என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சத்துணவு திட்ட பெயர் பலகை அகற்றுவதால் எம்.ஜி.ஆரின் புகழை அழித்து விட முடியாது
- வாடிப்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் முன்னாள்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் செய லாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் சோனை, வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ்கண்ணா, மகளிரணி மாவட்ட செய லாளர் வக்கீல்லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்குபின் முன்னாள் ஜனா திபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள் அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றிவிட்டால் அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியாவில் உள்ளஅனைத்து மாநிலங்க ளுக்கும் செல்லும் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியாதா, அவர் அறியாமையில் புலம் புகிறார்.
முதல்வராக இருந்தும் கூட இது தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்த வந்தவர் மாலையும், கழுத்துமாக காத்திருக்கும் வேளையிலே மணமக்களை வாழ்த் தாமல் ஆட்சி பறிபோகி விடுமோ என்ற பயத்தில் தனது கவலையை பகிர்ந்து கொண்டார். ஆட்சி அதிகா ரம் போய்விட்டால் என்ன செய்வது என்று கவலை யோடு பேசியிருக்கிறார்.
எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகி றதோ, அப்போதெல் லாம் அவர்கள் ஆட்சி அற்ப ஆயு ளில் கவிழ்ந்துவிடும் என் பதுதான் கடந்த கால வரலாறு. அது கருணாநிதி காலத்திலிருந்து தொடர்கிறது. அது தற்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்திட்டங் களை அரசியல் காழ்ப்பு–ணர்ச்சி காரணமாக தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப் பட்டுள்ளது.
சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். என்று ஐக்கிய நாட்டு சபையில் சொல்வார்கள். தி.மு.க. இன்று காலை உணவுத்திட்டம் கொண்டு வருவதில் எந்தவித ஆட்சேப னையும் இல்லை. மாண வர்கள் பயனடைகிறார்கள் என்றால் அதை வரவேற் போம். ஆனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் சத்துணவு 1 முதல் 10-ம் வகுப்பு வரை கொடுக் கப்படுகிறது.
இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை காலை உணவு யார் கொடுப்பார் கள்? எதற்கு இந்த வேறு பாடு. காலை உணவு திட் டத்தை அமுல்படுத்தும் போது ஒரே மாதிரியாக அமுல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டம் நிறுத்தப் பட்டு விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. காரணம் சத்துணவுதிட்ட போர்டுகள் அகற்றப்பட்டு விட்டது.
எம்.ஜி.ஆர். பெயரை தாங்கிய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு காலை உண வுத்திட்ட பெயர்பலகை வைப்பதனால் எம்.ஜி.ஆர். புகழை எந்த காலத்திலும் யாராலும் அழிக்கமுடியாது. அது இதயத்தில் ஊறிப்போய் உள்ளது, ரத்தத்தில் கலந்து போய் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, வார்டு கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர் ணம், கீதா, 18 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்