என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடித்துவிட்டு புது உச்சிமேடு கிராமத்திற்கு தனியார் பஸ்ஸில் வந்தார்
    • அதே பஸ்ஸில் வந்த தங்கதுரை (வயது 24) என்பவர் தனியார் பஸ் டிரைவரை திட்டியதாகவும், தொடர்ந்து பஸ்சில் வந்த மாணவிலை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடித்துவிட்டு புது உச்சிமேடு கிராமத்திற்கு தனியார் பஸ்ஸில் வந்தார். அப்போது அதே பஸ்ஸில் வந்த புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 24) என்பவர் தனியார் பஸ் டிரைவரை திட்டியதாகவும், தொடர்ந்து பஸ்சில் வந்த மாணவிலை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.,இதனால் மனமுடைந்த மாணவி எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

    இதனை அறிந்த பெற்றோர் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கதுரையை கைது செய்தனர்.

    • அரகண்டநல்லூர் அருகே கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் பில்ராம் பட்டு அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங் களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் விற்பனையை தொடங்கும் முன்னரே அருகிலுள்ள தனியார் பார்களில் புதுச்சேரி, கர்நாடக மாநி லத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை நடப்பதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலி வரதன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடிய பின்னரும் கள்ள மார்க்கெட்டில் மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பில்ராம்பட்டு, அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையின் அருகில் உள்ள பார்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் மதுபான கடைகளில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து அதனை சில்லறை விற்பனை செய்து வந்த வடகரை தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த வல்லாளன் மகன் இன்பராஜ் (வயது 38), எஸ்.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் பிரபு (43). அரகண்டநல்லூர் பன்னீர்செல்வம் மகன் வினோத் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே விபத்தில் பெண் பலியானார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தொப்பை மனைவி ஜெயக்கொடி (வயது40). சம்பவத்தன்று ஜெயக்கொடி உட்பட அதே ஊரை சேர்ந்த 10 பேர் கொசப்பாடி கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் களை வெட்டுவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்கொடியை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்ணர். ஆனால் ஜெயக்கொடி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது
    • தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது.  இதனை தடுக்கும் விதமாக சின்ன சேலம் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், அம்சாகுளம், நயினார் பாளையம் செல்லும்ரெயி ல்வே கேட் சாலை, கூகையூர் ரோடு, மூங்கில் பாடி சாலை போன்ற முக்கிய இடங்களில் 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் நடந்த குற்றத்தடுப்பு கண்காணிப்பு கேமரா தொடக்க விழாவில் டி.எஸ்.பி. மோகன் ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. தொழில் செய்பவர்கள் அவர்களுடைய சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. பொருத்த வேண்டும் வே என்றார்.. நிகழ்ச்சியில் கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன், தனிப்பிரிவு காவலர் கணேசன், ராகவேந்திரா நிதி நிறுவன இயக்குனர் ஏ.டி.ஆறுமுகம் மற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    • 5 பேரை கைது செய்து அவர்கிளிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி(43), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள்(38), அரசம்பட்டை சேர்ந்த ரமேஷ்(43) ஆகியோர் வீட்டின் அருகே சாராயம் விற்றதாக 3 பேரையும் காவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 310 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மேல் சிறுவள்ளூர் (சாத்தனூர்) வலதுபுற கால்வாய் பகுதியில் ரோந்து பணயில் ஈடுபட்டனர். அப்போதும் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூங்கான்(51) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • குபேந்திரன் (வயது 30) விவசாயி. இவருக்கும் பிரபு என்ப வருக்கும் நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
    • இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 30) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் பிரபு என்ப வருக்கும் நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.   ,இந்த நிலையில் குபேந் திரன் மற்றொரு விவசாயி யான வெங்கடேசன் கிணற்றி லிருந்து தண்ணீர் இறைப்ப தற்கான ஏற்பாடு களை செய்தார். அப்போது, அங்கு வந்த காசிலிங்கம் தரப்பினருக்கும், குபேந்தி ரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இது தொடர்பாக குபேந்திரன் அளித்த புகாரின் பேரில், காசிலிங்கம் மகன்கள் பிரபு (28), சங்கர்(33), இளவரசன், பாவாடை மகன் ஜெயபால் ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதே போல் இளவரசன் அளித்த புகாரின் பேரில் தாண்ட வன், அவரது மகன்கள் சிவக்குமார், குபேந்திரன், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
    • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

    இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளை (52) என்பவருக்கு சொந்தமான 1.68 சென்ட் நிலத்தை 54 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்தார்.
    • பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாபிள்ளை (வயது 41). பழனியாபிள்ளை ,வாசுதேவன் பிள்ளைக்கு சொந்தமான வீட்டின் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாபிள்ளை (வயது 41). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளை (52) என்பவருக்கு சொந்தமான 1.68 சென்ட் நிலத்தை 54 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்தார். இதற்காக பழனியாபிள்ளை தன்னுடைய வீட்டையும், பூர்வீக நிலத்தையும் விற்று தவணை முறையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பணத்தை வாசுதேவன் பிள்ளையிடம் கொடுத்துள்ளார்  நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி கடந்த 2 வருடமாக வாசுதேவன் பிள்ளை காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியா பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று காலை பெத்தானூரில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளைக்கு சொந்தமான வீட்டின் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவலின் பெயரில் சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து பழனியா பிள்ளை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்றஇரவு2 அரசு பஸ்கள் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார்.
    • அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு அரசு பஸ்சும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக ஒரு பஸ்சும் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்

    . விசாரணையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், மது போதையில் பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.   அரசு பஸ்சின் கண்ணா டியை உடைத்ததால் அதில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது இதில் பணிபுரிந்த 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்தனர் என கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். .
    • இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ், மூக்கனூர் கிராமம் ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோர் மக்கள் தொடர்பு பணியாளர்களாகவும், மரூர் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி மகன் அய்யப்பன் உதவி மேலாளராகவும் பணிபுரிந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்துவிட்டதாக கூறி, கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் தணிக்கை செய்த போது மேற்கூறிய 3 பேரும் உறுப்பினர்களிடம் இருந்து தனிதனியாக பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. மொத்தம் 67 உறுப்பினரிடமிருந்து 17 லட்சத்து 98 ஆயிரத்து 964 கையாடல் செய்துள்ளனர்.

    பணத்தை திரும்பி கேட்டும் அவர்கள் தரவில்லை என்று தொிவித்து இருந்தார். இது குறித்து சப்-இன்ஸ்நபெக்டர் நரசிம்ம ஜோதி வழக்கு பதிவு செய்தார். இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்சபெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி யன், செண்பகவல்லி, காவலர் உதயகுமார், வெங்கடேசன் குழுவினர் விசாரணை மேற்கொண்டு 3 பேரையும் தேடிவந்தனர். இதில், அய்யப்பனை சங்காரபுரம் தாலுகா அலுவலகம் எதிரே வைத்தும், தினேஷை சங்கராபுரம் நி பஸ் நிலையம் அருகில் வைத்தும் போலீசார் கைது செய்தனர். மேலும் மூக்கனூரை சேர்ந்த அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருக்கோவிலூர் பைபாஸ் சாலை அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • திருக்கோவிலூரில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி, நெடுமுடையான் கிராமத்தில் வீடு புகுந்து திருடிய சம்பவங்களில் ஈடுபட்டதை அறிவழகன் ஒப்புக்கொண்டார்.

    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் ஒரு பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி நடந்தது. அடுத்த நாள் திருக்கோவிலூர் அடுத்துள்ள நெடுமுடையான் கிராமத்தில் பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை, பணம் திருடிய சம்பவம் நடைபெற்றது.

    கொள்ளையர்களை பிடிக்க திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சதிஷ்குமார், ராஜசேகர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திருக்கோவிலூர் பைபாஸ் சாலை அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம் பட்டை சேர்ந்த அறிவழகன் (40) என்பது தெரியவந்தது.

    இவர் நெல்லிக்குப்பம் நகர பா.ஜனதா செயலாளராக இருந்து வருகிறார். திருக்கோவிலூரில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி, நெடுமுடையான் கிராமத்தில் வீடு புகுந்து திருடிய சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3½ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அறிவழகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டிந்தபோதுசாலையில் செயின் கிடப்பதை பார்த்தார்.சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதி செய்தார்.
    • தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார்.

    கள்ளக்குறிச்சி, மார்ச்.14-

    தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் கிராமத்தில் இருந்து ஆட்டோவில் உளுந்து விதை ஏற்றிக்கொண்டு தியாகதுருகத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்து தியாகதுருகம் நோக்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வந்த போது சாலையில் செயின் கிடப்பதை பார்த்தார். உடனே ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி செயினை எடுத்து பார்த்தபோது சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதிசெய்தார்.

    மேலும் அக்கம், பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்து பார்த்ததில் செயின் யாருடையது என தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சிங்காரவேல் செயினை தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார். செயினை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சிங்காரவேலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெகுவாக பாராட்டி சன்மானம் வழங்கினர். அப்போது தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் உடன் இருந்தார். மேலும் இந்த செயின் யாருடையது என்பது குறித்து தியாகதுருகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×