குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
மறியலில் கலந்து கொண்டவர்கள்.
மறியலில் கலந்து கொண்டவர்கள்.
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சரி வர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை- திண்டுக்கல் சாலையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், மதுரை மாநக ராட்சி குடிநீர் தேவைக்காக பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்களும் சேதமடைகிறது.

ஊராட்சி மன்ற நிர்வா கம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவைகள் சரி வர சீரமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படு கிறது. இதனால் கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடையாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே சேதமைடைந்த குழாய்கள் சீரமைத்து தர வேண்டும் என்றனர். இதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com