என் மலர்tooltip icon

    மதுரை

    • போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசையை வாகன ஓட்டிகள் வரவேற்கின்றனர்.
    • ஹெல்மெட் அணிவது அவசியம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெறுகின்றன.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து சிக்னலில் காத்தி ருக்கும் வாகன ஓட்டிகள் கடந்த சில நாட்களாக இனிய அனுபவத்தை சந்தித்து வருகிறார்கள். சிக்னலில் காத்திருக்கும் போது காற்றில் மிதந்து வரும் கரோக்கி இன்னி சையால் வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

    சிக்னல்களில் காத்தி ருக்கும் போது எரிச்சல் அடைபவர்கள் அதிகம் இதனால் அவர்கள் வாக னத்தில் வெறுப்புடன் காத்திருப்பார்கள். ஆனால் தற்போது சிக்னலில் காத்தி ருக்கும் போது இனிமையான இசை காதுகளில் தாலாட்டு வதால் எரிச்சல் அடை யாமல் காத்திருக்கின்றனர்.

    மேலும் இடையிடையே இரு சக்கர வாகனம் இருவர் செல்வதற்காக மட்டுமே படியில் பயணம் நொடியில் மரணம் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். ஹெல்மெட் அணிவது அவசியம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெறுகின்றன. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து சிக்னலில் அதிக நேரம் காத்திருக்கும் கோரிப்பாளையம், காள வாசல், ஆரப்பாளையம், தெற்குவாசல், பெரியார் நிலையம், கீழவாசல் சிக்னல்களில் காத்திருப்ப வர்கள் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதை பெரிதும் வரவேற்கின்றனர்.இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி கூறியதாவது:-

    சென்னை திருச்சி நகரங்களில் சிக்னல்களில் கரோக்கி இசையை ஒலி பரப்பும் நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் ஆகி யோரின் முயற்சியில் கடந்த 28-ந்தேதி முதல் மதுரையில் செயல்பட்டு வருகிறது.

    மதுரை மாநகரில் உள்ள 32 சிக்னல்களில் கரோக்கி இசை ஒலிபரப்பு செயல் பாட்டில் இருக்கிறது. போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் வழிகாட்டு தலில், போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின் மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வை யில் இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    சிக்னலில் வாகனங்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகளை அமைதியான மன நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. வாகன ஓட்டிகளும் இதனை வரவேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கு செய்யும் துரோகம்.
    • பசும்பொன் பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தின் ஐனநாய கத்தை நிலைநிறுத்திட எதிர் கட்சிகளின் இந்தியாக் கூட் டணி மக்களிடையே செல் வாக்கு பெற்று வருவதோடு நாளுக்கு நாள் வலிமையாக வருவதை சகித்துக் கொள்ள முடியாத மோடி அரசு மக்களை திசை திருப்பிடும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த போவதாக சொல்கிறது.

    மோடி அரசின் ஊழல் களை மறைப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளை மிரட்டு வதற்காகவும் ஒரே தேர்தல் என்ற போலி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது .இது ஆர்எஸ்எஸ்சின் 100ஆண்டு கனவு திட்டமாகும் இந்த கனவு நிச்சயமாக பலிக்கப் போவது இல்லை.

    இந்திய நாடு என்பது பல் வேறு ஒன்றியங்களின் கூட் டாச்சி என்ற தத்துவத்திற்கு இது வேட்டு வைப்பதாகும் இதனால் மாநிலங்களின் உரிமைகளை பறித்திடு வதற்கு வழிவகையாகும், ஐனநாயகத்தை சீர்குலைப் பதற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் ஐனநாயக கட்ட மைப்புக்களை சீர்குலைத் திடும் வகையில் நாட்டை சர்வதிகாரத்திற்கு அழைத்து செல்லும் வகையில் எதே சதிகாரமாக மோடி அரசின் ஒரே தேர்தல் செயல்பாடு அமைந்துள்ளது.

    ஆகவே 2024 நாடாளு மன்ற தேர்தலுடன் தமிழகத் திற்கும் தேர்தல் வந்து விடும் என்ற நட்பாசையில் அண்ணாவின் கொள்கை களை மறந்து திராவிட இயக்க சித்தாதங்களை துறந்து மாநில உரிமை களுக்கு வேட்டு வைக்கும் ஒரே தேர்தல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதும் பதவி பேரா சைக்காக என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதே திட்டத்தை எடப்பாடி பழனி சாமி முதலமைச்சராக இருந்த போது எதிர்த்தார். இப்போது ஆதரிப்பது பதவி பித்திற்கு என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக உணர்த்திவிட்டார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் மோடி அரசிற்கு சேவகம் செய்யும் அடிமைக ளாக செயல்பட்டவர்களுக்கு அண்ணாவின் மாநில உரிமைகள் பற்றி தெரிய நியாயம் இல்லை புரட்சித் தலைவரும், பரட்சித்தலைவி யும் மாநில உரிமைகளுக்காக போராடியதை மறந்து பழனிசாமியும், பன்னீர் செல்வமும் போட்டி போட்டு ஒரே தேர்தல் அறிவிப்பை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கும் தலைவர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    இந்தியாவில் இனிமேல் தேர்தலே இல்லை சர்வதி கார அதிபர் முறை வரும் என்று மோடி அறிவித்தாலும் அதையும் ஆதரிப்பவர்களாக இவர்கள் செயல்படுவதில் ஆச்சரியம் இல்லை.திராவிட இயக்க உயிர் மூச்சுக் கொள் கையான மாநில சுயாட்சி கொள்கையை டெல்லிக்கு காவு கொடுத்து விட்டு அண்ணா பெயரில் கட்சி நடத்துவது வெட்ககேடான செயலாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மதுரை தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.



    வீ.கே.குருசாமி-ராஜபாண்டி

    மதுரை

    பெங்களூருவில் கொலைவெறி தாக்குத–லுக்குள்ளான திமுக பிரமுகர் வி.கே.குரு சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி. இவருக் கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே கடந்த 23 ஆண்டுக ளாக தொடர்ந்து முன் விரோதம் இருந்து வருகிறது. இருதரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட நிலையில் வி.கே.குருசாமியும் அவரது மகன் மணியும் தலைமுறைவாக இருந்து வருகிறார்கள். வி.கே.குருசாமி மீது கொலை மற்றும் கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்கு விசாரணைக்காக அவ்வப் போது மதுரைக்கு வந்து கோர்ட்டில் ஆஜ ராகி விட்டு வெளியூர் செல்வதை வி.கே.குருசாமி வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு பெங்க ளூருவுக்கு சென்ற வி.கே.குருசாமி அங் குள்ள சுக்சாகர் பகுதியில் உள்ள ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த போது தமிழக பதிவு எண் கொண்ட காரில் வந்து இறங் கிய 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயு தங்க ளுடன் வி.கே.குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது.

    இதில் கழுத்து, தலை, மார்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் வி.கே.குருசாமி கீழே சாய்ந்தார். உடனடி யாக அவரை அங்குள்ளவர்கள் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வி.கே.குருசாமி அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பானசவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் மதுரை வந்துள்ள னர். மதுரை காமராஜர் புரம், வாழை தோப்பு, கீரை துறை ,கீழ் மதுரை ரயில் நிலைய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வி கே குருசாமியின் மீதான கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ராஜபாண்டியின் உறவினர்கள் குறித்தும், கமுதி பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை, ராம நாதபுரம் மாவட்டங்களில் பெரும் பரபரப் பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

    வி.கே.குருசாமி வெட்டப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதியில் பரவி வருவதால் பதட்டத்தை தணிக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.

    • சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரையில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு கோடையை மிஞ்சும் வகை யில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில் சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    ஆனால் அதே வேளை யில் மழைக்கு தாங்காத மாநகராட்சி சாலைகளால் மக்கள் மறுபுறம் கடும் அவ தியடைந்து வருகிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கார ணங்களுக்காக தோண்டப் பட்ட குழிகள் சிறிய குளம், குட்டைகளாக மாறியுள்ளன. குறிப்பாக பழங்காநத்தம், செல்லூர் உள்ளிட்ட பகுதிக ளில் பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.

    சேறும், சகதியுமான சாலை

    மதுரை மாநகராட்சி 27-வது வார்டு செல்லூர் 60 அடி சாலை மெயின் ரோட் டில் சேறும் சகதியாக வயல்வெளி போல் காட்சி அளிப்பதால் அந்த வழியாக நடந்து செல்வோர், வாக னங்களில் செல்வோர் சாக சம் செய்வது போல் கடக்க வேண்டியதுள்ளது. சீர மைப்பு மற்றும் மராமத்து பணிகள் மந்த நிலையில் நடப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ற னர்.

    இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் கூறுகை யில், செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும், சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரு கின்றனர். நடந்து செல் வோர், வாகனங்களில் செல் வோர் விழுந்து செல்கின்ற னர்.

    தினமும் ஆயிரக்கணக் கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில் உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்க ளில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடை பெறவில்லை. சம்பந்தழு ழுட்ட மாநகராட்சி அதிகாரி யிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்ப தில்லை.

    நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. 15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவ டையவில்லை. மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. மேலும் குப்பைத்தொட் டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவ தில்லை.

    எனது வார்டு அ.தி.மு.க. வார்டு என்பதால் மாநக ராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்க ணித்து வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக் கும்போது கழிவுநீர் உறிஞ் சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவ தில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீ பத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதி காரிகளுக்கு இதைச் சொல் லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய் களை பிடிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யவில்லை.

    இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளி யில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயப்படு கின்றனர். மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதி கள் இல்லாமல் உள்ளதால் குண்டும், குழியுமாக காணப் படுகிறது. மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிக மாகி வருகிறது.

    எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார்ச் சாலைகளை அமைப் பதற்கு மாநகராட்சி அதிகா ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக் களை திரட்டி சாலை மறிய லில் ஈடுபட போகிறேன் என்றார்.

    • சத்குரு பிறந்த நாளையொட்டி 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சத்குரு பிறந்த நாளையொட்டி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷாவால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 132 விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது. நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையிலும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் கடந்த 2020 ஆண்டில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2 லட்சத்திற்கும் அதிகமமான மரங்கள் நடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 34 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே உள்ள பூசலபுரம் கிராத்தில் ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன், கிராம அலுவலர் ஜெயராணி ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
    • திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை கிராமத்தில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குருஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த கோவிலில் இருநது திருடி செல்லப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளுக்கு யாக பூஜை நடந்தது.

    இதைத் தொடர்ந்து சித்திர ரத வல்லப பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள மண்ட பத்தில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக செயல் அலுவலர் பாலமுருகன், உபயதாரர்கள் முன்னிலையில் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நடந்தது.

    மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கோவில் ஆய்வாளர் ஜெயலட்சுமி, திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சரி வர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை- திண்டுக்கல் சாலையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், மதுரை மாநக ராட்சி குடிநீர் தேவைக்காக பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்களும் சேதமடைகிறது.

    ஊராட்சி மன்ற நிர்வா கம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவைகள் சரி வர சீரமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படு கிறது. இதனால் கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடையாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே சேதமைடைந்த குழாய்கள் சீரமைத்து தர வேண்டும் என்றனர். இதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் செய லாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் சோனை, வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ்கண்ணா, மகளிரணி மாவட்ட செய லாளர் வக்கீல்லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்குபின் முன்னாள் ஜனா திபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள் அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றிவிட்டால் அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியாவில் உள்ளஅனைத்து மாநிலங்க ளுக்கும் செல்லும் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியாதா, அவர் அறியாமையில் புலம் புகிறார்.

    முதல்வராக இருந்தும் கூட இது தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்த வந்தவர் மாலையும், கழுத்துமாக காத்திருக்கும் வேளையிலே மணமக்களை வாழ்த் தாமல் ஆட்சி பறிபோகி விடுமோ என்ற பயத்தில் தனது கவலையை பகிர்ந்து கொண்டார். ஆட்சி அதிகா ரம் போய்விட்டால் என்ன செய்வது என்று கவலை யோடு பேசியிருக்கிறார்.

    எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகி றதோ, அப்போதெல் லாம் அவர்கள் ஆட்சி அற்ப ஆயு ளில் கவிழ்ந்துவிடும் என் பதுதான் கடந்த கால வரலாறு. அது கருணாநிதி காலத்திலிருந்து தொடர்கிறது. அது தற்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்திட்டங் களை அரசியல் காழ்ப்பு–ணர்ச்சி காரணமாக தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப் பட்டுள்ளது.

    சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். என்று ஐக்கிய நாட்டு சபையில் சொல்வார்கள். தி.மு.க. இன்று காலை உணவுத்திட்டம் கொண்டு வருவதில் எந்தவித ஆட்சேப னையும் இல்லை. மாண வர்கள் பயனடைகிறார்கள் என்றால் அதை வரவேற் போம். ஆனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் சத்துணவு 1 முதல் 10-ம் வகுப்பு வரை கொடுக் கப்படுகிறது.

    இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை காலை உணவு யார் கொடுப்பார் கள்? எதற்கு இந்த வேறு பாடு. காலை உணவு திட் டத்தை அமுல்படுத்தும் போது ஒரே மாதிரியாக அமுல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டம் நிறுத்தப் பட்டு விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. காரணம் சத்துணவுதிட்ட போர்டுகள் அகற்றப்பட்டு விட்டது.

    எம்.ஜி.ஆர். பெயரை தாங்கிய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு காலை உண வுத்திட்ட பெயர்பலகை வைப்பதனால் எம்.ஜி.ஆர். புகழை எந்த காலத்திலும் யாராலும் அழிக்கமுடியாது. அது இதயத்தில் ஊறிப்போய் உள்ளது, ரத்தத்தில் கலந்து போய் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, வார்டு கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர் ணம், கீதா, 18 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலர் மாலையிலும் 'மதுரையினா பாசம், இனிமேல் இந்த உறவை ஊரே பேசும்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.
    • நண்பர் இல்ல காதணி விழாவை உலகறிய செய்தமைக்காக தம்பதியினர் கண்ணீர் மல்க தங்களது நன்றியை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், செய்முறைகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருவது எந்திரத்தனமான இந்த டிஜிட்டல் உலகையும் வியக்க வைக்கும் அளவிற்கும் அமைந்துள்ளது. காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்காங்கே நடந்து வரும் நிகழ்ச்சிகளே இதற்கு சான்று. அந்த வகையில் தான் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் நட்பே சிறந்தது என்பதை வாடிப்பட்டி அருகே நடந்த காதணி விழா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

    இங்கு எந்த ஒரு இல்ல விழாவாக இருந்தாலும், அதனை தனித்துவத்தோடு நடத்துவது மண்ணின் பாரம்பரிய வழக்கம். அதிலும் குறிப்பாக தாய்மாமன் சீர்வரிசை செய்வதில் போட்டியே நடக்கும். அந்த வகையில் தாய் மாமன் சீர்வரிசைக்கு போட்டியாக நண்பர்கள் சீர்வரிசை செய்து அசத்திய நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்-லதா தம்பதியினர். இவர்களது மகன், மகள் இருவருக்கும் காதணி விழா வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் பல்வேறு சீர்வரிசை செய்தனர்.

    ஆனால் அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் பாலகிருஷ்ணனின் நண்பர்களான கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வ பாண்டி, அபுதாஹிர், மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட ஏழுபேரும் சேர்ந்து பாலகிருஷ்ணனின் குழந்தைகளுக்கு தாங்களும் தாய்மாமன்கள் தான் என நிரூபிக்கும் வகையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    மேலும் பொய்க்கால் குதிரை, ஆட்டம் பாட்டம், மேளதாளத்துடன் தாய்மாமன் சீர்வரிசை செய்வது போல் அந்த பொருட்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தவர்கள் நண்பன் குடும்பத்தினருக்கு ராட்சத மாலையுடன், தம்பதிக்கு 500 ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட பண மாலையையும் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஜல்லிக்கட்டு காளையையும் சீர்வரிசையாக வழங்கி மிரள வைத்தனர்.

    அப்போது விசேஷ வீட்டார் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மேலும் ஆட்டம் பாட்டம் என காதணி விழாவையே குதூகலப்படுத்திய நண்பர்களின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அந்த மலர் மாலையிலும் 'மதுரையினா பாசம், இனிமேல் இந்த உறவை ஊரே பேசும்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.

    விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 150 கிலோ மட்டன், சிக்கன் கறி விருந்தும் அளிக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. உறவுக்காரர்கள் கூட ஒதுங்கி செல்லும் சூழலில் நண்பர் இல்ல காதணி விழாவை உலகறிய செய்தமைக்காக தம்பதியினர் கண்ணீர் மல்க தங்களது நன்றியை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.

    • பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா நடந்தது.
    • திறன் மேம்பாட்டு சாதனைத்தை தளபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கினார்.

    மதுரை

    மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் சார்பாக ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி திறன் மேம்பாட்டு சாதனத்தை திறந்து வைத்தார். இந்த திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் ஓட்டுநர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் அல்போன்ஸ், இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுவதா? என்று உதயநிதி பேச்சுக்கு, உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • இந்து மதத்தின் கொள்கைகளையும், அந்த வழிபாட்டு முறைகளையும் எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் கிடையாது என்றார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது எது என்பது குறித்து ஜனநாய கத்தை குழிதோண்டி புதைக் கக் கூடிய வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு நாட்டிலே வேற்றுமையை பற்றி பேசியிருக்கிற கருத்து மக்களிடத்திலே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

    அவர் கூறியிருக்கிற கருத்துக்கள் ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடு முழுவதும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவருக்கு ஒரு கருத்திலே, ஒரு மரபிலே ஒரு பழக்க வழக்கத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அதை நான் ஒழித்து கட்டுவேன் என்று ஆணவத்தோடும், அகங்காரத் தோடும் பேசுவது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இருக்காது.

    சனாதனத்தை ஒழித்து கட்டுவேன் என்கின்ற அந்த சொல் இன்றைக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற பாரம் பரியத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் நம்பிக்கை வைத்திருக் கிற மக்களுக்கு வேதனையாக இருக்கிறது.

    இன்றைக்கு இந்து மதத்தின் அந்த மரபுகளையும், அந்த லட்சியங்களையும், அந்த கொள்கைகளையும், அந்த வழிபாட்டு முறைகளை யும் எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் கிடையாது.

    இந்த உலகத்தில் எல்லோ ரும் எல்லாம் தெரிந்தவர்கள் உண்டா? நீங்கள் சனாதனத்தை பற்றி பேசி இருக்கிறீர் களே அதை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்தது உண்டா? அவ்வையார் சொன்னது போல கற்றது கையளவு கல்லாது உலக ளவு.

    உங்களை நீங்கள் தலைவராக நிலை நிறுத்திக்கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற அதனுடைய முயற்சியாக தான் இந்த உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது.

    நீங்கள் சொல்லிய அந்த சொல் உங்களுடைய தகுதியை இன்றைக்கு உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டு கிறது. ஆகவே சமூக நீதிக்கும், சமதர்மத்திற்கும் எதிரானது என்று சொல்லுகிற அந்த நம்பிக்கையை காலம், கால மாக கடை பிடித்து வருகிற அந்த நம்பிக்கையை, அதை கடைபிடித்து வருகிற அந்த மக்களின் நம்பிக்கையை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசி அதை ஒழிப்போம் என்று சொல்வது அந்த நம்பிக்கையை ஒழிக்க போகிறீர்களா? அல்லது அதை கடைபிடிப்பவர்களை ஒழிக்க போகிறீர்களா? என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஆகவே நாட்டிலே வெறுப்புணர்வை தூண்டுகிற வகையில் உங்கள் பேச்சு அமையுமானால்,அதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் பேச்சையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மதுரையில் போலீஸ் நிலையம் அருகில் என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் உள்ள என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் ரோட்டில் சென்றபோது அந்தப்பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை விற்ற பணம் ரூ.17 ஆயிரமும் கைப்பற்றப் பட்டது.

    இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்ததாக சிம்மக்கல்லை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது52) என்பவரை கைது செய்தனர்.

    இவரிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. எங்கிருந்து புகை யிலை பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது? இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாநகரில் சமூக விரோதிகள் கஞ்சா, புகை யிலை பாக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து விற்பனை நடக்கிறது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    ×