என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி விளையாட்டு விழா
- பள்ளி விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள் வழங்கி னார்.
மதுரை
மதுரை தல்லாகுளம் ஒய்.டபிள்யூ.சி.ஏ. பள்ளியின் 56-வது விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.
பள்ளி தாளாளர் நிர்மலா சந்தோஷம், முதல்வர் மரகதம் ஜெயசீலி ஆகியோர் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டு தல், கோகோ போன்ற பல்வேறு விளையாட்டு களில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள் வழங்கினார்.
Next Story