என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage is sure"

    • ரம்யா தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்
    • சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார்

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரில் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு ரம்யா (வயது 21)என்ற மகள் உள்ளார். இவர் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி சேலம் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. .27 -ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 21 -ந் தேதி கல்லூரிக்கு சென்ற ரம்யா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிந்த இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாயமான கல்லூரியின் மாணவி ரம்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×