அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள்

அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள்
Published on

மதுரை

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக திடீர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் மாநிறம், பிஸ்கட் கலர் கருப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும் வெள்ளை கலர் வேஷ்டியும் அணிந்திருந்தார்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் மதுரை வடக்காவணி மூலவீதி பகுதியில் உடல் நலம் சரியில்லாமல் படுத்து கிடந்த வரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்தவர் பெயர் வெங்கட்ராமன் (வயது 75), இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து திலதர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல் மதுரை செனாய் நகர் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக மதிச்சியம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் ரோஸ் கலர் அரக்கை சட்டையும், ப்ளூ கருப்பு கலர் கட்டப்பட்ட கைலியும் அணிந்திருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com