என் மலர்
கள்ளக்குறிச்சி
- அய்யப்பன் உள்பட 3 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
தியாகதுருகம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19).
இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கூத்தக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன்ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்சந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
- தற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
- தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்ப தற்காக சமீப காலங்க ளில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138-ன்படி மிகக் கடுமையான தண்ட னைக்குரிய குற்றமாகும்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரி க்கப்படு கிறார்கள். இந்த எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவு களுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும் மின்வாரிய மற்றும் வன அதிகாரி கள் ஆய்வு மேற்கொள்ளும் போது மின்வேலி அமைத்தி ருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் விஜய். விவசாயி. இவருக்கு சொந்தமாக மாடுகள் உள்ளது.அதனை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார். அதன்படி பசுமாடு ஒன்றை கட்டி வைத்து இருந்தார். அதனை அதெ பகுதியை சேர்ந்த பூமாலை (72), மடப்பட்டு நாகவள்ளி (47) செம்பானந்தல் அல்லி முத்து (57) ஆகியோர் திருடி சென்றனர்.இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து எைடக்கல் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் உளுந்தூர் பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கொலை செய்யப்பட்ட ஜெகன் ஸ்ரீ என்பவரது தாயார் செந்தமிழ் செல்வி கூத்தக்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார்.
- உடலை கைப்பற்றிய போலீசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் கல்லூரிக்கு செல்லவில்லை. இவர் 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெய்சங்கர் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (27) என்பவருக்கும் காணாமல் போன ஜெகன்ஸ்ரீ-க்கும் கடந்த கார்த்திகை தீபத்தன்று ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அய்யப்பனை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அய்யப்பன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், அபிலரசன் மற்றும் 17 வயதுடைய மைனர் சிறுவன் ஆகியோருடன் ஜெகன் ஸ்ரீ-யை அழைத்து சென்று மது அருந்தியதாகவும், அப்போது மதுபோதையில் அய்யப்பன் மற்றும் 3 பேருடன் சேர்ந்து ஜெகன் ஸ்ரீ என்பவரை மது பாட்டிலால் தாக்கி கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்யநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர். அங்கே ஜெகன் ஸ்ரீ உடல் இருந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து புதைத்த அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஜெகன் ஸ்ரீ என்பவரது தாயார் செந்தமிழ் செல்வி கூத்தக்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- ஜெய்சங்கர் மகன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- மது பாட்டிலால் தாக்கி கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்தது போலீசாருக்கு தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி, மார்ச்.26-
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் தொழு தூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் கல்லூரிக்கு செல்லவில்லை. இவர் 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெய்சங்கர் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (27) என்பவருக்கும் காணாமல் போன ஜெகன்ஸ்ரீ-க்கும் கடந்த கார்த்திகை தீபத்தன்று ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அய்யப்பனை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அய்யப்பன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், அபிலரசன் மற்றும் 17 வயதுடைய மைனர் சிறுவன் ஆகியோருடன் ஜெகன் ஸ்ரீ-யை அழைத்து சென்று மது அருந்தியதாகவும், அப்போது மது போதையில் அய்யப்பன் மற்றும் 3 பேருடன் சேர்ந்து ஜெகன் ஸ்ரீ என்பவரை மது பாட்டிலால் தாக்கி கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்யநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர். அங்கே ஜெகன் ஸ்ரீ உடல் இருந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து புதைத்த அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஜெகன் ஸ்ரீ என்பவரது தாயார் செந்தமிழ் செல்வி கூத்தக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார்.
- ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 50). இவர் வளர்க்கும் மாடு களுக்கு வைக்கோல் தேவைப்படு வதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார். இந்த ஈச்சர் வாகனத்தை தண்ட லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் பாண்டி யன்குப்பம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக் கொட்டாய் செல்லும் சாலையில் ஈச்சர் வாகனம் சென்று கொண்டிருந்த போது, மேலே சென்ற மின்சார கம்பி மீது எதிர் பாராத விதமாக வைக்கோல் உரசியது. இதில் திடீரென தீ பற்றி வைக்கோல் எரிந்தது.
இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்த னர். வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் என கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்த தால் ஈச்சர் வாகனம் அதிக சேதம் இல்லாமல் தப்பித்தது. இதில் வாக னத்தை ஓட்டி வந்த செல்வ ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் வெற்றிச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் (வயது 34). இவர் கல்வராயன் மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
தலைவாசலில் உள்ள நண்பனை சந்திக்க மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை சென்றார், அவரை பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வி.கூட்ரோடில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெற்றிச்செல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் வெற்றிச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சின்னசேலம் அருகே சாலை விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவர் கல்வராயன் மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளராக பணிபுரிந்து வந்தார். தலைவாசலில் உள்ள நண்பனை சந்திக்க மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை சென்றார், அவரை பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வி.கூட்ரோடில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வெற்றிச்செல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் வெற்றிச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
- பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் அசலன்(55) கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த புளியம் மரத்தில் புளியம்பழம் பறிக்க ஏறினார். அப்போது மரக்கிளை மீது நின்று கொண்டிருந்த அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்- இன்ஸ்ெபக்டர்லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரம்யா தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்
- சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார்
கள்ளக்குறிச்சி:
பெங்களூரில் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு ரம்யா (வயது 21)என்ற மகள் உள்ளார். இவர் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி சேலம் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. .27 -ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 21 -ந் தேதி கல்லூரிக்கு சென்ற ரம்யா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிந்த இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாயமான கல்லூரியின் மாணவி ரம்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தேவராஜ் மனைவி ராணி (வயது 55). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.
- தீயணைப்பு வீரர்களுடன் சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மனைவி ராணி (வயது 55). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட விவ சாயத் தொழிலாளர்கள் இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
கிணற்றில் மிதந்த ராணியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போனவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62)பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்துவருகிறார் .மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
- பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது.
கள்ளக்குறிச்சி:
கச்சிராயபாளையம் அருகே பரிகம் செக்போஸ்ட் அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62) வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும் செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் வெளிநாட்டிலும், மனைவி கள்ளக்குறிச்சியில் வசித்து வருகின்றனர். பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சிக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது. மேலும், வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த 4 சி.சி.டி.வி. கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சி.சி.டி.வி. விடியோக்களை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






