

    • குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது.
    • வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் இளம் வயது பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதும் அதனால் இளம் வயதி லேயே குழந்தை பெறுவதும் தொடர் கதையாகி வருகிறது.

    பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் திருமணம் நடத்த வேண்டும் என்பது சட்டம். பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என்று மசோதா மத்திய அரசின் சட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

    உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளில் பெரும்பாலும், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநி லங்களை சேர்ந்தவர்கள்.

    குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பி ரதேசத்தில் இருப்பதாக யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதி களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் திருமணமான டீன் ஏஜ் பெண்கள் பிரசவத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதே போல் மாவட்ட த்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் 18 வயதுக்குட் பட்ட பெண்களுக்கும் திரு மணம் நடத்துவது அதிக ரித்துள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் குழந்ைத திருமணங்கள் அதிக ரித்துள்ளன.

    சமீபத்திய ஆய்வில் ஊரக மற்றும் நகர்ப்பு றங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3338 டீன் ஏஜ் பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும் அரசு தாலுகா மருத்துவ மனை, அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை களில் நடக்கும் டீன் ஏஜ் பிரசவங்களை கணக் கிட்டால் அதன் புள்ளி விவரங்கள் இன்னும் அதிகரிக்கும்.

    குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×