என் மலர்
மதுரை
- வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குதிரை சாரிகுளம் பகுதியில் உள்ள ஜெயண்ட் விலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 54). இவர் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதம் தொழில் நிமித்தம் காரணமாக திருப்பூர் சென்று விட்டார். மனைவி தனலட்சுமி, மகன் கீர்த்தி வாசனுடன் சென்னையில் சித்தா படிக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு அங்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று அங்கிருந்த பீரோவையும், மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மறுநாள் காலை வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அக்கம்பக்கத்தினர் வேலாயுதத்திற்கு தகவல் கொடுத்தனர். வேலாயுதம் வந்து பார்த்தபோது தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் அரங்கேறி வருவதால் போலீசார் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தி.மு.க. ஏன் திரவுபதி முர்முக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை
- நீங்கள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள்.
சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில், இவருக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருவதோடு, இவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது தான் சனாதன தர்மத்திற்கு சமீபத்திய உதாரணம்," என்று தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு பதில் அளித்த பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, தி.மு.க. ஏன் திரவுபதி முர்முக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
"பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? நீங்கள் திரவுபதி முர்முவுக்கு எதிராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள், அவர் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? இந்த நாட்டின் குடிமக்களாக நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், அதுதான் சனாதன தர்மம், நீங்கள் ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை," என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
"சனாதன தர்மத்தை நம்பும் நாங்கள், எல்லோரும் சமம் என்று நினைப்பதால் தான் நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எங்களிடம் இருந்து சனாதன தர்மத்தை கற்றுக் கொள்ளுங்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- மாணிக்கத்தை கைது செய்து மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
- முறையான ஆவணங்கள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர்.
மதுரை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானே மாவட்டம் வெர்சோவா பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
அங்கு இட்லி கடை வைத்து தொழில் செய்து வரும் இவரது கடையில் உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாழவந்தான் புரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் மாணிக்கம் (வயது 30) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 6-ந்தேதி பாக்கியராஜின் மகள் வீரலட்சுமி (16) பள்ளிக்குச் சென்றிருந்தார். அவரை யாருக்கும் தெரியாமல் மாணிக்கம் மதுரைக்கு அழைத்து வந்து விட்டார். பல்வேறு இடங்களில் பாக்கியராஜ் தனது மகளைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் அதே நேரத்தில் மாணிக்கமும் மாயமாகி இருந்தததால் சந்தேகத்தின் பேரில் தானே வெர்சோவா காவல் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாழவந்தான் கிராமத்தில் பதுங்கியிருந்த மாணிக்கம் மற்றும் வீரலட்சுமி ஆகியோரை கண்டுபிடித்தனர்.
மாணிக்கத்தை கைது செய்து மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் முறையான ஆவணங்கள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாரியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாணிக்கம் கைது செய்யப்பட்டதற்கான சான்று மற்றும் பாக்கியராஜ் அளித்த புகார் மனு ஆகியவை கொண்டு அனுமதி வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிறுமியை கடத்தி தப்பி வந்த மாணிக்கத்தால் மதுரை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் அனுமதி சான்று அளித்தவுடன் மும்பை போலீசார் பாக்யராஜ், வீரலட்சுமி மற்றும் சிறுமியை கடத்திய குற்றவாளி மாணிக்கம் ஆகியோர் மும்பைக்கு விமான மூலம் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் பேட்டிளித்தார்.
- இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.
மதுரை
பி.கே.மூக்கையா தேவரின் நினைவு நாளை யொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந் திருக்கும் அவரின் நினை விடத்தில், அ.தி.மு.க. சார் பில் மரியாதை செலுத்தப் பட்டது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற் பாட்டில் முன்னாள் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவா சன்,செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், மதுரை புற நகர் கிழக்கு மாவட்ட செய லாளர் ராஜன் செல்லப்பா, ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னர்.
இந்த நிகழ்ச்சியில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ராமகிருஷ்ணன், சிவசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாகி கள் தமிழ்ச்செல்வன், திருப் பதி, மதுரை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திண்டுக்கல் சீனி வாசன் கூறியதாவது:-
மூன்று கல்லூரியை உருவாக்கித் தந்த கல்வித் தந்தை, நாடாளுமன்ற உறுப் பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு சேவை செய்த பி.கே. முக்கையா தேவரின் 44-வது குருபூஜை முன்னி ட்டு கட்சி பொதுச் செயலா ளர், எடப்பாடி பழனிசாமி யின் ஆணைக்கிணங்க, மூக்கையா தேவரின் நினை விடத்தில் அஞ்சலி செலுத் தப்பட்டது.
உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவர் சிலை அமைக்க, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனி சாமி சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.
மேலும் பெருங்காம நல்லூரில் கை ரேகைச் சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த, 16 தியாகிகளின் நூற் றாண்டு நாளை முன்னிட்டு, ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் நினைவு மண்டபத்தை உரு வாக்கி தந்தார்.
புரட்சித்தலைவர் வழியி லும், புரட்சி தலைவிஅம்மா வழியிலும் எடப்பாடி பழனி சாமி பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி னார்.
இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.தி.மு.க. வை சேர்ந்த டி.ஆர். பாலுவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கு கூட எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- மேலூர் கட்டச்சோலை பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
- கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.
மேலூர்
மேலூர் தாலுகா வெள்ள லூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.
கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழி பட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.
இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப் பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது.
- மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும்.
மதுரை:
மதுரை ஆதீனம் சார்பாக அதன் மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில் ஆதீனத்தின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.
மேலும் ஆனி மாத உற்சவத்தின் 6 ஆம் நாள் மண்டகப்படியில் இந்த மண்டபத்தில் இருந்துதான் சுவாமி, அம்மன் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அப்போது திருஞான சம்பந்தர் மதுரையில் நடத்திய அதிசயம் குறித்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வரலாறு கூறப்படும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
291-வது ஆதீனம் இருக்கும் வரை இவை அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால், 292-வது அருணகிரி நாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. இந்த கால கட்டத்தில் இந்த இடம் எந்த நிகழ்வு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இடமாக இந்த மண்டபம் மாற்றபட்டுள்ளது.
தற்போது 293-வது மதுரை ஆதீனம் பொறுப்பேற்று இருக்கும் ஞானசம்பந்த தேசிகர் மேற்படி தேவார பாடசாலை, 6-ம் மண்டகப்படியை மேற்படி மண்டபத்தில் மீண்டும் நடத்த ஏதுவாக தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் சார்பாக ஆஜரான வக்கீல், இந்த மண்டபத்தில் மனுதாரர் கூறுவது போல எவ்வித தேவார வகுப்பும் நடைபெறவில்லை. எனவே தற்போது பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதம் செய்து வருவதாக தெரிவித்தார்.
மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்த மண்டபத்தில் 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் கோவில் வரலாறு, மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் திருஞான சம்பந்த மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகள் இருந்தது என்பதற்கான அனைத்தும் ஆவணங்கள் அறிக்கையாக தாக்கல் செய்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் முக்கியமானவர் என்றும், இக்கால கட்டத்தில் அனைவரும் தேவாரம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோவில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு 4 மாதத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த இடத்தை மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும். வழக்கம் போல மாசி திருவிழாவின் 6-ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் 6 நாள் சித்த மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
- (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் சித்த மருத் துவர்களுக்கான தோல் நோய்கள் மற்றும் அழகு சிகிச்சைக்கான ஆறு நாட் கள் தொடர் மருத்துவ கருத் தரங்கு நடைபெற்று வருகி–றது. இந்த நிகழ்ச்சியை பூவந்தி அரசு ஆரம்ப சுகா தார நிலைய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை டாக்டர். வெங்கடேஷ் வரவேற்றார். இதில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன், விருதுநகர் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சங்குமணி, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர். மீனா, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்கு னர் டாக்டர். மீனாகுமாரி, துச்சேரி மண்டல சித்த ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். சத்யரா ஜேஸ்வரன், டாக்டர். ஜெய வெங்கடேஷ்,
கோகிலா சித்த மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர். பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வரையும் அருப்புக்கோட்டை சித்த மருத்துவமனை மருத்து வர் மணிகண்டன் வாழ்த்தி பேசினார். முடிவில் கோகிலா சித்த மருத்துவ மனை உயர் நிர்வாக அலுவ லர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.
- மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
- பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பதி னேழு ஆண்டுகள் கல்வி பணியிலிருந்து பதினெட்டா வது ஆண்டில் கல்வி சேவையாற்றும் செயலாள ருக்கு பாராட்டு விழா, ஆசி ரியர் தின விழா மற்றும் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப் பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரி முதல் வர் அ.ராமசுப்பையா வர வேற்புரை யாற்றினார். கல்லூரி தலைவர் சு.ராஜ கோபால் தலைமை தாங்கி னார். கல்லூரியின் துணைத் தலைவர் ரா.ஜெயராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் உதவிச் செய லாளர் க.ராஜேந்திர பாபு மற்றும் கல்லூரியின் பொரு ளாளர் ஆ.ஆழ்வார்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் பாராட்டு விழாவை ஏற்றுக்கொண்டு, ஏற்புரையுடன் கூடிய வாழ்த்துரையை கல்லூரி செயலாளர் மூ.விஜயரா கவன் வழங்கினார். விழா வின் சிறப்பு விருந்தினராக மதுரை தமிழ் இலக்கிய மன் றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து சிறந்த ஆசிரியர்கள், சிறந்த துறை, சிறந்த சமூக சேவகர், சிறந்த ஆய்வுக்கட்டுரை யாளர், சிறந்த ஆய்விதழ் கட்டுரையாளர் என தனித்த னியாக பல்வேறு விருதுகள் பேராசிரியர்களுக்கு வழங் கப்பட்டது. நிறைவாக சுய நிதி பிரிவு இயக்குனர் ச.பிரபு நன்றி கூறினார்.
விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் செ.செந்தில் குமார் தொகுத்து வழங்கி னார். விழாவிற்கான ஏற்பா–டுகளை கல்லூரி முதல்வர் அ.ராமசுப்பையா சிறப்பாக செய்திருந்தார். இதில் திர ளானோர் கலந்து கொண்ட னர்.
- மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாநகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- பாதாள சாக்கடை திட்டப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மதுரை, நெல்லை, தூத்துக் குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகள். நகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டப் பணிகள், அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள், விரிவாக் கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.
மேலும் நெல்லை, நாகர் கோவில், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் குடிநீர் விநியோக பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.
முன்னதாக அவனியா புரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஐராவத நல்லூர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பெரியார் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையாளர்கள் பிரவீன்குமார், (மதுரை), சிவகிருஷ்ணமூர்த்தி, (நெல்லை), ஆனந்தமோகன், (நாகர்கோவில்) தினேஷ் குமார், (தூத்துக்குடி) நக ராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் முஜிபூர் ரகுமான், விஜயலட்சுமி, மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- இந்த தகவலை செயற்பொ றியாளர் வெங்க டேஸ்வரன் தெரி வித்துள்ளார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி மின்கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
நாகமலை புதுக்கோ ட்டை, என்.ஜி.ஓ. காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேல குயில்குடி, கீழமாத்தூர், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூர், கரடிபட்டி, ஆலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். இந்த தகவலை செயற்பொ றியாளர் வெங்க டேஸ்வரன் தெரி வித்துள்ளார்.
- வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- கிராம பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.
அலங்காநல்லூர்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 152-வது பிறந்தநாளை யொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சோழவந் தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அனைவித்து மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர் தன் ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், அவைத் தலைவர் நடராஜன், நகர செயலாளர் ரகுபதி, பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமி நாதன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், அணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு, ராகுல், சதிஷ், உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அனைத்து மரியாதை செலுத்தினர்.
ஊராட்சி மன்ற தலைவர் தீபா நந்தினி மயில்வீரன், பெரியஊர்சேரி செந்தில் குமார், கவுன்சிலர் ரேவதி, சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி செயலா ளர் சக்கரபாணி தலைமை யில் தொகுதி தலைவர் சங் கிலி முருகன் மற்றும் நிர் வாகிகள் மாலை அணி வித்தனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி, மண்டல் தலைவர் தங்கதுரை, பொதுசெய லாளர்கள் செல்லப்பாண்டி, முத்துக்குமரன், ஒன்றிய பொருளாளர் மறவபட்டி மாரிச்செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) சார்பில் மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சேது சீனிவாசன், முத்து கிருஷ்ணன் மற்றும் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் சார்பில் வட்டாரத் தலைவர் கள் சுப்பாராயலூ, காந்திஜி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, மனித உரிமை மாவட்ட தலைவர் முத்து, பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செய்தனர். முக் குலத்தோர் சமுதாயம் சார்பில் எஸ்.டி.எம் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செய்தனர். முன்னதாக விழா குழுவி னர்கள் சதீஷ், கார்த்திக், முத்துராஜா, மற்றும் பிள்ளைமார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பாலா பிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து கிராம பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதான மும் நடைபெற்றது.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சிலைகள் கரைக்கும் இடங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
- கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூ–ழல் பாதுகாப்பில் மக்களா–கிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி–நீர் ஆதாரத்தை தருகி–றது.
நீர் நிலைகளை பாதுகாக் கும் வகையில் வருகிற விநா–யகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநா–யகர் சிலைகளை நீர் நிலைக–ளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங் க–ளில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாது–காக்க ஒத்துழைப்பு வழங்கு–மாறு கேட்டுக்கொள் கிறேன்.
எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட் டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற துமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட் களால் மட்டுமே செய்யப் பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங் கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப் படலாம். மேலும், சிலை களை பளபளப்பாக மாற்று வதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர் மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக் கோல் போன்ற சுற்றுச்சூழ லுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல் கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்ப டுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப் படையாக கொண்ட வண் ணப்பூச்சுகளை பயன்ப–டுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மட்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங் களை மட்டுமே பயன்ப டுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட் கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட் டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலை களை மாவட்ட நிர்வாகத்தி னால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக ளின்படி கரைக்க அனு மதிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கீழ்வரும் நீர் நிலைகளில் கரைக்கலாம்.
மதுரை வைகை, கீழ் தோப்பு, ஒத்தக்கடை குளம், வாடிப்பட்டி, குமாரம் கண்மாய், மேலக்கால், அய்ய னார் கோவில் ஊரணி, குண்டாறு, மறவன்குளம் கண்மாய், மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், தேவன் குறிச்சி கண்மாய், மண்கட்டி தெப்பக்குளம், வைகை தைக்கால் பாலம், திருப்ப–ரங்குன்றம் செவந்திக்குளம் கண்மாய், அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண் மாய், திருமங்கலம் சிவரக் கோட்டை கமண்டலநதி, மேலூர் கொட்டாம்பட்டி சிவன் கோவில் தெப்பம் ஆகிய இடங்களில் கரைக்க–லாம்.
விநாயகர் சதுர்த்தி விழா வினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா–டும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ள ப்படுகி–றார்கள். மேலும் விபரங்க–ளுக்கு மாவட்ட கலெக்டர், மதுரை காவல் துறை கண் காணிப்பாளர், மதுரை மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






