என் மலர்tooltip icon

    மதுரை

    • காய்கறிகள்-பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
    • வெண்டைக்காயை செடிகளிலேயே காய விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.

    மதுரை

    மதுரை மார்க்கெட்களில் காய்கறிகள் மற்றும் பூக்க ளின் விலை வீழ்ச்சி காரணமாக உரிய விலை கிடைக் காமல் விவசாயிகள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மார்க்கெட் களில் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. இதனால் சில்லறை விலைகளில் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அது போல வெண்டைக்காய், கத்தரிக் காய் உள்ளிட்ட நாட்டு காய் கறிகளும் 50 ரூபாயை தாண்டி விற்பனையாகின. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மதுரை உள்ளிட்ட அண்டை மாவட் டங்களில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள் ளது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளுக்கு காய் கறிகளின் வரத்து எதிர்பார்த் ததை விட அதிகமாக இருப் பதால் அதன் விலையும் திடீ ரென கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது.

    குறிப்பாக தக்காளி தற் போது விலை வீழ்ச்சிய டைந்து கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மொத்த விலை யாக கிலோ 15 ரூபாய்க்கும், உழவர் சந்தைகளில் கிலோ 20 ரூபா யாகவும் விற்பனை யாகி வருகிறது.

    வெண்டைக்காயை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையா னது. தற்போது மகசூல் அதி கரித்துள்ளதால் மூடை மூடையாக வெண் டைக்காய் மதுரை மார்க் கெட்டில் குவிக்கப்பட்டுள்ளன. வரத்து அதிகரித்ததின் காரணமாக வெண்டைக் காயின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை உழவர் சந்தைகளில் இன்று ஒரு கிலோ வெண் டைக்காய் 10 ரூபாய்க்கு விற்பனை செய் யப்பட்டது.

    ஆனாலும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று வியா பாரிகள் தெரிவித்துள்ள னர். மேலும் நாட்டுக் காய்கறிகளான கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.

    இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் விரக்தி அடைந்துள்ளனர். காய்கறி விவசாயிகள் கூறு கையில் தற்போது காய் கறிகள் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் எதிர் பார்த்த விலை கிடைக்க வில்லை. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ் வாதாரமே கேள்விக்குறி யாகி உள்ளது.

    ஒரு ஏக் கருக்கு பயிர் சாகுபடி மற் றும் விவசாயக் கூலி என்று 4 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய் யப்படுகிறது. ஆனால் காய் கறி மகசூல் அதிகமாக இருந்தாலும் உரிய விலை கிடைக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள் ளது. எனவே காய்கறிகளை பறிக்க கூட கூலி கிடைக்க வில்லை.

    இதனால் வெண் டைக் காய்கள் அறுவடைக்கு தயா ராக இருந்தும் அதனை பறிக்க மனதில்லாமல் செடி களிலேயே காய விட வேண் டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். தற்போது தக்காளி விலையும் கணிச மாக குறைந்து விட்டது. இதனால் எங்கள் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே விவசாய விளை பொருள்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்து எங்கள் வாழ்வாதா ரத்தை பேண நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை யும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்ட நிலை யில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என்று வியாபாரி கள் கணித்தனர்.

    ஆனால் அவர்கள் எதிர் பார்த்த அளவுக்கு பூக்கள் விற்பனை யாக வில்லை ஆனாலும் பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை கணிச மாக குறைந் துள்ளது. மல்லி கை பூக்கள் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் பிச்சி, முல்லை பூக்கள் 400 ரூபாய் க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

    முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலங்ட களில் 400 ரூபாய் வரை விற்க படும் செவ்வந்தி, சம் மங்கி மற்றும் பட்டன் ரோஸ் உள்ளிட்ட வண்ண மலர்கள் தற்போது அதிக அளவில் மார்க்கெட்டு களுக்கு வந்தும் விற்பனை இல்லாத தால் குவிந்து கிடக் கின்றன.

    இன்று 50 முதல் 80 ரூபாய் வரை இந்த பூக்கள் விலை போயின ஆனாலும் அதிக அளவில் மக்கள் வாங்க ஆர்வம் காட்டாதால் வியாபாரிகள் அதனை குப்பைகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என வே மலர் விவசாயி களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வும் வாழ்வாதாரத்தை பேணவும் பூக்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது டன் மதுரையில் இது போன்ற காலங்களில் பூக் களின் தேவைகளை அதி கரிக்கும் வகையில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் மலர் விவசாயிகளின் கோரிக் யாக உள்ளது.

    • தசரா திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர்.
    • முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

    கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.

    இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது. மேலும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல் கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • சோழவந்தான் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு தென்கரை பாலாஜி பட்டர் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடந்தன.

    இன்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு, பூர்ணாகுதி நடந்தது. இதைத் தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்து

    கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.

    • அலங்காநல்லூர் அருகே அழகி நாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, துணை சேர்மன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ஏற்பாடுகளை நிர்வாககுழு தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் பொருசுப்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.

    • திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தில் அமைந்துள்ளது காட்டுபத்திரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபணிகள் தொடங்கின. இதனை யொட்டி புதியதாக சிவபெருமான் சன்னதி, கருமாரியம்மன் சன்னதி மற்றும் மடப்பள்ளி அமைக்கப்பட்டது. 31-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் சிவாச்சாரியார் சங்கர நாராயணபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்தனர். காலை 6.20 மணிக்கு காட்டுபத்திர காளியம்மன் கோவில் கோபுரவிமானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மத்திரங்கள், மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடத்தின.

    இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையாளர் செல்லத்துரை, காட்டுபத்திர காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அங்கையர் கன்னி, தர்க்கார் சர்க்கரை அம்மாள், ஆய்வாளர் சாந்தி கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் உமாவிஜயன், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், விரக்குமார், திருக்குமார், அமுதா சரவணன், போதுராஜன், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடந்தது. வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். அதில் பல ஆச்சரியங்கள் இருக்கப் போகிறது.

    இதை உங்களை போல் நானும் எதிர்பார்த்து கொண்டிருக்கி றேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று வெற்றிக கனியை பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல், சிங்கராஜ், பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் துணைச் செயலாளர் சந்தனத் துரை, பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், கோட்டைமேடு பாலன் உள்பட கலர் கலந்து கொண்டனர். முடிவில் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • கள்ளிக்குடியில் பாதுகாப்பான குடிநீர் குறித்த விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
    • உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன், ராம்குமார் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை பரிசோதனை செய்து, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

    கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளை சார்ந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் செந்தில் குமரன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன், ராம்குமார் கலந்து கொண்டனர்.

    மெர்குரி மகளிர் குழுவைச் சார்ந்த அன்புச்செல்வி, வாசுகி உட்பட மகளிர் குழுவினர் ஏராளமான கலந்து கொண்டு விளக்க பயிற்சியை அளித்தனர்.இதில் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர்கள் தங்களுடைய சந்தேகத்திற்கு இடமான கேள்விகளை அதிகாரிகளிடம் அறிந்து கொண்டனர்.

    ஆங்காங்கே ரசாயன கலந்த (R.0) விற்பனை செய்வதை அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், அதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை குறித்தும் பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கிராமங்களில் கிடைக்கக்கூடிய குடிநீரை சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் அதன் மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைப்பது குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டன.

    • 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    • பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    மதுரை:

    மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெற உள்ளது.

    முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடத்தவும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத்தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் நேற்று (3-ந் தேதி) தொடங்கியது. அன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ் வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜகோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (4-ந்தேதி) காலை 7.15 மணிக்கு மேல் 9.05 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலஸ்தாபன மகா கும்பா பிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    முன்னதாக பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் புனித நீர் கலசங்கள் 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்தது. பின்னர் உற்சவர் சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதையடுத்து அங்கு மாம்பலகையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள 5 கோபுரங்களும் வரையப்பட்டு அதற்கு பூஜை செய்து புனிதநீர் ஊற்றி பாலாலயம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • ரஜினிகாந்த் ரசிகரின் திருமண விழாவில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கலந்துகொண்டு வாழ்த்தினார்.
    • ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்.

    மதுரையில் நடந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகரின் திருமண விழாவில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கலந்துகொண்டு வாழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்" என்றார்.

    இதற்கிடையே, ரஜினிகாந்துக்கு, கவர்னர் பதவி கிடைக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது ஆண்டவன் முடிவு" என்று அவர் பதில் அளித்தார்.

    • நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் புகார் அளித்தார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை:

    உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முறையாக பராமரிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் குற்றவியல் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போனதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் நீதிமன்ற ஊழியர் ஜான்சன் மற்றும் பாலமுருகன், பிரித்திவிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டார்.
    • மற்றொரு சம்பவத்தில் மகனும் சிக்கினார்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் வரதராஜன். இவர் மதுரை ஆயுதப்ப–டையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    இவர்கள் புதிய அரசு மருத்துவமனை பின்புறம் நின்று கொண்டு அந்த பகுதியில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்தனர்.

    உடனே அந்த பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்களும் தாங்கள் அணிந்து இருந்த ஹெல்மெட்டை கழற்றி, போலீஸ்காரர் மணி கண்டனை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்கச்சென்ற தலைமைக் காவலர் வரதராஜனையும் சரமாரியாக தாக்கி உள்ள னர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது இருவரும் சிவகங்கை மாவட்டம் சிதலூரை அடுத்த பில்லூரை சேர்ந்த நிறைகுளம் என்பவரது மகன்கள் அண்ணன், தம்பிகளான பிரவீன்குமார் (வயது 27) மற்றும் நவீன்குமார் (24) என்று தெரிய வந்தது. அவர்களை போலீ சார் கைது செய்தனர்.

    மதுரை போக்குவரத்து திட்ட பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான்துரை (59). இவரது மகன் ஆரோக் கிய ஜெயமுத்து. இவர் திருமங்கலம் சியோன் நகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார். அவர் பழங்காநத்தம் ஆர்.சி. தெருவில் உள்ள பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களில் தந்தை, மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் மனவருத்தம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மகனை பார்க்க அவர் வேலை செய்யும் பள்ளிக்கு தந்தை சென்றுள்ளார்.

    அங்கு தந்தை ஜான் துரையை ஆபாசமாக பேசிய மகன் அவரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஜான்துரை சுப்பிரமணியபுரம் போலீ–சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தையை தாக்கிய மகன் ஆரோக்கிய ஜெயமுத்துவை கைது செய்தனர்.

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு போலீஸ்காரர்கள் தாக்கப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மாநகராட்சி சார்பில் 5-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 4-ல் உள்ள வார்டுகள் செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லெட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளி வீதி, கீரைத்துறை, வில்லா புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பகுதி மக்கள் பங்கேற்கலாம்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    ×