என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுவதா? உதயநிதிக்கு, உதயகுமார் கண்டனம்
    X

    சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுவதா? உதயநிதிக்கு, உதயகுமார் கண்டனம்

    • சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுவதா? என்று உதயநிதி பேச்சுக்கு, உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • இந்து மதத்தின் கொள்கைகளையும், அந்த வழிபாட்டு முறைகளையும் எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் கிடையாது என்றார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது எது என்பது குறித்து ஜனநாய கத்தை குழிதோண்டி புதைக் கக் கூடிய வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு நாட்டிலே வேற்றுமையை பற்றி பேசியிருக்கிற கருத்து மக்களிடத்திலே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

    அவர் கூறியிருக்கிற கருத்துக்கள் ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடு முழுவதும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவருக்கு ஒரு கருத்திலே, ஒரு மரபிலே ஒரு பழக்க வழக்கத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அதை நான் ஒழித்து கட்டுவேன் என்று ஆணவத்தோடும், அகங்காரத் தோடும் பேசுவது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இருக்காது.

    சனாதனத்தை ஒழித்து கட்டுவேன் என்கின்ற அந்த சொல் இன்றைக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற பாரம் பரியத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் நம்பிக்கை வைத்திருக் கிற மக்களுக்கு வேதனையாக இருக்கிறது.

    இன்றைக்கு இந்து மதத்தின் அந்த மரபுகளையும், அந்த லட்சியங்களையும், அந்த கொள்கைகளையும், அந்த வழிபாட்டு முறைகளை யும் எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் கிடையாது.

    இந்த உலகத்தில் எல்லோ ரும் எல்லாம் தெரிந்தவர்கள் உண்டா? நீங்கள் சனாதனத்தை பற்றி பேசி இருக்கிறீர் களே அதை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்தது உண்டா? அவ்வையார் சொன்னது போல கற்றது கையளவு கல்லாது உலக ளவு.

    உங்களை நீங்கள் தலைவராக நிலை நிறுத்திக்கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற அதனுடைய முயற்சியாக தான் இந்த உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது.

    நீங்கள் சொல்லிய அந்த சொல் உங்களுடைய தகுதியை இன்றைக்கு உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டு கிறது. ஆகவே சமூக நீதிக்கும், சமதர்மத்திற்கும் எதிரானது என்று சொல்லுகிற அந்த நம்பிக்கையை காலம், கால மாக கடை பிடித்து வருகிற அந்த நம்பிக்கையை, அதை கடைபிடித்து வருகிற அந்த மக்களின் நம்பிக்கையை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசி அதை ஒழிப்போம் என்று சொல்வது அந்த நம்பிக்கையை ஒழிக்க போகிறீர்களா? அல்லது அதை கடைபிடிப்பவர்களை ஒழிக்க போகிறீர்களா? என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஆகவே நாட்டிலே வெறுப்புணர்வை தூண்டுகிற வகையில் உங்கள் பேச்சு அமையுமானால்,அதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் பேச்சையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×